விதியா? விஞ்ஞானமா?
எல்லா நொடியும் செல்வதுபோல எல்லோர் மனமும் செய்வதுபோல சொல்லா நிலையில் செய்ததுபோல செய்தால் தவறும் இருந்திடாதோ நல்லது என்றே நாளும் செய்து நடப்பவை அனைத்தும் நல்லதே என்றும் நாட்கள் முழுதும் செய்யும் செயலில் நலிந்த செயலும் உள்ளது முறையா மதிதான் சொல்லும் செயலை செய்து மக்கள் மனதில் இடமும் பிடித்தும் மறந்தும் செய்யும் செயலை எண்ணி மறுபடி எண்ணி வருத்துதல் தவறா பிணியைப் போக்க மருந்தும் உண்டு பிழையாய் அதனால் நிகழும் செயலும் துணையாய் எண்ணி மருத்துவர் ஏனோ தொடர்ந்து இன்னும் கொடுத்தல் நன்றோ எல்லோர் மனமும் ஏக்கம் இன்றி எல்லா தினமும் மகிழ்ச்சி கொண்டால் பொல்லா நிலையும் அன்றி வாழ்ந்தால் பொழுதும் விதியை மறுத்து வாழ்வோம் விதியென்று நான் நம்ப மறுத்தும் விளையாட்டாய் எண்ணி தவிர்த்தால் விஞ்ஞானம் ஏன் என்னைத் திருத்தி வீண் செயலை ஏன் தடுக்கவில்லை (கவியாழி)