தெய்வங்கள்

தெய்வங்கள்

கடவுளைக் கண்டால் சொல்லுங்களேன்.......


கடவுளைக் கண்டால் உடனடியாய்
கண்டவர் வாழ்க்கைச் செழித்திடவே
உடனே வரமும் கேட்பீரே
உயரும் நிலையைப்  பெறுவீரே

கடனே இல்லாத வாழ்க்கையைக்
கஷ்டம் தராத நாட்களை
தடமே முடியா பாதையை
தெரிந்தும் சொல்லச்  சொல்வீரோ

பகைமை இல்லா உறவுகள்
பணமே கேட்கா நண்பர்கள்
குணமே புரிந்த மனைவியும்
கொடுமை சொல்லா பிள்ளையும்

படமே எடுக்கா நாகமும்
பயமே இல்லா பறவையும்
பசுமை எங்கும் மாறாத
படைப்பை கேட்டுப்  பார்த்தீரா

எதிலும் மகிழ்ச்சி கிடைக்கவே
என்றும் முயற்சி செயிக்கவே
எண்ணம் முழுதும் உண்மையாய்
எப்படி உதவி செய்வாரோ

மனதில் என்றும் அன்புடனே
மற்றவர் உயர வார்த்தைகளை
தினமும் ஒருவர் என்றழைத்து
தெரிந்த  வரத்தைக் கொடுப்பாரோ

நன்மை செய்ய சொல்லுங்கள்
நல்லவர் பெருக வாழ்த்துக்கள்
நாளும் மகிழ்ச்சிப் பெறவே
நல்ல வரங்களைக் கேளுங்கள்


(கவியாழி)




Comments

  1. வணக்கம்
    ஐயா.

    சிந்தனை மிக்க வரிகள் நன்றாக உள்ளது
    மேதின வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நல்ல கவிதை.... பாராட்டுகள்.

    ReplyDelete
  3. நம்மூர் மக்கள் நிலையை
    கடவுளிடம் அடியார்கள்
    இப்படியெல்லாம் கேட்டு
    வெளிப்படுத்துமாறு
    அடியார்கள் விடு தூது
    கடவுளிடம் அனுப்புவதாக
    உணரமுடிகிறதே!

    புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா? (http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html) என்ற பதிவிற்குத் தங்கள் பதில் கருத்து என்னவாயிருக்கும்.

    ReplyDelete
  4. அருமையான வரங்கள்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  5. அற்புதம் ஐயா
    கடவுளே இப்படி ஒரு வரத்தினை யாரிடமாவது கேட்டாலும் கேட்பார்

    ReplyDelete
  6. சரி சகோதரா நாளைக்கு காலையில காய் கறி வாங்கச் சந்தைக்கு வாருவார்
    அப்படி வந்தாராயின் நிட்சயம் நீங்கள் கேட்ட விசயத்தைச் சொல்லி விடுகிறேன்
    சரி தானே ?..:)))))) வாழ்த்துக்கள் எதிலும் ஒரு நம்பிக்கை வேண்டும் அந்த நம்பிக்கையைத் தான் ஒரு நிலைப் படுத்த ஒரு சக்தி தேவைப் படுகிறது அதையே கடவுள் என்று மனத்தில் கொள்கிறோம் மனிதனின் தன் நம்பிக்கை தான் எல்லா
    வெற்றிகளுக்கும் மூலதனம் அதைத் திடப்படுத்திக் கொண்டால் வெற்றி நிட்சயம் .பகிர்வுக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் என்
    நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  7. அவரவர் எண்ணங்களைப் பொறுத்தும் நம்பிக்கையைப் பொறுத்தே செயல்பாடுகள் அமையும். நம்பிக்கையில்தான் வாழ்க்கை உள்ளது. நல்ல சிந்தனை.

    ReplyDelete
  8. அழகு கவிதை...வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. வரங்கள் கவிதை தனித்துவம்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்