தெய்வங்கள்

தெய்வங்கள்

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமே

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமா
உலகினில் மீண்டும் திரும்புமா
பழகிய நாட்களும் மறக்குமா
பாசமும் நேசமும் கிடைக்குமா

அழகிய நாட்களை மறந்திட
அன்பை மீண்டும் கொடுத்திட
பழகியே நேசத்தை காட்டிட
படைத்தவர் உயிரை மீட்டிட

தினமும் மகிழ்ச்சியே தந்திட்ட
திங்களும் வணங்கிட செய்திட்ட
மனிதருள் தெய்வமாய் திகழ்ந்திட்ட 
மகனாய் என்னை படைத்திட்ட

உறவை மறந்து பிரிந்த
உண்மையில் அன்பைப் பகிர்ந்த
உணர்ச்சியில்  நான் வருந்த
உடையோரை எங்கே மறைந்தீர்

தினம் தோறும் வேண்டுகின்றேன்
திங்கள் தோறும் அழைக்கின்றேன் 
விரும்பாது சென்ற பிதாக்களே
வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன்


---கவியாழி---

Comments

 1. வாழ்த்தினால் நல்லதுதான்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தவேண்டுமென நம்புவோம்.தங்களின் வருகைக்கு நன்றிங்க பாமரன் அவர்களே

   Delete
 2. தினம் தோறும் வேண்டுகின்றேன்
  திங்கள் தோறும் அழைக்கின்றேன்
  விரும்பாது சென்ற பிதாக்களே
  வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன்

  வாழ்த்துகளை பிரார்த்தித்துப் பெறுவோம்..!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அம்மா.மனமுருகிப் பிராத்தனை செய்தால் நன்மையே கிடைக்குமென நம்புவோம்

   Delete
 3. Replies
  1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி

   Delete
 4. தினம் தோறும் வேண்டுகின்றேன்
  திங்கள் தோறும் அழைக்கின்றேன்
  விரும்பாது சென்ற பிதாக்களே
  வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன்//


  சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க

   Delete
 5. ''..வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன்..''
  vaalththu...
  Vetha.Elangathilakam

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க

   Delete
 6. உணர்ந்தவர் பிரிந்தால் துயரமா
  உலகினில் மீண்டும் திரும்புமா
  பழகிய நாட்களும் மறக்குமா
  பாசமும் நேசமும் கிடைக்குமா

  அருமையான கவிதை வரிகள்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க

   Delete
 7. கவிதை வரிகள் மிக அருமை! உங்கள் மனதின் இறைஞ்சலுக்கு நிச்சயம் அவர்களின் வாழ்த்துக்கள் கிடைக்கும்!!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க

   Delete
 8. நல்ல வரிகள்.....

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க

   Delete
 9. உங்களைப் படைத்த சிற்பிகளின் அருள் நிச்சயம் கிடைக்கும் !

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க

   Delete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. என,இருப்பின் பொருள் பொருத்தமாக இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. என்னைத் திருத்தியமைக்கு நன்றிங்கயா

   Delete
 12. உணர்ச்சியில் நானும் வருந்த
  உடையோரே எங்கே மறைந்தீர்

  ReplyDelete
  Replies
  1. மாற்றிவிட்டேன் அய்யா.

   Delete
 13. உறவைச் சொல்லி அழுகின்றோம்! உணர்ச்சி மயமான கவிதை!
  கவிதையில் வரும் ” விரும்பாது சென்ற பிதாக்களே ” – என்பது சரியா?

  ReplyDelete
  Replies
  1. ஆம்.சரிதான். நீங்கள் இறந்து போங்கள் என்று சொல்லியா இறந்தார்கள்.அவர்கள் இன்னும் வாழவே ஆசைப்பட்டேன்

   Delete
  2. மன்னிக்கவும்! கவிதையில் வரும் ” விரும்பாது சென்ற பிதாக்களே ” – என்பதில் “பிதாக்களே” என்ற பன்மைச் சொல்லைக் குறித்தே சரியா என்று .கேட்டேன். ” பெற்றோ்ரே” என்றுதானே இருக்க வேண்டும் என்பது எனது கருத்து..மற்றபடி ஒன்றும் இல்லை! பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

   Delete
 14. எனக்கும் திரு இளங்கோ சுட்டிக் காட்டியிருக்கும் வரிகள் கொஞ்சம் வருத்தத்தை தந்தன.
  வேறு வார்த்தைகளை போடுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. சரியான வார்த்தைதான் பயன்படுத்தி உள்ளேன்.அவர்களின் இறப்பை நான் விரும்பவில்லையே

   Delete
  2. கவிஞருக்கு! மீண்டும் மன்னிக்கவும்! அவர்களின் இறப்பை நீங்கள் மட்டுமல்ல, யாருமே விரும்ப மாட்டார்கள். “பிதாக்களே” என்றால் ” தந்தைமார்களே” என்று பொருள் வரும். நமது அப்பா அம்மாவை குறிக்காது. நான் கொச்சையாக சொல்ல விரும்பவில்லை. புலவர் அய்யாவிடம் கேட்டுப் பாருங்கள்! நான் வாதுக்கு வரவில்லை.

   Delete
 15. வணக்கம்
  கவிதையின் வரிகள் மனதை உருகவைத்து விட்டது அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.அதனால் உயிருள்ளபோதே அவர்களின் மனம் கோணாமல் நடந்துகொள்வதுதான் நன்று

   Delete
 16. மனதில் ஆழத்தில் புதைந்த எண்ணங்களை படைப்பாக்கித் தரும் போது அது படிப்பவர்கள் மனதையும் நெருடித் தான் செல்கிறது. பிரிவு என்பதே துயரம் அதிலும் உணர்ந்தவர் பிரிந்தால்! கேட்கவா வேண்டும். மனதை உருக்கிய வரிகளுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் அய்யா.

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more