அவளின்றி எனக்கே மகிழ்வேது
அன்பானவள் எனக்கே அழகானவள்
அனைத்திலும் என்னை அறிந்தவள்
பண்பும் தெரிந்தவள் பாசக்காரி
பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி
எப்போதும் என்னையே சார்ந்தவள்
எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள்
முன்கோபம் வந்தால் பத்ரகாளி
முன்பொழுதில் தினம் எழுவாள்
மூன்று வேலையும் சமைப்பாள்
முகம் மலர்ந்தே உணவை
முன்னே வந்து பகிர்வாள்
கட்டளைப் போடும் எசமானி
கஷ்டம் வந்தால் உபதேசி
சித்திரை வெயிலாய் சிலநேரம்
சிடுசிடு வென்றே தகதகப்பாள்
ஆனாலும் எப்போதும் அன்பானவள்
அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள்
அவளன்றி வாழ்வே இருக்காது
அருகின்றி எனக்கே மகிழ்வேது
அனைத்திலும் என்னை அறிந்தவள்
பண்பும் தெரிந்தவள் பாசக்காரி
பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி
எப்போதும் என்னையே சார்ந்தவள்
எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள்
முன்கோபம் வந்தால் பத்ரகாளி
முடியாத நேரத்தில் பங்காளி
முன்பொழுதில் தினம் எழுவாள்
மூன்று வேலையும் சமைப்பாள்
முகம் மலர்ந்தே உணவை
முன்னே வந்து பகிர்வாள்
கட்டளைப் போடும் எசமானி
கஷ்டம் வந்தால் உபதேசி
சித்திரை வெயிலாய் சிலநேரம்
சிடுசிடு வென்றே தகதகப்பாள்
ஆனாலும் எப்போதும் அன்பானவள்
அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள்
அவளன்றி வாழ்வே இருக்காது
அருகின்றி எனக்கே மகிழ்வேது
தங்களது இல்லாள் பற்றிய கவிதை அருமை ஐயா.
ReplyDeleteவருகைக்கு நன்றிங்கம்மா.தொடர்ந்து வாங்க
Delete/// ஆனாலும் எப்போதும் அன்பானவள்...
ReplyDeleteஅகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள்... ///
இதைவிட சிறப்பேது...? வாழ்த்துக்கள் ஐயா...
வாழ்த்துக்கு நன்றிங்க
Deleteஇல்லாளின் பெருமையினை உணர்த்த இதைவிட சிறந்த கவி ஏது?
ReplyDeleteஅருமை அய்யா
நன்றிங்க ஜெயகுமார்
Deleteஅருமையான கவிதை..
ReplyDelete// அவளன்றி வாழ்வே இருக்காது
அருகின்றி எனக்கே மகிழ்வேது// வாழ்வும் மகிழ்வும் எப்பொழுதும் இருக்கட்டும் என்று வாழ்த்த வயதில்லை,,இறைவனை வேண்டுகிறேன்!
உங்களின் வேண்டுதலுக்கு நன்றிங்க
Deleteபிச்சுட்டீங்க கண்ணதாசன் சார். ஐஸ் வைக்கறது எப்படின்னு எங்களுக்கும் கத்துக் கொடுங்க சார்.
ReplyDeleteதொடர்ந்து வாங்க தெரிஞ்சிக்குவீங்க நண்பரே.உண்மைதான் நண்பரே
Deletearumaiyilum arumai
ReplyDeletethodara vaazhththukkaL
நன்றிங்க சார்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
Deleteஎன்றும் உமதாக எண்ணமே இனிதாக
ReplyDeleteகுன்றா அன்போடு குளிர்ந்திடுவாள் இன்றே
காண்பீர் இல்லாள் கனிவுதனை நன்றாய்
தோன்றும் உமது நற்கவியாலே!.
மிக அருமை. இதுபோதுமே நல்ல புரிந்துணர்விற்கு!...
வாழ்த்துக்கள் சகோ!...
த ம. 5
உண்மைதான் சகோ.புரிந்துணர்வு இருந்தாலே புத்துணர்ச்சியாய் மகிழ்ந்திடலாம்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ReplyDeleteஇல்லாளின் இலக்கணத்தை அல்லவா
ReplyDeleteசொல்லாலே அழகுபடுத்தினீர்!
பொல்லாத கோபக்காரி,சொல்லாலே வேகக்காரி என்பதையும் எப்படி சொல்வது?
Deleteஉருக்கமான கவிதை
ReplyDeleteஇக்க கவிதை உங்கள் மனைவிக்கா
ஆம்.என் மனைவிக்கே தான் எழுதினேன்
Deleteகவிதை அருமை...
ReplyDelete//முன்பொழுதில் தினம் எழுவாள்
மூன்று வேலையும் சமைப்பாள்//
மூன்று வேளையும்?
ஆமாம் வேளையும் சரிதான்.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி
Deleteமகிழ்ந்திருங்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஅவளின்றி அணுவும் அசையாது :)) இதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே:))
அவளின்றி எனக்கே மகிழ்வேது என்பதின் உட்பொருளே அதுதானே.
Deleteவாழ்த்துக்கு நன்றி
இல்லத்தரசியை சிறப்பித்த கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க சுரேஷ்
Delete''..ஆனாலும் எப்போதும் அன்பானவள்
ReplyDeleteஅகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள்...''
அன்பின் மகிமை கூறிய வரிகள்.
மிக நன்று.
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கம்மா
Deleteஇல்லாள் இன்றி இல்லம் எது அண்ணே....
ReplyDeleteஅழகான வர்ணிப்பு, இது எல்லாருக்குமே பொருந்தும் இல்லையா...!
நிச்சயம் எல்லோருமே மகிழ்ச்சியாகக இந்த கவிதையையே பயன்படுத்தலாம்.அவளின்றி என் வயிறும் செய்யாதே?
Deleteஇப்படி ஒரு இல்லாள் அமைவது அதிசயம்தான் ...அதிலும் ஒரு பதிவருக்கு அமைவது எட்டாவது அதிசயம்தான் !
ReplyDeleteஏன் என்னாச்சு ? இவ்வளவு வருத்தமாய் இருக்கிறீர்கள்?
Deleteஉலகத்தில் மனைவியைப் புகழ
ReplyDeleteஒரு கவிஞராவது கிடைத்தீர்களே...
வாழ்த்துக்கள் கவியாழி ஐயா.
மனைவியை மறந்தவன் மனிதனில்லை
Deleteமறந்தே இருப்பவன் புனிதனில்லை
****கட்டளைப் போடும் எசமானி
ReplyDeleteகஷ்டம் வந்தால் உபதேசி
சித்திரை வெயிலாய் சிலநேரம்
சிடுசிடு வென்றே தகதகப்பாள்***
இந்த "பத்தி"யால் உண்மைகலந்து எதார்த்தமாக இருக்கின்றது உங்க கவிதை! :)
நன்றிங்க வருண்.பெரும்பாலானோர் நல்ல விஷயங்களை மறந்து மற்ற விஷயங்களையே சொல்லுவார்கள்.நான் உண்மையானதை சொல்லியுள்ளேன்
Deleteஎப்போதும் அன்பானவள்
ReplyDeleteஅகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள்
அவளன்றி வாழ்வே இருக்காது
அருகின்றி எனக்கே மகிழ்வேது//
மனையாள் பற்றிய கவிதை அருமை.
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.