Thursday, 24 January 2013

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

மேலே கண்ட பழமொழி எல்லாத  தமிழ் மக்களுக்கும் தெரிந்த ஒன்று.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள்  ஒரு சில நாட்களில்  இப்படி எண்ணி வருந்துவதுண்டு.இது நமது கலாச்சாரம் மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்படும் நிகழ்வும் உண்மையும் கூட.

சிறிய வயதில் பள்ளி செல்லும்போது பார்த்து பத்திரமாய் திரும்பி வா சாலையை கடக்கும்போது இருபுறமும் பார்த்து  வா என்றும். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டயா ? பள்ளியில் என்ன பாடம் நடத்தினார்கள்  என்றும் அக்கறையோடு விசாரிப்பார்கள் அப்போது நல்ல பிள்ளையாக எல்லாவற்றையும்  ஒன்று விடாமல் சொல்லுவார்கள்.

அதே பிள்ளை கல்லூரிக்கு போகும்போது  நீங்க பத்திரமாய் அலுவலகம் சென்று வாருங்கள் சரியா சாப்பிடுங்கள்என்றும் நான் வீடு திரும்பி  வரும்போது  உங்களுக்கு  ஏதாவது வாங்கி வரட்டுமா என்பது போன்ற  அக்கறையும் அன்பில் முதிர்ச்சியும் தெரியும்.பண்புடன் நடந்து கொள்வார்கள்.
எதிர்காலம் பற்றிய யோசனையையும் கேட்பார்கள்..

வேலைக்கு செல்லும்போது அன்பிற்கு குறைவிருக்காது ,நாம் சாப்பிட விரும்பும்,  விரும்பாததையும் வாங்கி வந்து  நம்மோடு பகிர்ந்துண்டு மகிழ்வார்கள்.சரியாக  ஊதியத்தையும் நம்மிடம் கொடுத்துவிட்டு  செலவுக்கு பணம் கேட்பார்கள். அவ்வளவு பாசமும் நேசமும் பக்தியும் இருக்கும்.நாமும் பெருந்தன்மையாக  செலவுபோக மீதியை வங்கியிலோ  அல்லது முதலீடு செய்ய சொல்லியோ அறிவுறுத்தினால் அதையும் தட்டாது கேட்டு முறைப்படி செய்வார்கள்.

அடுத்தது திருமணம்  இப்போதுதான் நம் அவர்களுக்குள்ள  சுதந்திரத்தை உரிமையை அன்பை பாசத்தை விட்டுக் கொடுக்கும் மன நிலைக்கு நம்மை நாமே தயார்படுத்தி திருமணம் செய்து வைப்பதுவரை கடமை என்ற நிகழ்வில்  நம்மை ஈடுபடுத்திப் பின் அவர்களை தனிமைபடுத்தி விடுகிறோம். குடும்பம் உறவுகள் கடமைகள்  என்ற பந்தத்தை ஏற்படுத்தி விலகி நிற்கவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு வருகிறோம்.

இவ்வளவும் நம்மை நமது பிள்ளைகளுக்காக நம்மை நாமே மனதளவில் ஈடுபடுத்தி அன்புடன் பாசத்துடன்  நம் பிள்ளையே என்றுதான் அனைத்தையும் செய்கிறோம்.அப்படியும் செய்யாத கடமையிலிருந்து தவறும் பெற்றோரும் உண்டு அவர்கள் இவ்வாறான  பந்த பாசத்திற்கு விதிவிலக்கானவர்கள்.சில கட்டாய தவிர்க்க இயலாத சூழ்நிலையில்  இவ்வாறு  இருக்கும் பெற்றோரும் உண்டு.

திருமணம் முடிந்து ஒன்றிரண்டு குழந்தைகள் ஆனபின்பு  அவர்களின் போக்கு மாறியிருக்கும்  அதாவது மனைவி சொல்லே மந்திரம் என்றும் நானும் குடும்பஸ்தன் என்ற பொறுப்பும் அக்கறையும் வந்துவிடும்.அப்போதுதான் தனக்கு தன் குடும்பத்திற்கு  என்ற மனமாறம் ஏற்பட்டு  பெற்றவர்களை விலக்கி வைக்கும் சூழ்நிலைக்குத்  தள்ளப்படுகிறார்கள். மேலும் பணம் சம்பாதிக்க குடும்பத்துடன் வெளியூர் அல்லது வெளிநாடு  சென்று தங்கும் சூழ்நிலை ஏற்படும்

இவ்வாறான சமயங்களில் எதையும் ஆலோசிக்காமல் தனிப்பட்ட முடிவெடுப்பது வயதான பெற்றோர்களை மனம் குமுறவைக்கும்.
அவ்வாறான  நிகழ்வே பிள்ளைகளையும் பெற்றோரையும் பிரிக்கிறது. அதனால் தனிக் குடித்தனம் செல்வார்கள்.அப்போது பெற்றோர் தனிமைபடுத்தி மனம் கலங்கி வருத்தமடைவார்கள்.அப்போதுதான் குடும்ப உறவுகள் பிரிக்கப்பட்டு விடுகிறது.

