தெய்வங்கள்

தெய்வங்கள்

இதுவும் வாழ்க்கையா?

திருடன்கூட தன்தொழிலை
தெய்வமென போற்றிடுவான்

அரசியல் வாதியும் அவனைப்போல்
அலைந்தே திரிந்தே செய்திடுவான்

பதுக்கல்காரன் பதுக்கியதை
பழகிப்போன தொழிலென்பான்

கல்வியை விற்கும் மோசடியும்
கடவுள் சேவை தொழிலென்பான்

லஞ்சம் கேட்போன் லட்சியமாய்
கொஞ்சம்தானே கொடு என்பான்

வஞ்சகம் செய்வோன் வருத்தமின்றி
வாழ்க்கை பிழைப்பு இதுவென்பான்

தினமும் காலை எழுந்தவுடன்
திரிந்து அலைந்தே செய்திடுவான்

பொருத்தமான தொழிலென்றே
புதிதாய் தொழிலை தேட மாட்டான்

சீ......இதுவும் வாழ்க்கையா?

Comments

  1. வயிற்றுப்பிழைப்பு ....... வயிற்று எரிச்சல் ...
    வந்த வரை லாபம் என்று செயல்படுகின்றனர் !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அடுத்தவரைக் கெடுத்தும் ?

      Delete
  2. அருமை அருமை
    தலைப்பும் அதற்கு அருமையான தெளிவான
    விளக்கமாய் அமைந்த கவிதையும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார்,உள்மனதிலிருந்து வரும் வார்த்தைகள் தான் இது

      Delete
  3. இப்படியும் இருக்கிறார்கள் என்ன செய்வது ?

    ReplyDelete
    Replies
    1. பாவம் சிலபேர் இதனால் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரிவதில்லை

      Delete
  4. Replies
    1. சார் நீங்க வந்ததுக்கும் கருத்து தந்தகுக்கும் ரொம்ப நன்றிங்க.
      பொறமை என்று கூட சொல்லலாம்

      Delete
  5. சீ......இதுவும் வாழ்க்கையா?

    நன்றாகக் கேட்டீர்கள் கவிஞரே.

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் சிலபேர் உள்ளதால் எவ்வளவுபேரின் மனம் புண்படுகிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும்

      Delete
  6. பழக்கமே வழக்கமாகிப் பின்னர் அதுவே வாழ்வும் ஆகியதே...:)

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் இந்த கேள்வியே.

      Delete
  7. அருமையான கவிதை! சிறப்பான விளக்கம்! நன்றி!

    ReplyDelete
  8. Replies
    1. நன்றிங்கம்மா நீங்க வந்ததுக்கு

      Delete
  9. தலைப்பும் கவிதையும் அருமை

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றிங்க மீண்டும் வாங்க உற்சாகம் தாங்க.

      Delete
  10. இதுவும் வாழ்க்கையா?
    நல்ல கேள்விகள். தொடரட்டும் பயணம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்

      Delete
  11. நல்லதொரு விழிப்புணர்வு

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க அடிக்கடி வந்துபோங்க

      Delete
  12. Hello colleagues, how is all, and what you want to say regarding this post, in my view its really remarkable for me.
    Also visit my weblog - bodybuilding exercises

    ReplyDelete
  13. Replies
    1. நன்றிங்க.நீங்கள் வந்தது ஆதரவு தந்ததும் மிக்க மகிழ்ச்சி

      Delete
  14. அவர்களுக்கு அது தான் வாழ்க்கை!!
    ஈரமற்ற இதயத்தில் பூ பூக்குமென்று எதிர்பார்க்க முடியுமா?
    உங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
    கவிதை அருமை.
    த.ம. 8

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அருணா .மீண்டும் மீண்டும் வந்து மகிழ்ச்சியை தந்து

      Delete
  15. நல்லதொரு கருத்தைப் பகிர்ந்த மற்றுமொரு அருமையான கவிதை உங்களிடமிருந்து! தொடரட்டும்...!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more