Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/வாழ்க்கை

தெய்வங்கள்

தெய்வங்கள்

கலர்க்கலராய் ஆடைப் பார்த்து

மேனியெல்லாம் நகையைப் பூட்டி மேல்சாதி என்று சொல்லுவான் மீதுமுள்ள உடல் இடங்களுக்கு மேலும் சாந்தும் பூசுவான் கீழ்த்தட்டில் வாழும்  மக்களையே கீழ்த்தரமாய் பார்த்து எண்ணுவான் கீழிருந்து மேல்வரைப் உற்றுக் கெட்ட வார்த்தைக் கூறுவான் கலர்க்கலராய் ஆடைப் பார்த்து கண் சிவந்து கொள்ளுவான் கண்டபடி மனதில் எண்ணி கஷ்டகாலமென்று  சொல்லுவான் நாட்டுக்கு உழைக்கச் சொல்லி நடித்தும்  நாடக மாடுவான் நாறிப் போன மானத்துக்கு நன்கொடைகள் பல செய்யுவான் கோடிகோடிப் பணத்தை சேர்த்து காவல் காத்து நில்லுவான் கஷ்டப்படும் ஏழைக்கு காசை வட்டிபோட்டு வாங்குவான் கண்டபடி மாத்திரையை மூன்று வேலை தின்னுவான் கடைசியிலும் உடலை வருத்தி கஷ்டமாக உயிரை நீக்குவான்

அவளின்றி எனக்கே மகிழ்வேது

அன்பானவள் எனக்கே அழகானவள் அனைத்திலும் என்னை அறிந்தவள் பண்பும் தெரிந்தவள் பாசக்காரி பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி எப்போதும் என்னையே சார்ந்தவள் எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள் முன்கோபம் வந்தால் பத்ரகாளி முடியாத நேரத்தில் பங்காளி முன்பொழுதில்  தினம் எழுவாள் மூன்று வேலையும்  சமைப்பாள் முகம் மலர்ந்தே உணவை முன்னே வந்து பகிர்வாள் கட்டளைப் போடும் எசமானி கஷ்டம் வந்தால் உபதேசி சித்திரை வெயிலாய் சிலநேரம் சிடுசிடு வென்றே தகதகப்பாள் ஆனாலும் எப்போதும் அன்பானவள் அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள் அவளன்றி வாழ்வே இருக்காது அருகின்றி எனக்கே மகிழ்வேது

ஆனந்த வாழ்வை பிரியோம்

உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் உருமாறும் காலங்கள் நேரங்கள் உண்மையை புரிந்ததா மனிதம் உலகமே அறியாத புதிராம் பொய்த்துப் போன இயற்கை புரியாத காலநிலை மாற்றம் சொல்லிலே பேசும் செயற்கை சோகமாய் மாறிவிட்ட நேர்மை வெல்லுவோர் வீழ்த்து தோற்றவர் சொல்லிலே விஷத்தை சேர்த்தவர் நல்லதை நாளும் செய்பவர் நாணயமே இல்லாத மனிதர் வாழ்கையில் ஏமாற்றம் வரும் வந்தபின் பணிந்து செல்லும் வசந்தமும் வந்து வாழ்த்தும் வாழ்ந்ததை சரித்திரம் சொல்லும் இன்னும் உள்ளது மனிதம் எப்படியும் மாறிவிடும் உலகம் அப்படியே சுழற்சி நின்றிடாது ஆழ்கடலும் வற்றிடாது அறியோம் அன்பினை யாருமே மறுத்து அறமே செய்வாரே பொறுத்து நீதியும் நேர்மையும் செயிக்கும் நித்தமும் மகிழ்ச்சியே பெருகும் ஆனாலும் எல்லோரும் மகிழ்வோம் ஆனந்த வாழ்வை பிரியோம் இருக்கும் வரையே நமது இறந்த பின்பு யாரறிவார்

சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம்

வானத்துக்கும் மேகத்துக்கும் சண்டையாம் மின்னலும் மழையும் இருக்குமாம் சூரியனுக்கும் பூமிக்கும் ஏக்கமாம் சந்தோசம் தினமும் வேண்டுமாம் எருவுக்கும் நிலத்துக்கும் கல்யாணமாம் எல்லா பயிருக்கும் உற்சாகமாம் மலருக்கும் தேனிக்கும் இன்பமாம் மகரந்தம் பூக்களின் கொண்டாட்டமாம் பயிருக்கும் பூச்சிக்கும் சண்டையாம் புழுவுக்கும் குருவிக்கும் கும்மாளமாம் பசுமைக் குளிர்ச்சியாய் இருக்குமாம் பார்க்கும் எல்லாமே மகிழ்ச்சியாம் ஆட்டுக்கும் மாட்டுக்கும் உற்சாகமாம் ஆனந்த பாட்டோடு ஊர்கோலமாம் செடிகளுக்கும் கொடிகளும் கூடுமாம் சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம் இதெல்லாம் காணும் உழவனுக்கு எப்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியாம் தப்பாக எண்ணாத அன்னாருக்கு இப்போது காணாத வறட்சியாம்

