தெய்வங்கள்

தெய்வங்கள்

நானும்இறைவனே

படைப்பில் நானும் இறைவனே
பண்பாய் நானும் தினமுமே
பாட்டாய் எழுதித் தருவேனே
பதிலும் தினமும் கொடுப்பனே

உருகி உருகி எழுதியும்
உணர்ச்சி மிகுந்தே சொல்லியும்
உண்மைத் தன்மை மாறாது
உள்ளதை நன்றே சொல்வேனே

எதுகை மோனை எழுத்திலே
என்றும் தொடர்ந்தே காப்பேனே
எல்லா நேரமும் நல்லதாய்
எதையும் எழுதி விடுவேனே

காதல் காமம் எழுதுவேன்
கண்ணீர் வந்திட சொல்லுவேன்
ஊர்கள் சென்றதை சொல்லுவேன்
உணர்ச்சிப் பொங்கிட எழுதுவேன்

மனதில் தோன்றும்  எல்லாமே
மகிழ்ச்சிக் கொண்டே  எழுதியே
மக்கள் என்னை ஒதுக்கும்வரை
மகிழ்வாய் கவிதை படைப்பேனே


அழகாய் கவிதை படைப்பதால்
அன்பாய் நாளும் இருப்பதால்
அனைவரும் என்னை விரும்புவதால்
அதனால் நானும் இறைவனேComments

 1. அந்தக் கண்ணதாசன் சொன்னதை நீங்களும் சொல்லிவிட்டீர்கள்.
  படைப்பவர் அனைவரும் பிரம்மாக்களே.
  நல்ல கவிதை

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே நீங்களும் கடவுளே

   Delete

 2. அழகாய் கவிதை படைப்பதால்
  அன்பாய் நாளும் இருப்பதால்
  அனைவரும் என்னை விரும்புவதால்
  அதனால் நானும் இறைவனே

  படைப்பாளிகள் இறைவனே..!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதாங்க படைப்பாளிகள் அனைவரும் பிரம்மாக்களே

   Delete
 3. நான் ஒருவன் இங்கே இருக்கும் போது எனக்கு போட்டியாக நீங்களுமா ?வாருங்கள் ,இந்த மானிட ஜென்மங்களை ஒரு வழி பண்ணுவோம் !

  ReplyDelete
  Replies
  1. சரியாச்சொன்னீங்க நண்பரே

   Delete
 4. concept நன்றாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. உண்மையைத்தான் சொன்னேன் அபயா அருணா

   Delete
 5. அட...! அருமை ஐயா... மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே

   Delete
 6. ரசித்தேன் மிக. அதிலும்//உருகி உருகி எழுதியும்
  உணர்ச்சி மிகுந்தே சொல்லியும்
  உண்மைத் தன்மை மாறாது
  உள்ளதை நன்றே சொல்வேனே//மிக அருமையும் எளிமையும்கூட

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ஷைலஜா.தொடர்ந்து வாங்க

   Delete
 7. ஒவ்வொருவருக்கும் அவரவரைப் பொறுத்த மட்டில் நானும் கடவுளே என்னும் நினைப்பு உண்டு என்பார்கள்.

  நல்ல விடயமதைக் கவியாக்கியமை சிறப்பு!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ

   Delete
 8. படைப்பதினால் நான் இறைவன்! கவிஞர் சொன்னதை கவியாழியும் சொல்லி பெருமிதம் அடைவது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே

   Delete
 9. அழகாய் கவிதை படைப்பதால்
  அன்பாய் நாளும் இருப்பதால்
  அனைவரும் என்னை விரும்புவதால்
  அதனால் நானும் இறைவனே//
  அருமை.

  ReplyDelete
 10. படைத்தல் தொழிலைச் செய்வதால் நீங்களும் பிரம்மாவே. சிறப்பான கவிதை அய்யா! பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நன்றிங்க நண்பரே

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more