தெய்வங்கள்

தெய்வங்கள்

உண்மை வாழ்வு...

முதுமையைத் தேடி செல்பவர் யாரோ
முறையாய் அதையும் தடுப்பவர்  உளரோ
மூன்றும் மூன்றும் ஒன்பதைத் தவிர்க்க
முடிந்தால் கணக்கை மாற்றிடத் துணிவோ

காலைமாலை என்பது உண்மை என்றால்
கடவுளும் செயலும் நம்பிக்கை என்றால்
நேரமும் பொழுதும் மாறுதல் நன்றாம்
நிம்மதியைக் கெடுப்பது மட்டும் எதனால்

சொல்வோர் சொல்லும் சொற்கள் யாவும்
சொல்லா நிலையில் தவிர்த்திட முடிந்தால்
எல்லோர் வாழ்வும் நிம்மதி கொண்டே
எளிதில் சொல்லால் மடிந்திட மாட்டார்

அவரவர்  வாழ்கையை வாழ்ந்திட நினைத்தால்
அவரால் முடிந்தால் உதவிகள் செய்தால்
அன்பும் அறமும் ஓங்கி வளர்ந்ததால்
அகிலம் முழுதும் அன்பே வாழும்

படைப்பில் நிறைய அர்த்தங்கள் உண்டு
பகலும் இரவும் செய்யும் நிகழ்வால்
கிடைக்கும் மகிழ்ச்சி நிலைப்பது போல
கிடைத்த அனைத்தும் மகிழ்ச்சியே என்று


(கவியாழி)






Comments

  1. அவரவர் தன்னை உணர்ந்தால் அனைத்தும் நலம் தான்...

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரர்
    //அவரவர் வாழ்கையை வாழ்ந்திட நினைத்தால்
    அவரால் முடிந்தால் உதவிகள் செய்தால்
    அன்பும் அறமும் ஓங்கி வளர்ந்ததால்
    அகிலம் முழுதும் அன்பே வாழும்//
    அற்புதமான வரிகள். அனைத்தும் அனைவரும் உணர்ந்தால் இவ்வுலகம் இன்பமாகும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete


  3. முதுமையை முடக்க இயலாதய்ய!

    ReplyDelete
  4. --அவரவர் வாழ்கையை வாழ்ந்திட நினைத்தால்
    அவரால் முடிந்தால் உதவிகள் செய்தால்-
    உண்மைதான் ஐயா
    தம 7

    ReplyDelete
  5. --அவரவர் வாழ்கையை வாழ்ந்திட நினைத்தால்
    அவரால் முடிந்தால் உதவிகள் செய்தால்-
    உண்மைதான் ஐயா
    தம 7

    ReplyDelete
  6. ஆண்டவன் படைப்பில் அர்த்தங்கள் இருக்கின்றன! உங்கள் படைப்பிலும்தான்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ஒரு ஒரு பத்தியிலும் ஒரு ஒரு கருத்து அருமை

    ReplyDelete
  8. படைப்பில் நிறைய அர்த்தங்கள் உண்டு//நிஜம் தான் ஐயா!

    ReplyDelete
  9. எதிர்வரும் முதுமையை நினைத்தால் ?
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  10. அவரவர் வாழ்கையை வாழ்ந்திட நினைத்தால்
    அவரால் முடிந்தால் உதவிகள் செய்தால்
    அன்பும் அறமும் ஓங்கி வளர்ந்ததால்
    அகிலம் முழுதும் அன்பே வாழும்//

    மிகவும் உண்மை!

    ReplyDelete
  11. படைப்பில் நிறைய அர்த்தங்கள் உண்டு என்பது உண்மை. அதைவிட மேலானது அதனை நான் புரிந்துகொள்ளும் விதம். நன்றி.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  12. "சொல்வோர் சொல்லும் சொற்கள் யாவும்
    சொல்லா நிலையில் தவிர்த்திட முடிந்தால்
    எல்லோர் வாழ்வும் நிம்மதி கொண்டே
    எளிதில் சொல்லால் மடிந்திட மாட்டார்" என்ற
    வரிகளை விரும்புகிறேன்!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்