விதியா? விஞ்ஞானமா?
எல்லா நொடியும் செல்வதுபோல
எல்லோர் மனமும் செய்வதுபோல
சொல்லா நிலையில் செய்ததுபோல
செய்தால் தவறும் இருந்திடாதோ
நல்லது என்றே நாளும் செய்து
நடப்பவை அனைத்தும் நல்லதே என்றும்
நாட்கள் முழுதும் செய்யும் செயலில்
நலிந்த செயலும் உள்ளது முறையா
மதிதான் சொல்லும் செயலை செய்து
மக்கள் மனதில் இடமும் பிடித்தும்
மறந்தும் செய்யும் செயலை எண்ணி
மறுபடி எண்ணி வருத்துதல் தவறா
பிணியைப் போக்க மருந்தும் உண்டு
பிழையாய் அதனால் நிகழும் செயலும்
துணையாய் எண்ணி மருத்துவர் ஏனோ
தொடர்ந்து இன்னும் கொடுத்தல் நன்றோ
எல்லோர் மனமும் ஏக்கம் இன்றி
எல்லா தினமும் மகிழ்ச்சி கொண்டால்
பொல்லா நிலையும் அன்றி வாழ்ந்தால்
பொழுதும் விதியை மறுத்து வாழ்வோம்
விதியென்று நான் நம்ப மறுத்தும்
விளையாட்டாய் எண்ணி தவிர்த்தால்
விஞ்ஞானம் ஏன் என்னைத் திருத்தி
வீண் செயலை ஏன் தடுக்கவில்லை
(கவியாழி)
எல்லோர் மனமும் செய்வதுபோல
சொல்லா நிலையில் செய்ததுபோல
செய்தால் தவறும் இருந்திடாதோ
நல்லது என்றே நாளும் செய்து
நடப்பவை அனைத்தும் நல்லதே என்றும்
நாட்கள் முழுதும் செய்யும் செயலில்
நலிந்த செயலும் உள்ளது முறையா
மதிதான் சொல்லும் செயலை செய்து
மக்கள் மனதில் இடமும் பிடித்தும்
மறந்தும் செய்யும் செயலை எண்ணி
மறுபடி எண்ணி வருத்துதல் தவறா
பிணியைப் போக்க மருந்தும் உண்டு
பிழையாய் அதனால் நிகழும் செயலும்
துணையாய் எண்ணி மருத்துவர் ஏனோ
தொடர்ந்து இன்னும் கொடுத்தல் நன்றோ
எல்லோர் மனமும் ஏக்கம் இன்றி
எல்லா தினமும் மகிழ்ச்சி கொண்டால்
பொல்லா நிலையும் அன்றி வாழ்ந்தால்
பொழுதும் விதியை மறுத்து வாழ்வோம்
விதியென்று நான் நம்ப மறுத்தும்
விளையாட்டாய் எண்ணி தவிர்த்தால்
விஞ்ஞானம் ஏன் என்னைத் திருத்தி
வீண் செயலை ஏன் தடுக்கவில்லை
(கவியாழி)
விதி- நடந்து முடிந்த பிறகு சொல்லப் படுவது.
ReplyDeleteவிஞ்ஞானம்->
நம்ம ஊரில் ஒரு சிலருக்கு உதடு பிளவு பட்டுப் பிறக்கும். பற்கள் ஒரு சிலருக்கு பெரியதாகவும் விகாரமாகவும் இருக்கும். நம்ம ஊரில் இவர்களையெல்லாம் அவமானப் படுத்துவது, குறை மனிதர்களாக நினைப்பதெல்லாம் உண்டு. (தெய்வமகன் படத்தில் அண்னன் சிவாஜி) இதையெல்லாம் இப்ப பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் ஆர்த்தோடானிக்ஸ் டெண்டிஸ்ட் சரி பண்ணி அவர்களையும் அழகாக ஆக்கிடுறாங்க. அவ்ர்களும் தன்னம்பிக்கையுடன் வாழ்றாங்க.
அவர்கள் விதியை விஞ்ஞான வளர்ச்சி ஓரளவுக்கு மாற்றியமைக்கிறதுனு சொல்லலாம்.
கவிதை எழுப்பிய வினா கருத்தில் வைத்துக் கொள்ளத் தக்கது. வள்ளுவரைக் கேட்டால் “ஊழிற் பெருவலி யாவுள?” என்கிறார்.
ReplyDeleteத.ம.1
மதியைப் பொறுத்து...!
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களின் கருத்துடன் ஒத்துப் போகிறேன் ஐயா
ReplyDeleteநன்றி
tha ma 5
ReplyDeleteவிதியை ஏற்பதா
ReplyDeleteவிஞ்ஞானத்தை மறுப்பதா
நம்மவர் முடிவிலே
விதியா விஞ்ஞானமா? பல்லாண்டுகளாக கேட்கப்படும் கேள்வி! விடை மட்டும் கிடைத்த பாடில்லை! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுதலில் கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பதுபோலத்தான். எது எவ்வாறு இருப்பினும் அனைத்துமே முன்கூட்டி விதிக்கப்பட்டது (Everything is destined)என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழல் உள்ளதே?
ReplyDeleteGreat reaading this
ReplyDelete