தெய்வங்கள்

தெய்வங்கள்

தற்கொலையால் மடிந்து விடாதே

ஆத்திரத்தில் அறிவிழந்து தவறிழைக்காதே
அடிக்கடியே அதைநினைத்து குறுகிவிடாதே
நீண்டநெடு நேரமுண்டு மறந்துவிடாதே-எதிரில்
நேரமுனக்கு காத்திருக்கு வருத்தப்படாதே

தோல்வியாலே துயரமென்று துவண்டுவிடாதே
தொடர்ந்துவரும் கடமையை நீ மறந்துவிடாதே
மாந்தருண்டு மனிதமுண்டு மறந்துவிடாதே-மனதை
மாற்றி தற்கொலையால் மடிந்துவிடாதே

காலமுண்டு வாழ்க்கையுண்டு கலங்கிவிடாதே
காத்திருக்கு வெற்றியதை தவிர்த்துவிடாதே
அனைவருக்கும் நிகழ்வதைத் தெரிந்துகொண்டு-அன்பு
அத்தனையும் மறந்துவிடும் வெற்றிகொண்டு

வெற்றித் தோல்வி வருவதுண்டு
வீரமென்று வெகுசிலரே பார்பதுண்டு
தொற்றுக் கொண்டு தொடர்வதுண்டு-வாழ்வில்
தோல்விப் பிறகு வெற்றியாவதுமுண்டு

கற்றவர் பலபேர் சொல்வதுண்டு
கற்பனையாய் சிலதும் நிகழ்ந்ததுண்டு
வெற்றியே வரலாறு படைத்ததுண்டு-நல்ல
விடையதிலே கிடைத்திடுமே இனிமைகொண்டு

Comments

  1. ஃ/////////
    காலமுண்டு வாழ்க்கையுண்டு கலங்கிவிடாதே
    காத்திருக்கு வெற்றியதை தவிர்த்துவிடாதே
    ////////

    இதை சரியாக புரிந்துக்கொள்ளதவர்கள் தான் இந்த முடிவை எடுத்து விடுகிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. தோல்விக்குப்பின்னே வெற்றிபெற வழியுண்டு என்ற
      வார்த்தையை சொல்லாமல் இருக்கக் கூடாது. நீங்க கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி

      Delete
  2. // அடிக்கடியே அதைநினைத்து குறுகிவிடாதே
    நீண்டநெடு நேரமுண்டு மறந்துவிடாதே-எதிரில்
    நேரமுனக்கு காத்திருக்கு வருத்தப்படாதே //

    நல்ல உளவியல் ரீதியான சிந்தனை வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே இன்று பெரும்பாலான தற்கொலைகள் உளவியல் மாற்றங்களினால் ஏற்படுகிறது.இன்று செய்தித்தாளை பார்த்தால் கொலையும்,தற்கொலையுமே பிரதான செய்திகளாய் உள்ளதற்கு காரணமே உளவியல் சமாசாரம் பற்றி தெரியாமையே.
      நீங்க வந்தமைக்கு நன்றி

      Delete
  3. தோல்வியாலே துயரமென்று துவண்டுவிடாதே
    தொடர்ந்துவரும் கடமையை நீ மறந்துவிடாதே
    மாந்தருண்டு மனிதமுண்டு மறந்துவிடாதே-மனதை
    மாற்றி தற்கொலையால் மடிந்துவிடாதே

    வாழ்வுக்குகந்த நற் கருத்து இங்கே
    வளமாய் பொலிந்துள்ளது வரிகளில் எங்கும்
    இனியன சொல்லும் கவிதைகள் இவைகள் மேலும்
    இனிதே தொடர வாழ்த்துக்கள் ஐயா .....

    ReplyDelete
    Replies
    1. நம்மால் சொல்ல முடிந்ததை சொல்லுவதினால் யாரேனும் சிலர் மனம் மாறினால் எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  4. அழகு கவிதையில் அருமையாகச் சொன்னீர்கள்!
    வாழ்த்துக்கள் சகோ!

    உள்ளமதில் உவகை உள்ளது வாழ்ந்திடென்று
    வெள்ளமெனப் பெருக்கிய வீறுகொண்டு பாவியற்றி
    கள்ளமிலா நல்மனமும் கடமைதவறாதும் வாழ்ந்து
    வெல்லலாம் யாவையுமென விளம்பினீர் மிகநன்றே!...

    த, ம. 4

    ReplyDelete
    Replies
    1. மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லியமைக்கு நன்றி சகோ நன்றி.உங்களின் கவிதை எனக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுக்கிறது

      Delete
  5. தன்னம்பிக்கை வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சுரேஷ் அடிக்கடி வாங்க

      Delete
  6. முந்தைய பகிர்வுக்கும் இந்த பகிர்வுக்கும் தொடர்பு அருமை... இது போல் தொடருங்கள்...

    சிறப்பான வரிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
    2. புரிதலுக்கு நன்றி சார்...

      Delete
    3. ஆதரவுக்கு நன்றி.

      Delete
  7. நம்பிக்கை ஊட்டும் வரிகள்
    "வாழ்வில்
    தோல்வி பிறகு வெற்றியாவதுமுண்டு.."

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மருத்துவரையா அனுபவம் தந்த பாடம்

      Delete
  8. கற்றவர் பலபேர் சொல்வதுண்டு
    கற்பனையாய் சிலதும் நிகழ்ந்ததுண்டு
    வெற்றியே வரலாறு படைத்ததுண்டு-நல்ல
    விடையதிலே கிடைத்திடுமே இனிமைகொண்டு-- சிறப்பு..

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்ததுக்கு நன்றிங்க கருண்.

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more