Showing posts with label கவிதை/சமூகம்/வாழ்க்கை. Show all posts
Showing posts with label கவிதை/சமூகம்/வாழ்க்கை. Show all posts

Tuesday, 16 December 2014

தூக்கி செல்ல நால்வர்........

உடலும் கழிவாய் மாறும்
உயிரும் பிரிந்து போனால்
உணர்ந்தே நாளும் வாழ்ந்தால்
உண்மை வாழ்க்கை  புரியும்

தூக்கி செல்ல நால்வர்
துவண்டே அழவும் சிலபேர்
தொடர்ந்தே வந்திட உற்றார்
தொலைத்த குடும்ப உறவோர்

வாழ்ந்த வாழ்க்கை  போற்றி
வாழ்த்தும் நண்பர் கூட்டம்
வணங்கிச் செல்லும் மக்கள்
வருந்தி அழைத்தால் வருமா

ஆக்கம் செய்த பணிகள்
அனைத்தும் முன்னே வருமாம்
அன்பால் செய்த செயலே
அருகில் நின்று அழுமாம்

ஏக்கம் இல்லா வாழ்வும்
ஏழ்மை உணரா உயர்வும்
என்றும் நன்மை செய்யா
எவரும் நம்மை மதியார்

தூக்கம் விழித்துப் பார்க்கத்
தோழமை வேண்டும் உலகில்
தொடர்ந்தே குழிவரை வருவோர்
துயரம் கண்டிட வேண்டும்

உயிரும்  உள்ள போதே
உரிமை  கொண்டோர் மகிழ
உணர்வை மதித்துச் செய்தால்
உடலும் மனமும் அழுமே

எல்லா உயிரும் இதுபோல்
ஏந்தல் செய்வது மில்லை
பொல்லா மனித இனமே
புரிந்தால் வாழ்க்கை நலமே


---------கவியாழி----------Wednesday, 10 September 2014

புகழோடு மீண்டும் வருவேன்......

எதாச்சும் சொல்ல நினைச்சா
எல்லாமே மறந்து போச்சு
யாராச்சும் கேட்க நினைச்சா
என்னான்னு சொல்லித் தாங்க

பேரெல்லாம் ஊரெல்லாம் எனக்குப்
புரியாமல் தெரியாமல் ஆச்சு
பெரும்பாலும் எல்லோர்க்கும் இதனால்
வருத்தமே பெருகிப் போச்சு

ஏதோதோ எழுத விரும்பி
எந்நாளும் ஆர்வம் இருந்தும்
போதாத நேரத்தாலே தொடர்ந்து
பொழுதும் எழுத முடியல

தீராத தலைவலியே  நிதமும்
தீர்க்காமல் தொடர்ந்து நின்று
ஆறாத மனக் குறையாய்
அன்றாடம் முன்னாள் வருது

தீராத மனக் குறையைத்
தீர்க்கவே தொடர்ந்து சென்று
போராடிச் ஜெயிப்பேன் மீண்டும்
புகழோடு மீண்டும் வருவேன்

(கவியாழி)

Monday, 25 August 2014

இனிப்பான மனிதர்கள்

வெள்ளைச் சோறு மட்டுமே
விரும்பி உண்டு வந்தோர்
வேதனையாய் இன்று ஏனோ
வேண்டாமெனத் தள்ளி வைத்து

பச்சைக் காய்கறிகள் தின்று
பகல் வருமுன்னே விழித்து
பாதம் வலிக்க நடந்தும்
பயிற்சிகள் பலவகை செய்தும்

உணவைக் கொஞ்சமாய்  குறைத்து
உலர் பழங்கள் அதிகம் சேர்த்து
உண்டதை எல்லாமே மறந்து
உடலை வருத்தியே தினமும்

காலை மாலையென பகிர்ந்தே
கணக்காய் உணவைத் தின்று
வேளை வரும்போது மாத்திரையை
வேதனையுடன் தின்று வாழும்

இனிப்பை மறந்தும் இனிமையாய்
இன்னும் மன உறுதியுடன்
சிறப்பாய்  வாழ்ந்து வரும்
சொந்தங்களே நட்புகளே வாழ்க


(கவியாழி)

Monday, 21 April 2014

அவரவர் வாழ்கையை வாழுங்கள்

அம்மா வாழ்ந்த காலத்திலும்
அடிமை யாக இருந்ததில்லை
அப்பா தாத்தா பாட்டியிடம்
அன்பாய் இருக்கத் தவற வில்லை

எல்லோர் சொல்லையும் கேட்டறிந்து
எந்த முடிவும் செய்திடுவார்
இல்லா நிலையிலும்  உள்ளதையே
இனிமை யாகச் சொல்லிடுவார்