அற்பனாய் தெரியும் அவரே சிவனார்

அழுக்குத் துணியும் பினுக்கு மணதர் அலையில்லா மனமும் ஆனந்த சிரிப்பர் இழுக்கு சொல்லை எதிர்க்க மாட்டர் எல்லா நாளும் மகிழ்ச்சி உள்ளர் பொற்சுவை அறியார்ப் புலனை மதியார் நற்சுவை நாவில் நாளுமே தெரியார் அற்பனாய் தெரியும் அவரே சிவனார் அந்நிலை நமக்கு அறிந்திட முடியார் பணம் பொருள் இடம் வேண்டார் பகட்டு யோக வாகனம் வேண்டார் குணம் தெரி குடிமை வேண்டார் உணவு தினம் உண்ண வேண்டார் சிரிப்பார் சினங்கொண்டு அடிபார் துடிப்பார் தொல்லையென நடிப்பார் அழமாட்டார் அமுதை தொடமாட்டார் ஆனாலும் நோயின்றி படுக்க மாட்டார் எக்கணம் தவமே செய்பவர் ஞானி என்பதை உணர்ந்த மனிதனே யோகி எங்கும் நிறைந்த எல்லோரின் தோணி என்பவன் சிவனே என்பதை யுணர்நீ சிந்தனை செய்வதை சொல்லத் தெரியா நிந்தனை எந்த நேரமும் மிருந்து பித்தனே என்றும் பைத்திய மென்றும் சித்தனை நீவிர் சொல்லல் முறையா

இதயமே .... இனிய இயந்திரமே !

இதயமே இயக்கத்தை நிறுத்தாத இனிய இயந்திரமே ! என்றுமே நிற்காத உன் தந்திரமே எனக்கு மாத்திரமே ! காற்றடைத்த என் உடம்பில் திரவம் குடித்து தினம் வாழ்கிறாயே ! மகிழ்ச்சியும் வேதனையும் ஏற்றுக்கொள்ளும் உனக்கு எசமான் யார் ? நீயும் பரிதாபம் ஓய்வு கொடுத்தால் மீண்டும் வருவாயா வருந்தி விடுவாயா ! எனக்கும் ஆசை எப்படி கொடுப்பதென்று நான் இருந்தால் முடியாது இறந்தால் முடியும் ? வேண்டுமென்று கேட்பாயா வேதனையில் துடிப்பாயா போதுமென்றுச் சொல்வாயா போய்சேர்ந்துத் துயில்வாயா.....

வேண்டும் வேண்டும் நிம்மதி வேண்டும்

மீண்டும் எனக்கு நிம்மதி வேண்டும் மீளாத் துயரும் தாண்டிட வேண்டும் தாண்டும் உயரம் தெரிந்திட வேண்டும் தாழ்மை உணர்வு நீங்கிட வேண்டும் நாளும் நட்பை புரிந்திட வேண்டும் நல்லவர் கெட்டவர் அறிந்திட வேண்டும் பாழும் மனமே திருந்திட வேண்டும் பண்பில் நல்லவர் துணைவர வேண்டும் தீதும் நன்றே என்றிட வேண்டும் தீமை இல்லா மனதும் வேண்டும் தீயவர் ஒதுங்கி போய்விட வேண்டும் தினமும் என்னை அழைப்பவர் வேண்டும் பாலை நிலமும் மாறிட வேண்டும் பருவம் முழுதும் மழைபெற வேண்டும் பறவை குருவிகள் பயனுற வேண்டும் பார்க்கும் இடமே செழிப்புற வேண்டும் உழவன் வாழ்க்கை சிறப்புற வேண்டும் உழுதே விளைச்சல் பெருகிட வேண்டும் வேளை தோறும் உறக்கம் வேண்டும் வேதனை இல்லா கனவும் வேண்டும் நாளை நடப்பதை அறிய வேண்டும் நல்லது கெட்டது தெரிய வேண்டும் வேளை தவறா உணவும் வேண்டும் விடியல் தோறும் மகிழ்ச்சி வேண்டும் சோர்வே எனக்கு நீங்கிடவேண்டும் சோதனை இல்லா வாழ்க்கை வேண்டும் நாளை எனதே என்றிட வேண்டும் நாளும் நல்லதை செய்திட வேண்டும்

தற்கொலையால் மடிந்து விடாதே

ஆத்திரத்தில் அறிவிழந்து தவறிழைக்காதே அடிக்கடியே அதைநினைத்து குறுகிவிடாதே நீண்டநெடு நேரமுண்டு மறந்துவிடாதே-எதிரில் நேரமுனக்கு காத்திருக்கு வருத்தப்படாதே தோல்வியாலே துயரமென்று துவண்டுவிடாதே தொடர்ந்துவரும் கடமையை நீ மறந்துவிடாதே மாந்தருண்டு மனிதமுண்டு மறந்துவிடாதே-மனதை மாற்றி தற்கொலையால் மடிந்துவிடாதே காலமுண்டு வாழ்க்கையுண்டு கலங்கிவிடாதே காத்திருக்கு வெற்றியதை தவிர்த்துவிடாதே அனைவருக்கும் நிகழ்வதைத் தெரிந்துகொண்டு-அன்பு அத்தனையும் மறந்துவிடும் வெற்றிகொண்டு வெற்றித் தோல்வி வருவதுண்டு வீரமென்று வெகுசிலரே பார்பதுண்டு தொற்றுக் கொண்டு தொடர்வதுண்டு-வாழ்வில் தோல்விப் பிறகு வெற்றியாவதுமுண்டு கற்றவர் பலபேர் சொல்வதுண்டு கற்பனையாய் சிலதும் நிகழ்ந்ததுண்டு வெற்றியே வரலாறு படைத்ததுண்டு-நல்ல விடையதிலே கிடைத்திடுமே இனிமைகொண்டு

ரசித்தவர்கள்