தெய்வங்கள்

தெய்வங்கள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள்
--------------------


எப்பொழுது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க
எல்லோரும் தெருவிலே பட்டாசு வெடிச்சிருக்க
குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைந்திருக்க-சேவல்
கூவாமல் எல்லோரும் எழுந்திருக்கும் திருநாள்

ஏழைபணக்காரன் என்றதொரு வித்தியாசம்
எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள்
காலைமாலை என்ற கணக்கு இல்லாமல் - மக்கள்
காசுசெலவழிக்கும் தீபாவளி ஒருநாள்

புத்தாடைக்கு புதுமஞ்சள் சாந்திட்டே அணிந்திட்டு
புதுநாளைக் கொண்டாட மாப்பிளையும் அழைத்திட்டு
வித்தாரம் பேசாமல் வீதியெங்கும் கூறாமல் -சண்டை
விநியோகம் செய்யாத தீபாவளி நன்னாள்

காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியும்
ஓசிப்பொருள் வாங்காமல் உழைத்தே வைத்திருந்து
புத்தம் புதிதாய் துணிகள் வாங்கி மகிழ்ந்தே -நாளை 
பெரிசு இளசுகளும் போற்றிடும் தீபாவளிநாள்

இனிப்புகளும் காரமும் இல்லாத வீடில்லை
இரண்டுமுறை தின்னாலும் இன்றுமே தப்பில்லை
நெருப்புடனே திரிந்தாலும் தப்பாக நினைக்காமல்-ஆசி
நெஞ்சார வாழ்த்துகின்ற தீபாவளித் திருநாள்

இந்துக்கள் அல்லாது எல்லோரும் ஒற்றுமையாய்
இந்தியத் திருவிழாவை  எல்லா நாடுகளிலும்
இல்லத்தின்  உறவுகள் ஒன்றாகச் சேர்ந்து-மகிழ்வாய்
இனிமையாய் கொண்டாட விரும்பும்நாள்

வருடத்தில் இந்நாள் வந்தோரை வரவேற்று
வாஞ்சையுடன் உணவளித்தும்  உபசரித்தும்
வாழ்கையிலே வேதனைகள் கோபமும் மறந்து 
வாழ்த்துக்களை எல்லோரும் பகிரும்நாள்(தீபாவளிப் பரிசுப் போட்டிக்காக)-----கவியாழி----

Comments

 1. நீங்கள் கலந்து கொள்ளவில்லையே என்று நினைத்திருந்தேன்... கவிதை அருமை... கவிதையை (இணைப்பை) நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அதிகாலை துயிலெழும் பழக்கம் உள்ளவர்களால்தான் இப்படி எழுத முடியும்.! பரிசுப் போட்டியில் கவிதை வெல்லட்டும்!
  எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. வணக்கம்
  ஐயா
  கவிதை அழகு வாழ்த்துக்கள்

  இனியதீபாவளி வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. "காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியும்"...என்று எழுதிரிருக்கிறீர்களே, நான் கிரெடிட் கார்டில் பட்டாசு வாங்கியது உங்களுக்கு எப்படித் தெரிந்தது? நல்ல கவிதை. வாழ்த்துக்கள். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

  ReplyDelete
 5. அருமையான தீப ஒளிக் கவிதை பாவலரே...

  ReplyDelete
 6. வாழ்கையிலே வேதனைகள் கோபமும் மறந்து
  வாழ்த்துக்களை எல்லோரும் பகிரும்நாள்
  மிகச் சரி .
  தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வருடத்தில் இந்நாள் வந்தோரை வரவேற்று
  வாஞ்சையுடன் உணவளித்தும் உபசரித்தும்
  வாழ்கையிலே வேதனைகள் கோபமும் மறந்து
  வாழ்த்துக்களை எல்லோரும் பகிரும்நாள்

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
  மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

  ReplyDelete
 9. போட்டியில் ஜெயிக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 10. //வாஞ்சையுடன் உணவளித்தும் உபசரித்தும்
  வாழ்கையிலே வேதனைகள் கோபமும் மறந்து
  வாழ்த்துக்களை எல்லோரும் பகிரும்நாள்// உண்மை!
  வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா!