தனியாக ஏன் கஷ்ட படுகிறீர்கள் நீங்கள் ஏன் முதியோர் இல்லம் செல்லக்கூடாது? அங்கு எல்லா வசதியும் இருக்கிறது,நானும் அடிக்கடி வருவேன் என்றும் அப்படி  வர இயலா விட்டாலும்  கட்டணத்தை கட்டி விடுகிறேன் என்றும் அக்கறையாக சொல்லுவார்கள். அல்லது கவனிக்காமல் உங்களது ஓய்வூதியத்தில் கட்டிவிடுங்கள் என்பார்கள்.

இப்போதுதான் பிள்ளை மனம் கல்லாகிவிடுகிறது.பெற்றோரின்மேல் அக்கறை இருந்தாலும்  பணம் என்னும் சூத்திரதாரி   பாசத்தை விலைப்பேசி "பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு" என்ற  பழமொழியின்  உண்மையான அர்த்ததை உணர்த்துகிறது.
 இப்பழமொழி இன்று நேற்று அல்ல காலங்காலமாய் சொல்லில் இருப்பதுதான்.ஏன் நாளையும் இது தொடரும் என்பதில் ஐய்யமில்லை.

32 comments:

 1. காலச் சூழலுக்கு ஏற்ற படைப்பு
  ஆழமான அழுத்தமான சிந்தனை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வந்ததுக்கும் நன்றி

   Delete
 2. சில குடும்பங்களில் பணமும் சில குடும்பங்களில் புதிய உறவும்தான் மனதை கல்லாக மாற்றுகிறது. அதனால் குழந்தைகளை நாம் வளர்க்கும் போது எந்த வித எதிர்பார்ப்பையும் வளர்த்து கொள்ள கூடாது. அப்படி நினைத்துதான் நானும் என் குழந்தையை வளர்த்துவருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆம் நாம் இப்போது படும் கஷ்டங்களையும் கடந்த கால நிகழ்வுகளையும் சொல்லி வளர்த்தால் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்

   Delete
 3. எல்லாத்துக்கும் பணம்தான் காரணம் என்றாலும், நல்ல மனசு இருக்கவேண்டும், பெற்றோர்களை பார்த்துக்கொள்வது என்பது பெரிய கஷ்டமாக கருதுகிறார்கள். இந்த நிலை நாளுக்கு நாள் கூடிகொண்டே போகிறது.

  ReplyDelete
  Replies
  1. மனமாற்றம் வேண்டும்.பணம் மட்டுமே வாழ்க்கைக்கு தேவையானதல்ல.

   Delete
 4. சகோதரரே...மனதை அழுத்தும் கசப்பான உண்மை.

  அனுபவிப்பதை எல்லாம் எழுதிவிட முடியாது. அந்தப் பெற்றோர் ஒருகாலத்தில அவர்களும் பிள்ளைகளாக அவர் தம் பெற்றோருடன் அல்லது பெற்றோருக்கு இந்நிலை வரக் காரணமாக இருந்திருந்தால் அது அவர்களுக்கு பெரிய விடயமாக இருக்காது.
  ஆனால் அவர்கள் தம் பெற்றோரைத் தம் கண்காணிப்பில் தம்முடன் வைத்திருந்து கடைசிவரை காத்திருந்தால், தாம் முதுமையடைந்து பிள்ளகளுக்கும் அவர்களுக்கும் உள்ள நெருக்கம் தகர்க்கப்பட்டு இடைவெளி அதிகமாகும்போது வரும்வலி கொடூரமானது. அதிலும் முதுமையில் பிணியும் சேர்ந்திட்டால்... மிகக்கொடுமை.

  வலிமிக்க வாழ்க்கை. ஆனால் உண்மை.
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. ஆம் முதுமையில் பிணி தவிர்க்க முடியாதது ஆனால் நன்கு கவனித்துக் கொண்டால் அதையும்கூட தவிர்க்கலாம். நாம் இப்போது படும் கஷ்டங்களையும் கடந்த கால நிகழ்வுகளையும் சொல்லி வளர்த்தால் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்

   Delete
 5. சிறப்பான அலசல் கட்டுரை! பெற்றோரை தாங்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்! பிள்ளைகளை சாடிக்கொண்டிருக்கும் பெற்றோரும் இருக்கிறார்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 6. நாம் இன்று செய்வதைத்தான் நம் பிள்ளைகள் என்பதை புரிந்து நடக்க வேண்டும்

  ReplyDelete
 7. உறுத்தும் யதார்த்தம்

  ReplyDelete
 8. இன்று நேற்று அல்ல காலங்காலமாய் சொல்லில் இருப்பதுதான்.ஏன் நாளையும் இது தொடரும் என்பதில் ஐயமில்லை.

