தெய்வங்கள்

தெய்வங்கள்

நேர்மையே நிம்மதி

நேர்மையாய் வாழ்வதனால்
நிம்மதியேக் கெட்டிடாது
நெறிகெட்டு வாழ்வதாலே
நெடுந்துயரம் தவிர்த்திடாது

பாடுபட்டுச் சேர்த்தப் பொருள்
பயனின்றி வீண்ப்போகாது
பழிசொல்லால் உண்மை
பயங்கொண்டு ஓளிந்திடாது

கடின உழைப்புக்குப் பலன்
கண்டிப்பாய் மறைந்திடாது
கஷ்டப்பட்டு சேர்த்தப் பணம்
கடைசிவரைத் தீர்ந்திடாது

குறுக்கு வழியில் நடத்தும்
குடும்ப வாழ்க்கை இனித்திடாது
கூ ட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை
கடைசிவரைக் கைவிடாது

Comments

  1. Surukkamaaka ayinum manathukku mika nerukkamaana padaippu vaazhththukkal

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிகள்

      Delete
  2. சரியா சொன்னீங்க சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா ,நீங்க வந்ததுக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும்

      Delete
  3. தலைப்பும் தலைப்புக்கேற்ப வரிகளும் முடிவில் கூட்டுக்குடும்ப உறவை வலுப்படுத்தியதும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே கூட்டுக்குடும்பமே சிறந்தது

      Delete
  4. அருமை. நல்ல கருத்துக்கவிதை. வாழ்த்துக்கள்!

    நேர்மையான வாழ்வு என்றும்
    சீர்மை மிகத் தருமேயென
    தூய்மையான சொல்லெடுத்து
    வாய்மையினைச் சொன்னீர் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. உங்க கவிதையான கருத்துக்கு நன்றிங்க

      Delete
  5. இந்தக்காலத்தில் வேண்டிய கடைசி வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. குறுக்கு வழியில் நடத்தும்
    குடும்ப வாழ்க்கை இனித்திடாது//


    நல்ல சொல்லிட்டீங்க நல்ல கவிதை

    ReplyDelete
    Replies
    1. குறுக்குவழியால் எதுவுமே சரியாகிடாது

      Delete
  7. உண்மைதான் கண்ணதாசன்.நன்று!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார்.நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்

      Delete
  8. Replies
    1. வருகைக்கு நன்றிங்க சார்

      Delete
  9. இறுதி வரி நச்சென்று கவிதை அழகாய் இருக்கு.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க என் வலைபக்கதுக்கு வந்ததுக்கு நன்றி

      Delete

  10. உண்மைதான்! கவிதை நன்று!

    ReplyDelete
  11. கவியாழி அவர்களே,

    அருமையான கவிதை தந்துள்ளீர்கள். சகலாரதனையுடன் கூடிய சாம்போகித சித்திரமாக இருக்கிறது உங்கள் கவிதை.

    வாழ்க தமிழ்
    புகழேந்தி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  12. இன்‌றைய காலகட்டத்தில் அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டிய கருத்து. அருமை!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கணேஷ் .பாராட்டுக்கும் பகிர்வுக்கும் நன்றி

      Delete
  13. குறுக்கு வழியில் நடத்தும்
    குடும்ப வாழ்க்கை இனித்திடாது
    கூ ட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை
    கடைசிவரைக் கைவிடாது

    நல்ல சிந்தனை, அழகிய கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தொடர்ந்து வாங்க , கருத்துத் தாங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more