எனக்கும் பெண்ணைப் பிடிக்கும்...
சின்ன வயதில் எனக்கு
சிரித்துப் பேசிப்பழக பிடிக்கும்
எண்ணமதைக் கவிதையாக
எழுதிப் பார்க்கப் பிடிக்கும்
வஞ்சிக்கொடி இடைப் பிடிக்கும்
வண்ண வண்ண உடைபிடிக்கும்
கொஞ்சிப் பேசும் எண்ணமுடன்
கூடிப்பேசும் இடம் பிடிக்கும்
தஞ்சம் தேடும் விழியாளின்
தாக்கும் பார்வைப் பிடிக்கும்
தள்ளி நின்று அவளருகே
தஞ்சம் கேட்கப் பிடிக்கும்
நித்திரையில் அவள் வந்து
நினைவதில ணைக்கப் பிடிக்கும்
நீண்ட நேரம் கனவுலகில்
நேர்மையாக பழகப் பிடிக்கும்
நல்ல நல்ல கவிதைகளை
நண்பியிடம் சொல்லப் பிடிக்கும்
நீண்டநேரம் பேசுகின்றப் பெண்
நட்பினையும் எனக்குப் பிடிக்கும்
அஞ்சி நின்று குறுகுறுன்னு
அவளிழிதலை சுவைக்கப் பிடிக்கும்
ஐந்திரண்டு நிமிடம் அவளழகை
ஐயத்தோடு ரசிக்கப் பிடிக்கும்
எத்தனையோ சொல்ல வேண்டும்
என்நினைவை அழைக்க வேண்டும்
பொக்கிசமாய் நினைவுகளை புனிதமாக
போற்றவேண்டும் பாடவேண்டும்
//தஞ்சம் தேடும் விழியாளின்
ReplyDeleteதாக்கும் பார்வைப் பிடிக்கும்//
எனக்கு இந்த வரி பிடிக்கும்..
இன்னும் கொஞ்சம் மீதமிருக்கு அப்புறமா சொல்லுகிறேன்
Deleteபொக்கிசமாய் நினைவுகளை புனிதமாக
ReplyDeleteபோற்றவேண்டும் பாடவேண்டும்
பொக்கிஷ நினைவுகள்..!
எல்லோரும் விரும்புவதுதானே.வருகைக்கு நன்றி
Deleteஉங்கள் சிந்தனை (வரிகள்) மிகவும் பிடிக்கும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க தனபாலன்
Delete#ஐந்திரண்டு நிமிடம் அவளழகை
ReplyDeleteஐயத்தோடு ரசிக்கப் பிடிக்கும்#
ஐம்பத்திரண்டு வாரம் [அதாவது வருடம் முழுவதும் ]ஐயமின்றி ரசித்தாலும் தவறில்லை !
அவரவர் ரசனையைப் பொறுத்தது.வருகைக்கு நன்றி
Deleteபொக்கிசமாய் நினைவுகளை புனிதமாக
ReplyDeleteபோற்றவேண்டும் பாடவேண்டும்//
பொக்கிச நினைவுகளை போற்றவேண்டும்.
கவிதை நன்றாக இருக்கிறது.
நன்றிங்கம்மா.எல்லாம் பழைய நினைப்புதான்
Deleteபிடித்தவைகளைச் சொன்னவிதம்
ReplyDeleteமிகவும் பிடித்தது
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்
Deletetha.ma 3
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteகவியாழி அவர்கள் பீடு நடை போட்டு முன்னேறுவது மகிழ்ச்சியளிக்கிறது... வரும் காலங்களில் கடுமையான போட்டி நிலவும் என்று பதிவுலக வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன :-)
ReplyDeleteSource http://www.tamilmanam.net/blog_ranking.php?url=kaviyazhi.blogspot.com
:-)
தெரியுமே,ஏற்கனவே நீங்க குழு அமைத்து விட்டீர்களே.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Deleteஅற்புதமான அழகிய கவிதை..
ReplyDeleteரசித்தேன்
நன்றிங்க சௌந்தர்.
Deleteமொத்தத்தில் இந்த கவிதைகளில் உள்ள வரிகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தது...
ReplyDeleteஉங்கள் ரசனைக்கும் நன்றி.தொடர்ந்து வாங்க
Deleteஅருமையான நினைவுகளை அசைபோட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteசரியாச் சொன்னீங்க சுரேஷ்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteஇன்னாது உங்களுக்கு பெண்ணை பிடிக்குமா?! இருங்க அண்ணிக்கிட்ட சொல்றேன்
ReplyDeleteஅவளும் பெண்தானே.பிடிக்கத்தானே வேண்டும்.அவளன்றி அணுவும் அசையாது.
Deleteபிடித்த பட்டியல் இப்போது! பிடிக்காத பட்டியல் எப்போது?
இதற்குமேல் பிடிக்காதப் பட்டியல் தயார் செய்ய வேண்டுமைய்யா.
Deleteநினைவுப் பொக்கிஷம் அருமை
ReplyDeleteஉண்மைதான்.நினைவுகளுக்கும் உயிருண்டு.
Deleteஎனக்கு உங்க கவிதை பிடிச்சு இருக்கு!
ReplyDeleteஉங்களையும் எனக்குப் பிடிக்கும்
Deleteநிழலாய் வந்த யாவுமே
ReplyDeleteநினைவே என்றுகூ றினீர்
வாழ்வில் காணவேண் டுமே
வாழ்ந்தால் ஏக்கம் இல்லையே.
எல்லாம் கிடைத்திட்டால் கிடைத்துந்தால் அதைவிட வேறென்ன...
வாழ்த்துக்கள் சகோ!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கம்மா
Delete
ReplyDeleteவணக்கம்!
கவியாழி கட்டும் கவிதை பிடிக்கும்!
சுவைகோடி நல்கும் சுரந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கய்யா
Delete
ReplyDeleteதமிழ்மணம்
நன்றிங்கையா
Deleteநன்றாக இருக்கிறது. ஆனால் எதற்காக ஐயத்தோடு ரசிக்க வேண்டும்? கனவுலகில் நேர்மையாக என்றால் என்ன?!
ReplyDeleteமிக்கமகிழ்ச்சியானால் வேதனையில் முடிந்தால் என்ன செய்வது?
Deleteஅழகிய கவிதை.
ReplyDeleteநன்றிங்கம்மா
Deleteதொடர்ந்து வாங்க எல்லாமே படிங்க அப்புறமா க்கருத்தை ச்சொல்லுங்க