தெய்வங்கள்

தெய்வங்கள்

மணிக்கூடும் மனிதக்கூடும்

எத்தனை மணித்துளிகள் இப்போது
என்று கேட்டாலும் தப்பேது
முப்போதும் ஓடினாலும் தப்பாது
முறையாக ஓடிடுவாய் எப்போதும்

ஒவ்வொரு மணித் துளியும்
ஓய்வுக்காய் என்றுமே தவறாது
ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல்
ஒருபோதும் தடுமாறி நிற்காது

நொடியுமே தவறாக ஓடவில்லை
நிமிடமும் தனக்காக நின்றதில்லை
மணியுமே அவசரமாய் சென்றதில்லை
மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை

ஏழையாய் இருந்தாலும் எப்போதும்
எல்லோரும் அவசியமாய் தன்னோடு
எப்போதும் துணையாக வந்திடும்
எந்நாளும் சரியாகக் காட்டிடும்

இருதயம்போல எப்போதும் ஓடிடும்
இன்முகமாய் காலத்தைக் காட்டிடும்
இதையாரும் வெறுக்கிறவர் இல்லார்
இலவசமாய் தருகிறவர் உண்டா--கவியாழி--

Comments

 1. /// மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை... //

  வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே

   Delete
 2. இருதயம் நின்னுட்டா நேரம் பார்க்க வேண்டிய தேவை இல்லை. மணிக்கூடும், மனிதக்கூடும் அருமையான ஒப்பீடு

  ReplyDelete
 3. இருதயம்போல எப்போதும் ஓடிடும்
  இன்முகமாய் காலத்தைக் காட்டிடும்

  மணிக்கூடு -இனிமை..!

  ReplyDelete
 4. மணிக் கூடு சொல்லும் தத்துவத்தை உணர்ந்தால் எந்த மனிதக் கூடும் சாதிக்கக் கூடும் !

  ReplyDelete
 5. எல்லாம் நேரம் ....அப்படின்னு சொல்வாங்க தானே...

  ReplyDelete
  Replies
  1. அப்படியேத்தான் நண்பரே

   Delete
 6. காலத்தின் அருமையை
  அருமையாய்ச் சொன்னவிதம்
  மனம் கவர்ந்தது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

   Delete
 7. அடிக்கடி பார்க்கிற கடிகாரத்தை பற்றின அழகான கவிதை.

  ReplyDelete
  Replies
  1. ஆம்.உண்மைதான் அபயா அருணா

   Delete
 8. ”மணிக்கூடும் மனிதக்கூடும்” தலைப்பே கவிதை பேசுகிறது அய்யா. அருமையான வரிகள். ஆழமான கருத்துக்கள்,. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் நன்றிங்க பாண்டியன்

   Delete
 9. வணக்கம்
  ஏழையாய் இருந்தாலும் எப்போதும்
  எல்லோரும் அவசியமாய் தன்னோடு
  எப்போதும் துணையாக வந்திடும்
  எந்நாளும் சரியாகக் காட்டிடும்
  கவிதை அருமை வரிகளும் அருமை வாழ்த்துக்கள் ஐயா...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே

   Delete
 10. காலத்தின் முக்கியத்துவத்தை அருமையாக எடுத்துச் சொல்லும் கவிதை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க மாதேவி.தொடர்ந்து வாங்க

   Delete
 11. ஒவ்வொரு மணித் துளியும்
  ஓய்வுக்காய் என்றுமே தவறாது
  ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல்
  ஒருபோதும் தடுமாறி நிற்காது
  // அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சுரேஷ் தங்களின் அருகைக்கு நன்றிங்க

   Delete
 12. நல்லதொரு சிந்தனை சகோ!

  அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ

   Delete
 13. மணிக்கூடு, மனிதக் கூடு - நல்லதொரு ஒப்பீடு!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...நீங்களும் கவிதையாய் சொல்லிவிட்டீர்கள்

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more