Saturday, 24 August 2013

என்னோடு புகைப்படமெடுக்க ஆர்வமா?


01.09.2013 ல் நடைபெறும் பதிவர் திருவிழாவை முன்னிட்டு


என்னோடு படமெடுக்க வாருங்கள்
எத்தனைபேர் ஆர்வமென கூறுங்கள்
கண்ணாக மணியாக காத்திடவே
கட்டணமும் ஏதுமில்லை அறியுங்கள்

பின்னாத வலையோடு ஆர்வமாய்
பின்னூட்டம் போடுகின்ற உங்களுக்கு
என்னாலே முடிந்தஉதவி எல்லோர்க்கும்
எண்ணற்ற வாழ்த்துக்களைச் சொல்லுகிறேன்

நண்பனாக ஏற்றுள்ள தங்களுக்கு
நட்புக்காக இதையுமே  செய்வதற்கு
பொன்னான நேரத்தை தந்திடுவேன்
புகழோடு நட்பையுமே போற்றிடுவேன்

கடைவீதி நண்பரிடம் செல்லாமல்
கருத்தாய்வு கூட்டங்களில் கலந்து
படைக்கூட்டம் எல்லோரும் அன்பாக
பகிர்ந்திடுங்கள்  அன்புடனே நன்றியுமே

முன்கூட்டி எல்லோரும் பதிவுசெய்து
முறையாக அனுமதியும் கிடைத்திடவே
குறையாத ஆர்வமுடன் வாருங்கள்
கொடுக்காமல் படம்பிடித்துச் செல்லுங்கள்உடனே முன்பதிவு செய்யுங்கள் இச்சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே---கவியாழி---

61 comments:

 1. //முன்கூட்டி எல்லோரும் பதிவுசெய்து
  முறையாக அனுமதியும் கிடைத்திடவே// இன்றே விரைகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. அனுமதி எண்.1
   முதாலாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

   Delete
  2. இதோ வந்துட்டேன்.. வந்துட்டேன்...!!!!

   Delete
 2. அண்ணே என்னுடைய பின்னூட்டத்தையே உங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் விண்ணப்பமாக எடுத்துக் கொண்டு பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளவும். அந்த தருணத்தை எண்ணி மிகுந்த ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. கவியாழியின் பதிவை மகுடத்தில் ஏற்றிய ஆருராருடன் சேர்ந்து நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு வேண்டும் :-)

   Delete
  2. உங்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது அனுமதி எண்.2
   பொறுமையா வரிசையா வாங்க சீனு

   Delete
 3. அட, யாருப்பா அங்க தள்ளுறது?! முண்டியடிக்காம அமைதியா வாங்கப்பா!! எல்லாரும் புகைப்படம் எடுத்துப்போம்!!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு மகளீருக்கான ஒதுக்கீடு எண்;1

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. அட என்னமா யோசிக்கறாங்கப்பா....

  ReplyDelete
  Replies
  1. சந்தோசமாவும் யோசிப்போமில்ல?

   Delete
 6. கவியாழி சார், நாளைய பதிவர் திருவிழாவுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நான் மட்டும் தங்களுடன் தனியாக ஒரு பத்து பதினைந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன், அதற்காக என்னுடைய சோனி டிஜிட்டல் கேமராவையும் உடன் கொண்டுவருகிறேன். போட்டோ எடுப்பவருக்கு போனால் போகிறதென்று தங்களுடன் ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளட்டும்.

  ReplyDelete
  Replies
  1. சண்டைபோடாம அமைதியா வரிசையில வாங்க

   Delete
 7. Replies
  1. எனக்கும் நாடித்துடிப்பு அதிகமாகிறது

   Delete
 8. த.ம 4 முதல் 11 வரை மற்றும் த.ம 13 முதல் 29 வரை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் களப் பணியை எண்ணி யாம் வியக்கோம்

   Delete
  2. ஆஹா...உங்களுக்கு முக்கியப் பிரமுகர்களுக்கான அனுமதியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது

   Delete
  3. //த.ம 4 முதல் 11 வரை மற்றும் த.ம 13 முதல் 29 வரை//

   :)))))))

   Delete
 9. அண்ணே எனக்கொரு டோக்கன் போட்டு வைங்க.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சியா வாங்க நண்பரே.உங்கள் வரவு நல்வரவாகுக

   Delete
 10. ஃபோட்டோ எடுத்துக்கிட்டா கூடவே இலவசம் ஏதாச்சும் உண்டா?:)

  எண்ணோட டோக்கன் எண் என்ன?

  ReplyDelete
  Replies
  1. உங்க எண்; 6.அனுமதி மட்டும் இலவசம்

   Delete
 11. நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குது

  ReplyDelete
 12. கூட்டம் ஓவரா இருக்கு
  அடிச்சு பிடிச்சு வரமுடியலை
  என்னையும் கணக்குல சேர்த்துக்கங்க

  ReplyDelete
  Replies
  1. உங்க அனுமதி எண்; 7.மகிழ்ச்சியா வாங்க .பெரியோர்கள் வரிசையில் நீங்க தான் முதலிடம்

   Delete
 13. ஏன் சார் ரமணி,
  உங்க வயசுக்கும் அனுபவத்துக்கும் இந்த லொள்ளு தேவையா

  ReplyDelete
  Replies
  1. நீயென்ன லூசா .இதோட நாகரீகமா நிறுத்துங்க.திறந்த வீட்டுல ஏதோ புகுந்த மாதிரி.நகைசுவையை ரசிக்கத் தெரியனும்

   Delete
 14. கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகம் தந்தா நானும் தயார்.

