இதுவும் வாழ்க்கையா?
திருடன்கூட தன்தொழிலை தெய்வமென போற்றிடுவான் அரசியல் வாதியும் அவனைப்போல் அலைந்தே திரிந்தே செய்திடுவான் பதுக்கல்காரன் பதுக்கியதை பழகிப்போன தொழிலென்பான் கல்வியை விற்கும் மோசடியும் கடவுள் சேவை தொழிலென்பான் லஞ்சம் கேட்போன் லட்சியமாய் கொஞ்சம்தானே கொடு என்பான் வஞ்சகம் செய்வோன் வருத்தமின்றி வாழ்க்கை பிழைப்பு இதுவென்பான் தினமும் காலை எழுந்தவுடன் திரிந்து அலைந்தே செய்திடுவான் பொருத்தமான தொழிலென்றே புதிதாய் தொழிலை தேட மாட்டான் சீ......இதுவும் வாழ்க்கையா?