விதியை மாற்றும் சாலைவிதி
தலைகவசம் அணியாதோர்
தாங்கலாய் தேடிக்கொள்ளும்
தலைவிதியே மரணம்
-----------
சாலைவிதியை மதிக்காமல்
செல்லுகின்ற அன்பர்களே
ஓலையின்றி தேடிவரும்
உத்தரவு மரணமே
--------
விதிமறந்து வேகமாய்
வீதியில் சென்றால்
மதிமயங்கும் இறுதியில்
மரணமே கொடுக்கும்
---------
துர்மரணத்தை தேடியே
தூங்கிக் கொண்டே
தூரமாய் வேகமாய்
வாகனம் செல்லும்
-----------
வீட்டிற்கு செல்லவே
வாகனம் வேண்டும்
விதிமாறி சுடுகாட்டிற்கு
ஓட்டிச் செல்லாதே
-----------
குடும்பத்தை நினைத்து
வாகனம் செலுத்து
கூடிய மட்டும்
வேகத்தைக் குறைத்து
---------
போதையில் வாகனம்
போய்சேரும் இடமோ
மருத்துவ மனை வளாகம்
-----------
விதியை வெல்ல
வேகமாய் ஓட்டும்
புரியாத நிமிடத்தில்
பேராபத்து காத்திருக்கும்
------------
இருசக்கர வாகனத்தை
முறுக்கினால் இன்பமாம்
இடையில் சறுக்கினால்
இறுதியில் துன்பமாம்
------------
விதியை மாற்றும்
வேதனையை சேர்க்கும்
மதிமயங்கி வேகமாய்
மரணத்தை தழுவும்
==========
தங்கள் சமூக சிந்தனையும்
ReplyDeleteஅதைக் கவிதையாய்ப் பதிந்த விதமும்
மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்
இன்றைய சமூதாயமே யோசிக்க மறுக்கும் யோசனைகளே கவிதையாய் வருகிறது வேதனையாய்.வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க சார்
Deleteவிதியை வெல்ல
ReplyDeleteவேகமாய் ஓட்டும்
புரியாத நிமிடத்தில்
பேராபத்து காத்திருக்கும்
தலைவிதியை மாற்றும் சாலை விதிகள்...
உண்மைதானுங்கம்மா வேகத்தால் விவேகம் மறக்கிறார்கள் இறுதியில் மடிகிறார்கள்.நன்றிங்கமா
Deleteநன்றிங்க சார்
ReplyDeleteசாலையை விதியை மீறுபவர்களால் அவர்களுக்கு மட்டுமல்ல விதிகளை கடைபிடிப்போருக்கும் பாதிப்பு ஏற்படுவதை அவர்கள் உணர வேண்டும்
ReplyDeleteநல்ல விழிப்புணர்வுக் கவிதை
உண்மைதான் நண்பரே.விதியை மதிக்காமல் விரைவில் செல்லுகிறார்கள்
Deleteவிதியை மாற்றும்
ReplyDeleteவேதனையை சேர்க்கும்
மதிமயங்கி வேகமாய்
மரணத்தை தழுவும்.
தெளிவாக சொன்னாலும் உணராத மக்கள். நல்ல பகிர்வு.
சரியாச்சொன்னீங்க என்னதான் அரசாங்கமும் அறிவுறித்தினாலும் ஜனங்கள் கேட்பதில்லை.நீங்க வந்ததுக்கும் ஆதரவு தந்தமைக்கும் நன்றிங்கம்மா
Deleteஅவரவர் உணர வேண்டிய வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
எல்லோருக்குமே பொறுப்பு உள்ளதை உணர்த்துவோம்.நன்றிங்க சார்
Deleteஉண்மைதான் அன்பரே!
ReplyDeleteநீங்க சொன்னதை யோசித்தேன் எழுதினேன்.வந்ததுக்கு நன்றிங்கயா
Deleteமிகமிக அருமை. நல்ல சமூக விழிப்புணர்வுக்கவிதைகள்.
ReplyDeleteநல்ல கருத்துகள்! வாழ்த்துக்கள்!
வீதிநெறிமுறை வீணென எண்ணிட்டால்
விதிதான் வாழ்க்கை வீதிக்குவந்துவிடும்...
த.ம.7.
அது மரணத்தில் தள்ளிவிடும்.உண்மைதான் இளமதி அவர்களே
Deleteஇருசக்கர வாகனத்தை
ReplyDeleteமுறுக்கினால் இன்பமாம்
இடையில் சறுக்கினால்
இறுதியில் துன்பமாம்//
வேகம் விவேகம் அல்ல . வேகத்தால் வரும் துன்பத்தையும் அழகாய் கவிதை ஆக்கி இருக்கிறீர்கள்.
சாலைவிதியை பாதுகாக்க சொல்லும் விழிப்புண்ர்வு கவிதைக்கு வாழ்த்துக்கள்.
நன்றிங்க தெரிந்ததைச் சொல்லுவோம் தெளிவாக சொல்லுவோம் பிடித்ததை பின்பற்றினால் பேரின்பம் இல்லையேல் வரும் துன்பம்
Deleteநல்ல அறிவுரைகள்!
ReplyDeleteஉண்மைதான் அய்யா.வருகைக்கு நன்றி
Deleteஅருமை.. கவிதை வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி..!!!
ReplyDeleteஎனது வலைப்பூவில் இன்றைய பதிவு ஸ்மார்ட் போன் பாதுகாப்பு
வந்தமைக்கும் கருத்துப் பகிர்ந்தமைக்கும் நன்றி
Deleteஅழகிய சமூக விழிப்புணர்வு !
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
தேவையான கருத்துரைகள் கவியாழி ஐயா.
ReplyDeleteஉண்மைதான் உங்க ஆதரவுக்கு நன்றிங்கம்மா
Deleteவேண்டிய அறிவுரைகள் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்கம்மா
Deleteputhia seithikalai puthumaiyana vadivil thandhu ennai putham puthu uruvedukka seithammaikku mikka nandri anna
ReplyDeleteநீங்களும் எழுதலாம் முயற்சி செய்தால்
Delete