தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதம் மனதில் இருந்தாலே......

மனிதம் இல்லா மனிதரையே
மாற்றம் செய்ய வையுங்கள்
மனதில் துளியும் அன்புடனே
மனிதனாக வாழச் சொல்லுங்கள்

செல்வம் அதிகம் சேர்ந்தாலே
செல்லும் வழியும் தடுமாறும்
சொல்லில் வார்த்தை  தவறாகி
சொந்தம் தள்ளி உறவாடும்

சொந்தமும் நட்பும் இல்லாமல்
சுகமாய் வாழ்க்கை வாழ்ந்தாலும்
செல்லும் வழியில் சிலரேனும்
சிரித்துப் பேசச் செய்திடுங்கள்

குற்றம் குறைகளை நல்லதை
குணத்தை மாற்றி வாழ்வதை
சுற்றமும் நட்பும் உணர்ந்ததை
சொல்லிப் புரிய வையுங்கள்

அருகில் இல்லா உறவுகளால்
அதிகத் துன்பமும்  வருவதையும்
அன்பே இல்லா மனிதர்களின்
அடைந்த நிலையை காட்டுங்கள்

மனித வாழ்க்கை உணர்வதற்கு
மக்கள் சூழ்ந்தே வாழ்வதற்கு
மனிதம்  மனதில் இருந்தாலே
மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்திடலாம்


(கவியாழி)


Comments

  1. /// மனித வாழ்க்கை உணர்வதற்கு
    மக்கள் சூழ்ந்தே வாழ்வதற்கு... ///

    நல்ல வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இக்காலகட்டத்திற்குத் தேவையானதை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  4. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழும் கலையை சொன்னதற்கு பாராட்டுக்கள் !

    ReplyDelete
  6. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. மனிதம் நிறைந்தால் மகிழ்ச்சி பிறக்கும்! நிறைவான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. செல்வம் அதிகம் சேர்ந்தாலே
    செல்லும் வழியும் தடுமாறும்
    சொல்லில் வார்த்தை தவறாகி
    சொந்தம் தள்ளி உறவாடும்

    நன்று!

    ReplyDelete
  9. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  10. செல்வம் அதிகம் சேர்ந்தாலே
    செல்லும் வழியும் தடுமாறும்
    சொல்லில் வார்த்தை தவறாகி
    சொந்தம் தள்ளி உறவாடும்

    மனிதம் வேண்டி மனிதனாக
    மன்றாடும் உள்ளம் கண்டு மகிழ்ச்சியே

    நன்றி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  11. மனித வாழ்க்கை உணர்வதற்கு
    மக்கள் சூழ்ந்தே வாழ்வதற்கு
    மனிதம் மனதில் இருந்தாலே
    மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்திடலாம்

    அருமையான வார்த்தைகள்! வாழ்த்துக்கள்! கவியாழி!!

    ReplyDelete
  12. குழந்தைகளுக்கு அறிமுக செய்யவேண்டிய கவிதை

    அழவள்ளியப்பாவிற்கு பின்னர் இப்படி யாரும் எழுதுவதில்லை என்கிற குறையை நீக்கியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  13. //மனிதம் மனதில் இருந்தாலே
    மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்திடலாம்//
    அருமை!

    ReplyDelete
  14. "அன்பே இல்லா மனிதர்களின்
    அடைந்த நிலையை காட்டுங்கள்
    மனதில் துளியும் அன்புடனே
    மனிதனாக வாழச் சொல்லுங்கள்
    செல்லும் வழியில் சிலரேனும்
    சிரித்துப் பேசச் செய்திடுங்கள்" எனச்
    சிறப்பாக வழிகாட்டி உள்ளீர்கள்!
    சிறந்த பகிர்வு

    ReplyDelete
  15. //செல்லும் வழியில் சிலரேனும்
    சிரித்துப் பேசச் செய்திடுங்கள்///
    அருமை....!!!

    வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

    தொடர வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more