மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே
மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே மறந்ததை இழந்ததை அறிவாயோ புகழ்சியின் உச்சத்தில் உன்னை-இன்றும் பூமியில் தினமும் வணங்குகிறோம் இயற்கையை மனிதன் அழித்தனால் இளமையில் உழைக்கத் தவறியதால் உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின் உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு மானிடம் மறந்ததை அறிந்தாயோ மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ பிழைக்கவும் வழியே தெரியாமல் பிணமாய் மக்கள் உயிர்வாழும் பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே பயத்துடன் வாழ பணித்தாயோ கவியாழி.கண்ணதாசன் 07.04.2020- சென்னை