தெய்வங்கள்

தெய்வங்கள்

புகழோடு மீண்டும் வருவேன்......

எதாச்சும் சொல்ல நினைச்சா
எல்லாமே மறந்து போச்சு
யாராச்சும் கேட்க நினைச்சா
என்னான்னு சொல்லித் தாங்க

பேரெல்லாம் ஊரெல்லாம் எனக்குப்
புரியாமல் தெரியாமல் ஆச்சு
பெரும்பாலும் எல்லோர்க்கும் இதனால்
வருத்தமே பெருகிப் போச்சு

ஏதோதோ எழுத விரும்பி
எந்நாளும் ஆர்வம் இருந்தும்
போதாத நேரத்தாலே தொடர்ந்து
பொழுதும் எழுத முடியல

தீராத தலைவலியே  நிதமும்
தீர்க்காமல் தொடர்ந்து நின்று
ஆறாத மனக் குறையாய்
அன்றாடம் முன்னாள் வருது

தீராத மனக் குறையைத்
தீர்க்கவே தொடர்ந்து சென்று
போராடிச் ஜெயிப்பேன் மீண்டும்
புகழோடு மீண்டும் வருவேன்

(கவியாழி)

Comments

  1. ஓய்வெடுத்துக் கொண்டு வாருங்கள்....

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தங்கள் வருகையும் மகிழ்ச்சியைத் தருகிறது

      Delete
  3. உடல்நிலையைக் கவனித்துக்கொண்டு மீண்டும் வாருங்கள் ஐயா, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தங்கள் வருகையும் மகிழ்ச்சியைத் தருகிறது

      Delete
  4. போராடிச் ஜெயிப்பேன் மீண்டும்
    புகழோடு மீண்டும் வருவேன்

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. உடல் நலம்பேணி காத்திட்டு வருக ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தங்கள் வருகையும் மகிழ்ச்சியைத் தருகிறது

      Delete
  6. வாருங்கள் ஐயா! காத்திருக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தங்கள் வருகையும் மகிழ்ச்சியைத் தருகிறது

      Delete
  7. வணக்கம் சகோதரரே!

    நீண்ட உடல்நலம் நீபெற்றுச் சேவைசெயத்
    தேடிப் புகழ்வரும் சேர்ந்து!

    நலம்பெற வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தங்கள் வருகையும் மகிழ்ச்சியைத் தருகிறது

      Delete
  8. திருக்கோயிலூர் - மடப்பட்டு ( விழுப்புரம் மாவட்டம் ) - விழுப்புரம் சாலையில் பெரிய செவலை என்கிற ஊர் உள்ளது. அங்கு, கல்பரதேசி என்னும் சித்தராலயம் உள்ளது. அங்கு வந்து ஓரிரவு தங்கி மனமுருகி பிரார்த்தியுங்கள்! நலம் விளையும்! நன்மைகள் தேடி வரும்! நலம் பெற எம் கண்ணனைப் பிரார்த்திக்கின்றேன் ஐயா!

    ReplyDelete
  9. உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்
    தாங்கள் முழுதும் குணமடைந்து வரும் நாளுக்காகக் காத்திருப்போம்
    விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தங்கள் வருகையும் மகிழ்ச்சியைத் தருகிறது

      Delete
  10. கவலைப்படாதீர்கள். காலம் மாறும். நன்றாகச் சாப்பிட்டு நடமாடுங்கள். நண்பர்களிடம் உரையாடுங்கள். சரியாகிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தங்கள் வருகையும் மகிழ்ச்சியைத் தருகிறது

      Delete
  11. என்ன ஆச்சி... ? உடல் நலனில் அக்கறை எடுங்க.

    ReplyDelete
    Replies
    1. உடம்நன்றிங்க.தங்கள் வருகையும் மகிழ்ச்சியைத் தருகிறதுபெல்லாம் நல்லாத்தான் இருக்கு

      Delete
  12. உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.தங்கள் வருகையும் மகிழ்ச்சியைத் தருகிறது

      Delete
  13. ஓய்வு தேவை!( உடலுக்கும் உள்ளத்திற்கும்)

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்