தெய்வங்கள்

தெய்வங்கள்

வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது


வலைப்பக்கம் தினமும் பார்க்காவிட்டால்
வருத்தம் மிகுந்தே  தொடர்கின்றது
வாழ்கையில் இழந்ததாய் நினைக்கிறது
வேதனை மிகுந்தே தவிக்கின்றது

எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டு 
எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது
சின்ன வயது பையனோடும்
சேர்ந்திருக்க இன்றும்  முடிகின்றது 

இத்தனைநாள் மறைத்து வைத்த
இன்பமான தருணத்தை ரசிக்கின்றது
இனிமையான நினைவுகளை நன்றே
 இப்போதும் எழுத துடிக்கின்றது

வெளிநாட்டு உறவின் வேதனையும்
விருப்பமில்லா வாழ்வின் அவசியமும்
வேடிக்கைக் காட்டிச் செல்கிறது
வேதனை பலதும் மறைகிறது

வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது
வசந்தமும் மீண்டும் தொடர்கிறது
வயதும் வேண்டி நினைக்கிறது
வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது=====கவியாழி=====

Comments

 1. நேற்று வலையில் கவியாழி மீன் அகப் படவில்லையே தேடிக் கொண்டு இருந்தேன் ,இதோ நீங்களே வந்து தன்னிலை விளக்கம் தந்துள்ளீர்கள் !மகிழ்ச்சி தொடரட்டும் !
  த.ம1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 2. வலையுலகில் கிடைப்பதை கவிதையாகப் பொழிந்து விட்டீர்கள். நன்று.

  ReplyDelete
 3. அழகு அய்யா. வலைப்பக்கம் வாழ்த்துக்களையும் அதன் விளைவுகளால் தன்னம்பிக்கையும் மலரச் செய்கிறது.
  //சின்ன வயது பையனோடும்
  சேர்ந்திருக்க இன்றும் முடிகின்றது// உங்களுக்கு மட்டும் இப்ப என்ன வயசு ஆகிடுச்சினு நினைக்கீறீங்க! நீங்கள் என்றும் இளமை தான் எண்ணங்களிலும் செயலிலும்.. வழக்கமாக நான் அய்யா என்று உங்களை அழைப்பதுண்டு. இன்று முதல் சகோதரர் என்றே அழைக்க மனம் எண்ணுகிறது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க சகோததரே...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
  2. எனக்கும் மிக்க மகிழ்ச்சி சகோதரனே

   Delete
 4. அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்!
  வலையினால் வந்த வசந்தம் மனதில் இனிமையாய் பரவியிருப்பது உண்மை தானே?

  ReplyDelete
  Replies
  1. ஆம்.உண்மைதான் மகிழ்ச்சியாய் இருக்கிறது

   Delete
 5. வலைப்பக்கம் தினமும் பார்க்காவிட்டால்
  வருத்தம் மிகுந்தே தொடர்கின்றது
  ஒப்புகொள்ள வேண்டிய உண்மை .

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சிதானே மிஞ்சுகிறது

   Delete
 6. வலை உலகம் தனி சுகம்தான்

  ReplyDelete
  Replies
  1. எல்லோருக்குமே பொருந்துமே

   Delete
 7. வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது
  வசந்தமும் மீண்டும் தொடர்கிறது
  வயதும் வேண்டி நினைக்கிறது
  வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது

  வலையும் ..வாழ்த்தும் ...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 8. வலையுலகம் வசந்த உலகமன்றோ
  வார்த்தைகளுக்குள் அடங்காத வசீகரம் இங்கு!

  உணர்ந்து தந்த கவிதை சிறப்பு!

  வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 9. விருப்பமான ஒன்றில் மகிழ்ச்சிதானே! வாழ்க்கை சிறப்பாய் நகரட்டும்..!

  ReplyDelete
 10. அருமை... இனிமையான வசந்தம் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க திருமதி.வெங்கட்

   Delete
 11. சிறப்பு., தொடரட்டும்..

  ReplyDelete
 12. //வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது
  வசந்தமும் மீண்டும் தொடர்கிறது// உண்மைதானே!
  அருமை ஐயா! பலரும் உணர்வதை கவியாக்கி விட்டீர்கள்!பகிர்விற்கு நன்றி! த.ம.10

  ReplyDelete
  Replies
  1. எல்லோருக்குமே இருக்கும் உணர்வு

   Delete
 13. வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது
  வசந்தமும் மீண்டும் தொடர்கிறது
  வயதும் வேண்டி நினைக்கிறது
  வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது//
  வாழ்க்கைச் சிறப்பாய் நகர்வது மகிழ்ச்சியே!
  மகிழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 14. வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது
  வசந்தமும் மீண்டும் தொடர்கிறது
  வயதும் வேண்டி நினைக்கிறது
  வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது//

  மிக்க சந்தோஷம்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 15. எனக்கும் இதே நிலைமை தான்... வலைப்பக்கம் வரவில்லை என்றால் வருத்தமாக இருக்கிறது..... தினமும் வாருங்கள்... வாழ்த்துங்கள்.... வாழ்த்துக்கள்.... த,ம,12...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 16. வணக்கம்
  ஐயா
  வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது
  வசந்தமும் மீண்டும் தொடர்கிறது
  வயதும் வேண்டி நினைக்கிறது
  வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது

  மனதை தொட்ட கவிதை நன்று வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 17. கவிதை அருமை...
  வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 18. சரியாய் சொன்னீர்கள் ஐயா...வலை அனைவரையும் ஒரு கூரையின் கீழ் அருமையாய் இணைத்துள்ளது...

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more