  ReplyDelete
  Replies
  1. எதுக்கு தயார்? நண்பரே வரிசையில வாங்க

   Delete
  2. யாரையும் காணோம் அண்ணனை வரிசையில வரச்சொல்லுங்க.,

   Delete
 15. அண்ணேன் ஒங்க கோட நானும் போட்டா பிடிக்க ஆவலுடன் வருகிறேன் கட்டுச்சோறு கட்டிக்கிட்டு....ஆனா நீங்க பளபளன்னு வசந்தமாளிகை சிவாஜி மாரி ஜிகுஜிகுன்னு ஜிப்பாவுலதான் வரோணும்...நன்னி!

  முதல்ல ஜோதிஜி சகவாசத்த கட் பண்ணுணே...!

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டாப் போச்சு .ஆனா உங்க சோறு மட்டும் வேண்டாம்.ஏன்னா மட்டன் பிரியாணிய விட்டு அதை தொடமாட்டேன்.
   ஆனா.மூனா & குழு நமக்காக ஏற்பாடு பண்ணியிருக்காங்க

   Delete
 16. மனம்மகிழ் மாட்சி மகுடம் உமக்காம்
  தினமிது காணத் தகும்!

  மகிழ்ச்சி மழையில் நனைந்து குதூகலிப்பது கண்டு
  மனம் நிறைந்த மகிழ்வு எனக்கும்!

  எல்லாம் இனிமையாகச் சிறப்பாக அமைய நல் வாழ்த்துக்கள் சகோதரரே!!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க சகோ .நீங்களும் வருவதாய் இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாய் இருக்கும்.வாழ்த்துக்கு நன்றி

   Delete
 17. இங்க என்ன கூட்டமா இருக்கே நானும் இருக்கேன் பா வரிசையில் எதுக்கு போறிங்க சொல்லிட்டு போங்க..ஹஹஹ

  ReplyDelete
  Replies
  1. மகளீருக்கு தனி வரிசை உண்டு .உங்க அனுமதி எண்;2

   Delete
 18. இதைத்தான் போட்டோ போட்டின்னு சொல்லறாங்களோ!
  கலக்குங்க கவியாழி சார்.

  ReplyDelete
  Replies
  1. பட்டா பட்டி போட்டாலும் போட்டா போட்டின்னு வந்துட்டா நாங்களெல்லாம் தயாரா வந்துடுவோமில்ல

   Delete
 19. இது நகைசுவை பதிவு என்று எனக்கு தெரியாது.
  சீரியஸாக நீங்க அழைப்பு விடுக்கிறீங்க என்று நினைச்சு நானும் கொஞ்சம் கடுப்பாகி ஒங்கள கொஞ்சம் கடுப்பேத்திட்டேன்.
  சாரி

  ReplyDelete
  Replies
  1. என்னை கடுப்பேத்த என மனைவியால் மட்டுமே முடியும். பெண்சாதியாயிற்றே.

   Delete
 20. அண்ணே நானு நானு... என்னையும் சேர்த்துக்குங்க.,
  ஆனா மறந்துடாதீங்க கேமரா கொண்டு வர...

  ReplyDelete
  Replies
  1. கேமராவுக்குப் பஞ்சமா? கவலைப்படாதீர்கள் உங்க அனுமதி எண்.8

   Delete
 21. அண்ணே எங்க கேமராவில் எடுக்க அனுமதி உண்டா.. நான் கோவையில் இருந்து சார்ஜ் போட்டு வருகிறேன்... சோ கேட்டேனுங்க...

  ReplyDelete
  Replies
  1. நீங்களே எடுத்து எல்லோருக்கும் கொடுங்க

   Delete
 22. இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
 23. ஐநூறு ரூபாய் கொடுத்தால் உங்களுடன் போட்டோ எடுத்துக்க நான் ரெடி !

  ReplyDelete
  Replies
  1. அப்போ விழா கமிட்டிக்குக்கு எத்தனை ஆயிரம் கொடுப்பீங்க?

   Delete
 24. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. இந்தத் தள்ளு முள்ளுவிற்கு வர ஆசையாக இருக்கு, ஆனால் வர முடியாது போலிருக்கே! ம்ம்ம்...... வருத்தமாயிருக்கு.
  எடுத்த படங்களையாவது பதிவில் போடுங்கள் . என்னைப் போன்றவர்கள் பார்த்துக் கொள்கிறோம். வேறென்ன செய்வது!

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் வர முயற்சிக்கலாமே

   Delete
 26. நானும் வரிசையிலே இருக்கேன், மறந்துடாதீங்க!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா வாங்க .நெருக்கடி இல்லாம பெண்களுக்கான தனிவரிசையில வாங்க

   Delete
 27. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் வாங்க நண்பரே நிச்சயம் மகிழ்ச்சியும் கிடைக்கும் அன்பரே

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்