Showing posts with label கவிதை/சமூகம்/நகைச்சுவை. Show all posts
Showing posts with label கவிதை/சமூகம்/நகைச்சுவை. Show all posts

Saturday, 24 August 2013

என்னோடு புகைப்படமெடுக்க ஆர்வமா?


01.09.2013 ல் நடைபெறும் பதிவர் திருவிழாவை முன்னிட்டு


என்னோடு படமெடுக்க வாருங்கள்
எத்தனைபேர் ஆர்வமென கூறுங்கள்
கண்ணாக மணியாக காத்திடவே
கட்டணமும் ஏதுமில்லை அறியுங்கள்

பின்னாத வலையோடு ஆர்வமாய்
பின்னூட்டம் போடுகின்ற உங்களுக்கு
என்னாலே முடிந்தஉதவி எல்லோர்க்கும்
எண்ணற்ற வாழ்த்துக்களைச் சொல்லுகிறேன்

நண்பனாக ஏற்றுள்ள தங்களுக்கு
நட்புக்காக இதையுமே  செய்வதற்கு
பொன்னான நேரத்தை தந்திடுவேன்
புகழோடு நட்பையுமே போற்றிடுவேன்

கடைவீதி நண்பரிடம் செல்லாமல்
கருத்தாய்வு கூட்டங்களில் கலந்து
படைக்கூட்டம் எல்லோரும் அன்பாக
பகிர்ந்திடுங்கள்  அன்புடனே நன்றியுமே

முன்கூட்டி எல்லோரும் பதிவுசெய்து
முறையாக அனுமதியும் கிடைத்திடவே
குறையாத ஆர்வமுடன் வாருங்கள்
கொடுக்காமல் படம்பிடித்துச் செல்லுங்கள்



உடனே முன்பதிவு செய்யுங்கள் இச்சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே



---கவியாழி---