  காலம் செய்த கோலம் ....

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் எதிர்காலத்தில் இன்னும் மோசமாக இருக்கும்,ஆச்சர்யமென்ன

   Delete
 9. நல்ல சிந்தனை ஓட்டம்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்கம்மா,மீண்டும் வருக ஆதரவு தருக

   Delete
 10. வயதானவர்களும் பிள்ளைகளின் சூழ்நிலையைப் புரிந்து
  கொண்டு நடந்தால் அவர்களுக்கு இந்தப் பிரட்சனை வராது
  என்றே நினைக்கிறென்.

  தவிர பிள்ளைகள் பெற்றவர்களை அனாதை இல்லத்தில் சேர்ப்பதற்கு
  காரணம் பணம் தான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  கனித்துக் கொள்ள முடியாத சூழ்நிலையும் வருகிறதே...

  என் கருத்து வயதானவர்களுக்குத் தவறாகக் கூட தெரியலாம்....

  இருப்பினும் இப்படி யோசிக்கத் துாண்டும் படி
  அமைத்தப் பதிவிற்கு மிக்க நன்றி கவியரசு ஐயா.
  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. மனதளவில் கூடவே வைத்துகொள்ள விரும்பினாலும் பணம் சம்பாதிக்கவும் அவர்கள் வெளி மாநிலம் வெளிநாடு செல்ல விரும்புவதால் வயதானவர்கள் தனித்து விடப்படுகிறார்கள் என்பது உண்மைதானே?

   Delete
 11. இந்தக் காலப் பெற்றோர்கள் பிள்ளைகள் மீதான எதிர் பார்ப்பை குறைத்துக் கொண்டுதான் உள்ளார்கள். என்று கருதுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க நண்பரே உண்மைதான் எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்

   Delete
 12. வாழ்வின் நடை முறையில் உள்ள உன்மைகளை விளக்கும் பதிவு! அருமை!

  ReplyDelete
 13. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்! யாரையும் சாராமல் இருக்கப் பழகினால் மட்டுமே முதுமையில் வருத்தப் படவேண்டியிருக்காது. அந்த காலத்திலேயே பிள்ளைகள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பதை இந்த பழமொழி சொல்லும்போது இந்த காலத்தைப் பற்றி சொல்லத்தேவையில்லை. இது தொடர்கதை என்பதுதான் வேதனையான ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. எதிர்பார்த்து ஏமாறுவதைவிட இப்போதே நம்மை தயார்படுத்துதல் என்பதும் உண்மைதான்,ஆனாலும் தொடரக்கூடாது

   Delete
 14. குழந்தை பிறப்பதற்கு முன்பே பிள்ளையாக இருந்தால் என்னைக் காப்பாற்றுவான் என்று ஒரு எதிர்பார்ப்பு.

  இவனை வளர்த்து ஆளாக்கி இருக்கிறேன், படிக்க வைத்திருக்கிறேன் அதனால் என்னை இவன் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பு.

  இதையெல்லாம் விட்டுவிட்டு நான் என் கடமையை செய்திருக்கிறேன் என்று மகனிடம் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது.

  எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைதான் கொடுக்கும். காலம் காலமாக நடந்து வந்தாலும் எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் மறைவதே இல்லை. குறைவதும் இல்லை.

  சிந்திக்க வைத்த பதிவு!

  வாழ்த்துகள்!

  ReplyDelete
 15. எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைதான் கொடுக்கும். //உண்மைதான் எதிர்பார்ப்பு ஏக்கமும் இல்லாவிட்டால் முதுமையும் மகிழ்ச்சிதான்

  ReplyDelete
 16. கால மாற்றத்தின் பல்வேறு கட்டாயங்களுள் இதுவும் ஓன்று. மனதளவில் நினைத்தாலும் செய்ய முடியாத சூழல். எனவே அதற்கான பக்குவத்தை வயதிலேயே வளர்த்துக் கொள்ளுதல் நலம். காலத்திற்கேற்ற பதிவு அய்யா.

  ReplyDelete
 17. என்ன செய்ய நாம் தான் புலம்பியாகவேண்டும்

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்