உலகமே உறவாகிவிட்டது
உலகமே உறவாகி விட்டது உரிமையுள்ள துணையாகி விட்டது வலைப்பக்கம் தினம் வராவிட்டால் வருத்தமாகி மனம் தவிக்கின்றது இளமைக்கும் முதுமைக்கும் இதுவே இன்பமான தளமாக உள்ளது எத்திசையும் உறவு கொள்ள ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது எண்ணங்களைப் பகிர முடிகிறது எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது சின்ன வயது பையனோடும் சரிசமாய் பேசத் துடிக்கின்றது புதுஉலகம் புதுஉறவை பார்க்க புத்தகமாய் நினைவைக் கோர்க்க எத்தனையோ தூரத்துக்கும் செல்கிறது எழுத்துலகே என்னையும் ஈர்க்கின்றது இத்தனைநாள் மறைத்து வைத்த இன்பமான தருணத்தை ரசிக்கின்றது இனிமையான நினைவுகளை இப்போதும் இனிமையாக எழுத முடிகின்றது