விதியின் செயல்......
சிறிதாய் மனதில் காயம் பட்டாலும்
சிதறி ஓடுமாம் சில்லறை போல
பெரியோர் மனதும் வெம்பித் தவித்து
பெரும் வேதனையில் வெந்தே போகுமாம்
வருவோர் துயரம் அறியாமல் தெரியாமல்
வந்ததும் சொல்லும் வார்த்தை யாலும்
பெரிதாய் ஏதும் மாற்றமும் மின்றி
பெருகியே வருந்தியே கடனாய்ச் சேர்க்கும்
உரியோரும் உற்றாரும் சொன்னால் கூட
உதவிக்கு உழைப்பையும் தந்தால் கூட
பணமும் பொருளும் கொடுத்தாலும் கூட
படைத்தவன் வந்தாலும் தோஷம் தீருமா
எல்லோர்க்கும் வந்திடும் இந்த நிலை
எப்படி தீர்ந்திடும் எப்போது மாறிடும்
தப்பாமல் தவம் செய்தாலும் மாறா
தங்கியே கடனை தீர்க்கும் மாயை
விதியாய் வந்ததாய் சொல்வார் சிலர்
விரைவில் தீர்ந்திடும் கடவுள் நினைத்தால்
மதியால் வெல்ல முடியா தருணம்
மனிதன் படைப்பில் யாவர்கும் பொதுவோ
(கவியாழி)
வணக்கம் சகோதரர்
ReplyDeleteவிதியை மதியால் வெல்லலாம் என்பார்களே! எல்லோருக்கும் விதி பொதுவென்று ஏற்றுக்கொள்ளல் ஆகாது தானே! எத்தனை காயப்பட்டாலும், மனம் கசந்தாலும் தொடர்ந்து எழுவோம். வெல்வோம். அழகான அதே சமயம் உணர்வுகளைத் தாங்கிய வரிகள். பகிர்வுக்கு நன்றி.
மதியைக் கொஞ்சமாவது பயன்படுத்தினால் நல்லது. இல்லையேல் விதி விதி என்று விதியைப் பற்றிப் பேசவேண்டியதுதான். நல்ல பதிவு.
ReplyDeleteஉங்களிடமிருந்து வித்தியாசமான பகிர்வு...
ReplyDeleteஆழமான சிந்தனையில் விளைந்த
ReplyDeleteஅருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நல்ல சிந்தனை....
ReplyDelete
ReplyDeleteவிதியோ மதியோ சதியோ. எதுவென்றாலும் நிதியே இருந்தால் வென்று விடலாம்!
தீப்புண் ஆறும் நாப்புண் ஆறாது! அருமையாக கவிதையாக தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான சிந்தனை கவிதையும் அழகு!
ReplyDeleteகவிதை நல்லாத்தான் இருந்துச்சி... ஆனா... சகோதரர் பாண்டியனும், அய்யா ஜம்புலிங்கம் அவர்களும் சொன்ன கருத்தையே நானும் வழிமொழிகிறேன். நன்றி அய்யா.
ReplyDeleteமிக நல்லதொரு கவிதை! நல்ல சிந்தனை! நண்பரே!
ReplyDeleteவிதியை மதியால் வெல்ல முயல்வோம்
ReplyDelete