  ReplyDelete
 11. அருமையான கவிதை

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. தீபாவளிப் பலகாரமாய் மிகவும் தித்திப்பாக இருக்கிறது கவிதை!

  மிகவே ரசித்தேன்!

  போட்டியில் வெற்றிபெறவும் தீபாவளி உங்களுக்கும் சிறப்பாக அமையவும்
  இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. உண்மையில் தித்திக்குது கவி
  கவிஞரை வாழ்த்திடுதே புவி !
  வாழ்த்துக்கள் இரண்டிற்குமாக !

  ReplyDelete
 15. அருமை,
  பரிசு பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. அருமையான படைப்பு! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. தீபாவளி கவிதை அருமையாக உள்ளது கவியாழி ஐயா.
  தீபாவளி வாழ்ததுதக்கள்.

  ReplyDelete
 18. அழகான வரிகள்...
  அழகிய கவிதை...

  வெற்றிப்பெற வாழ்த்துக்கள்...

  மேலும் தங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

  ReplyDelete
 19. வருடத்தில் இந்நாள் வந்தோரை வரவேற்று
  வாஞ்சையுடன் உணவளித்தும் உபசரித்தும்
  வாழ்கையிலே வேதனைகள் கோபமும் மறந்து
  வாழ்த்துக்களை எல்லோரும் பகிரும்நாள்//
  அருமையான கவிதை.
  போட்டியில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. சகோதரருக்கு வணக்கம்..
  அழகான கவிதை அய்யா. நல்லதொரு கருத்துக்களைத் தாங்கிய நல்கவியைத் தந்தமைக்கு எனது அன்பு ந்ன்றிகள். போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்..
  தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 21. ' இந்துக்கள் அல்லாது எல்லோரும் ஒற்றுமையாய்
  இந்தியத் திருவிழாவை எல்லா நாடுகளிலும்
  இல்லத்தின் உறவுகள் ஒன்றாகச் சேர்ந்து-மகிழ்வாய்
  இனிமையாய் கொண்டாட விரும்பும்நாள்

  வருடத்தில் இந்நாள் வந்தோரை வரவேற்று
  வாஞ்சையுடன் உணவளித்தும் உபசரித்தும்
  வாழ்கையிலே வேதனைகள் கோபமும் மறந்து
  வாழ்த்துக்களை எல்லோரும் பகிரும்நாள்'
  அருமையான வரிகள் .
  அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

  ReplyDelete
 22. பரிசு பெற வாழ்த்துகள்!இனிய தீபாவளி வாழ்த்துகளும்!

  ReplyDelete
 23. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. இந்திய நாட்டின் ஒற்றுமைத் திருநாளாக தீபாவளியை சித்தரித்தது நன்றாக இருக்கிறது.
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
  தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. வணக்கம்

  தங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

  போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....

  என்பக்கம் புதிய பதிவாக கவிதைப்போட்டியில்பங்குபற்றியவர் தகவல் விபரம்-http://2008rupan.wordpress.com

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 26. தங்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

  ReplyDelete

 27. வணக்கம்...!
  வருடத்தில் இந்நாள் வந்தோரை வரவேற்று
  வாஞ்சையுடன் உணவளித்தும் உபசரித்தும்
  வாழ்கையிலே வேதனைகள் கோபமும் மறந்து
  வாழ்த்துக்களை எல்லோரும் பகிரும்நாள்

  அழகாக எல்லாம் எடுத்துரைத்தீர்...! அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்...!
  தீபாவளி வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்....!

  ReplyDelete

 28. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 29. மிகவும் அழகிய கவிதை ஐயா...

  ReplyDelete
 30. அருமை கண்ணதாசன் சார் பரிசு பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் நல்ல கவிதை

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more