தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆம் ! தமிழா .......

வாய்மூடி மௌனியாக
வாழத்தான் வேண்டும்
வந்தோரோயும் சொந்தமாக
வாழ்த்தத்தான் வேண்டும்

கூன் குருடு செவிடு போல
இருக்கத்தான் வேண்டும்
கூடிவாழ்வதில் ஒற்றுமை
கொண்டுத்தான் ஆக வேண்டும்

தொழில் முடங்கி
தொடரத்தான் வேண்டும்
தொல்லைகளைத் தாங்கியும்
சிரிக்கத்தான் வேண்டும்

வந்தோரை வாழச் சொல்லி
வழியின்றி தவிக்க வேண்டும்
வாழ்நாளை  சுருக்கி
வயிரும் காயத்தான் வேண்டும்

சன நாயகம் என்றும்
சகித்துக்கொள்ள வேண்டும்
சமதர்ம சமுதாயம்
போற்றத்தான் வேண்டும்

சாதியும் வேண்டும்
சமத்துவமும் வேண்டும்
மீதியும் கேட்டு மிதிபட்டு
முரண்பட்டும் வாழ வேண்டும்

உண்ண உணவில்லை
உள்ளூரில் சங்கம் வேண்டும்
சாத்திரம் பேசி சகோதர
சண்டையும் வேண்டும்

இருந்தாலும் எல்லாமே
சகித்துவாழ வேண்டும்
எப்போதும் தமிழுக்காக
ஏழ்மையோடும் வாழ வேண்டும்

ஆம் .. தமிழா !
வாழ்ந்துதான் ஆக வேண்டும்



Comments

  1. அருமையான கவிதை ...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க !

      Delete
  2. வாழ்ந்து தான் ஆகவேண்டும் அருமை

    ReplyDelete
    Replies
    1. இன்றைய நிலைமை ஹ்தானே உள்ளது

      Delete
  3. வித்தியாசமாக அருமையாக யோசிக்கிறீர்கள்
    அதை அப்படியே துளியும் பிறளாது
    கவியாக்கியும் விடுகிறீர்கள்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார். நலமாய் உள்ளீர்களா

      Delete
  4. தவறென்பது என் ஹனிப்பட்ட கருத்து

    ReplyDelete
  5. இதுவே இன்றைய யதார்த்தம்.நன்று!

    ReplyDelete
    Replies
    1. உண்மை என்பதும் நிஜந்தானே,நன்றி

      Delete
  6. Replies
    1. இன்றைய சூழ்நிலை அப்படித்தான் உள்ளது

      Delete
  7. வாய் மூடி மவுனியாக...,
    >>
    இப்படித்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நட்பே.இருந்துதான் ஆகவேண்டும்

      Delete
  8. சகிப்புத் தன்மை தேவைதான் சார்.
    அப்போது தான் வாழ முடியும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை நட்பே இருக்க இடமில்லை தமிழனுக்கு இறையாண்மை மட்டும் வேண்டுமாம் நியயம்தானா?

      Delete
  9. ஆமாம் கவியாழி ஐயா.

    வலிகளையும் வேதனைகளையும்
    சுமர்ந்து சுமர்ந்து வாழ்ந்தே
    தமிழர்களுக்குப் பழகிவிட்டது...

    அப்படியிருந்தாலும்
    நீங்கள் சொன்னதுபோல்
    வாழ்ந்துத்தான் ஆகவேண்டும்.!!
    த.ம. 5

    ReplyDelete
  10. ஆம்... சகித்து வாழப் பழகித்தான் ஆக வேண்டும்! அருமையான கருத்தைச் சொன்ன நல்ல கவிதை நண்பா. தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே நண்பரே சகித்துத்தான் வாழவேண்டும் தமிழனாய்?

      Delete
  11. இருந்தாலும் எல்லாமே
    சகித்துவாழ வேண்டும்

    கவிதை மிக நன்று கவிஞரே.

    ReplyDelete
    Replies
    1. புத்தியுண்டு புகழுண்டு இருந்தும் என்ன பயன் தண்ணியில்லை மின்சாரமில்லை நிதி இல்லை எங்கெங்கு காணினும் தமிழனுக்கு நிம்மதியில்லை

      Delete
  12. தமிழன் என்றால் நிம்மதியற்றவன் என்றே அகராதியில் எழதிவிடலாம்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா சொல்வதில் உண்மை உள்ளது. நன்றிங்க அய்யா

      Delete
  13. அருமையான கவிதை ...tm.10

    ReplyDelete
  14. இருந்தாலும் எல்லாமே
    சகித்துவாழ வேண்டும்//

    சரியாக சொன்னீர்கள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா இன்றைய நாட்களில் இப்படித்தான் வாழ்க்கை ஓடிகொண்டிருக்கிறது

      Delete
  15. சகித்து வாழ வேண்டும்...
    உண்மை தான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை புரிந்துகொண்டமைக்கு நன்றி

      Delete
  16. வந்தோரை வாழச் சொல்லி
    வழியின்றி தவிக்க வேண்டும்

    தமிழரின் தனி அடையாளம் ..!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more