தெய்வங்கள்

தெய்வங்கள்

திரண்ட பாறையுமே தள்ளி

தினந்தோறும் மகிழ்ச்சியாய் ஓடி
திசையெங்கும் செழிக்க வைத்து
வனத்தையும்  வயலையும் காத்து
வானம் மகிழ  வந்தாய்

பலஊர்கள் மைல்கள்  தாண்டி
பாமரனும் மகிழ்வாய் வாழ
பரந்து விரிந்த பாதைவழியே
பகலிரவு ஓடிவந்து மகிழ்ந்தாய்

கிடந்த கற்கள் மலைகள்
கடந்தும்  உடைத்தே நடந்து
அடர்ந்த வனம் செழிக்க
அமைதியாக உருட்டிச் சென்றாய்

திரண்ட பாறையுமே தள்ளி
திருட்டுத் தனமாய் கடத்தி
வறண்ட இடத்திலும்  சென்று
வழியெங்கும் சமன் செய்தாய்

கண்குளிரக் காட்சி தந்த 
கடவுளாய் போற்றி வந்த 
தண்ணீரில் கடந்து வந்து
தவமாகக் காத்து நின்றாய்

சுரண்டலுக்கு ஆசைப் பட்ட
சுயநலக் காரர்களின் கண்ணில்
சூழ்ச்சிக்குத்  தப்ப மறந்து
சுரண்டி சுரண்டி மடிந்தாய்

தினந்தோறும் மணல் அள்ளியதால்
திசையெங்கும் வறட்சி வந்தே
பருவம் மாறிப் பகலவனின்
பார்வையால் பாமரனும் வருந்துகிறான்

நிலைமாறக் காரணம் தெரிந்தும்
நீயும் மௌனம் காப்பதேன்
நிம்மதியைக் கெடுத்தவரை ஏன்
நேரம் கொண்டே அழிக்கவில்லை

விலைபேசும் நிலைக்கே சென்றாயே
வேதனை வேதனையே  எமக்கு
விதியில்லை வீரமில்லைத் தடுக்க
வீணர்களின்  விலைவாசி நாடகத்தில்

>>>>>> கவியாழி <<<<<<Comments

 1. சுயநலக்காரர்களின் சூழ்ச்சி அவனையே ஒரு நாள் சூழும்..

  நல்லதொரு கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும். நன்றி

   Delete
 2. நிலைமாறக் காரணம் தெரிந்தும்
  நீயும் மௌனம் காப்பதேன்
  நிம்மதியைக் கெடுத்தவரை ஏன்
  நேரம் கொண்டே அழிக்கவில்லை

  சரியான கேள்வி ..!

  ReplyDelete
  Replies
  1. நேரம் வரும் நிம்மதியும் பிறக்கும்

   Delete
 3. தமிழ்மணம் வோட்டு பிளஸ் 1 +

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு. நன்றி

   Delete
 4. ஆற்றின் மகிமையையும் அதன் அழிவையும் அழகாக வரித்து விட்டீர்கள்...!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 5. //நிம்மதியைக் கெடுத்தவரை ஏன்
  நேரம் கொண்டே அழிக்கவில்லை// சரியான கேள்வி..விடைதருவார் யாரோ?
  அருமையான கவிதை ஐயா!
  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. எப்படி முடியும் அவர்களையும் விலைக்கு வாங்கி விடுவார்கள்

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. #சுரண்டி சுரண்டி மடிந்தாய்#சுரண்டப் பட்டு மடிந்தாய் என்பதே சரியாக இருக்கும் !
  இன்றைய சூழ் நிலையை நன்றாய் சொன்னீர்கள்!
  த.ம 3

  ReplyDelete
 8. தினந்தோறும் மணல் அள்ளியதால்
  திசையெங்கும் வறட்சி வந்தே
  பருவம் மாறிப் பகலவனின்
  பார்வையால் பாமரனும் வருந்துகிறான்.நல்ல வரிகள் ...அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு. நன்றி

   Delete
 9. அழகிய ஆற்றினைக் கவிப் பொருளாக்கி
  அருமையான கற்பனை!

  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும். நன்றி

   Delete
 10. இப்படி சுரண்டி, சுரண்டி காசு, பணம் சேர்த்து பிள்ளைகளுக்கு வச்சுட்டா மட்டும் போதுமா!? சுத்தமான தண்ணி, உணவு, காத்துக்கு எங்க போவாங்கன்னு கொஞ்சமும் யோசிக்கலியே நாம்!!

  ReplyDelete
  Replies
  1. சந்திரமண்டலத்துக்கும் போவாங்களோ?

   Delete
 11. வணக்கம்
  கவிதையின் வரிகள் மனதை கவர்ந்தவை வாழ்த்துக்கள்...ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும். நன்றி

   Delete
 12. அருமையான கவிதை இன்றைய நிதர்சனத்தை அப்படியே படம்பிடிக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும். நன்றி

   Delete
 13. இன்றைய பொருளாதார நிலைமையையும்
  நடக்கும் நாடகத்தையும் உரக்கச் சொல்லும்
  நல்ல கவிதை பாவலரே...

  ReplyDelete
  Replies
  1. அரிசியல்வாதிகளின் சமீபத்து வியாபாரமே இதுதானே.
   தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 14. ஆற்றைக் கருவாக்கி ஆற்றாமையைக் கவியாய் தந்த அன்பு சகோதரரின் கவிதை அருமை அருமை. அழகிய கவியைத் தந்தமைக்கு நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. ஆம்.உண்மைதான்.தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 15. சுரண்டிக் கொண்டே இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்! அருமையான படைப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 16. //தினந்தோறும் மகிழ்ச்சியாய் ஓடி

  திசையெங்கும் செழிக்க வைத்து

  வனத்தையும் வயலையும் காத்து

  வானம் மகிழ வந்தாய்//

  கவர்ந்த வரி!

  ReplyDelete
 17. தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more