வசதி யான வாழ்க்கைக்கு  
வெளியில் வேலைக்குச் சென்றதில்லை
வருவோர் போவோர் நண்பரிடம்
வீட்டுச் சண்டையைச் சொன்னதில்லை

இப்போ நிலைமை மாறியது
இனிமை வாழ்வும் மறைந்ததுவே..
தப்பாய் எண்ணும் பழக்கத்தால்
தனியாய்ச் செல்லும் நிலையானது

பிரிந்தே வாழ்ந்து வந்தாலும்
பொறுப்பாய் இணைந்தே உழைத்தாலும்
இருந்தும் சண்டை வருகிறதே
இல்லற வாழ்வும் கசக்கிறதே

அமைதி யான  வாழ்க்கைக்கு
அன்பாய்ப் பரிவாய்ப் பேசுங்கள்
அடுத்தவர் பேச்சைக் கேட்காமல்
அவரவர் வாழ்க்கையை வாழுங்கள்


Monday, 14 April 2014

சித்திரை மகளே வருக.........

சித்திரை மகளே வருக
சீர்மிகு வாழ்வைத் தருக
சீரிய பணிகள் செய்தே
சிறப்புற ஆசியும் தருக

கற்பனை செய்யும் அறிவை
காலமும் எனக்குத் தருக
கற்றதில் உள்ள குறையை
கற்கத் தெளிவைத் தருக

அற்ப மனித பிறப்பில்
அன்பாய் நாளும் இருக்க
அப்பன் ஆத்தா ஆசிரியராய்
அறிவை இன்னும் தருக

உலகில் உள்ள உயிர்கள்
உயர்வாய் என்றும் இருக்க
உழவன் வாழ்வை சிறக்க
உடனே மழையைத் தருக

எத்தகு பணியும் எளிதில்
ஏற்றம் கிடைக்கச் செய்து
எளிமை வாழ்வை  வாழ
என்னுடன்  துணையாய்  வருக

நேசமும் நட்பும் சூழ்ந்தே
நிறையாய் வாழ்க்கை வாழ
நித்திரை நாளும் கிடைத்து
நிம்மதி மனதில் தருக

(கவியாழி)Saturday, 15 February 2014

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு....


துணையாய் தொடர்ந்து வந்து
தோழனாய் நட்பு கொண்டு
மனதில் குடிகொள்ளும்
மனைவியாய்இருக்க வேண்டும்

பெற்றவரை பிள்ளைகளைப் போல்
பேதமும் பார்க்காது விருப்பமாய்
உற்றாரும் வாழ்த்திச் செல்லும்
உற்றவளின் குணமே வேண்டும்

பிறி தொன்றும் கேட்காத
பிறரைப் பற்றிக் கூறாத
அன்புடனேஆசை கொள்ளும்
அன்னையாய் இருக்க வேண்டும்

ஆசை அன்புக் கென்று
அகம் மகிழ பிள்ளையுமே
அளவான செல்வமும் சேர்த்து
அன்பான குடும்பம் வேண்டும்

பணி முடிந்து வரும்போது
பணம் மட்டும் கேட்காத
குணமுள்ள மனைவி வேண்டும்
குடும்பம் மகிழத் துணைவேண்டும்

(கவியாழி)

Monday, 10 February 2014

பகட்டு வாழ்கையால் பயனேது ?

ஆயிரம் பலதும் சேர்த்தாலும்
ஆயுளும் அதிகம் இருந்தாலும்
ஆலயம் தோறும் பணமாக
ஆண்டவன் மகிழக் கொடுத்தாலும்

ஊரும் பெரும் செல்வாக்கும்
உயர்ந்த பொருளை கொண்டாலும்
உற்றார் அருகில் இல்லாத
உயர்ந்த வாழ்க்கை பலனுன்டா

பேரைச் சொல்லி அழைத்திடவும்
பேதைமை இன்றி பழகிடவும்
நாளும் அருகில் மகிழ்வுடனே
நல்ல நண்பர்கள் வேண்டுமடா

வாடா போடா என்றழைக்க
வாழ்ந்த கதைகளை தெரிவிக்க
ஆத்தா அப்பனும் அருகிலின்றி
ஆனந்த வாழ்வு கிடைத்திடுமா

சுற்றமும் சொந்தமும் துணையின்றி
சொர்க்கமே உனக்கு கிடைத்தாலும்
பற்றும் பாசமும் கிடைக்காத
பகட்டு வாழ்க்கையால் பயனேது

(கவியாழி)

Thursday, 9 January 2014

மனிதநேயம் உள்ளவராய் வாழ்ந்திடுங்கள்அடுத்தவரின் குறையை எண்ணி
அனுதினமும் ரசிக்கதோன்றும்
படித்தறிந்த மானிடனே நீ
பண்ணுவது நல்லதில்லை

எடுத்தெறிந்து செய்வதனால்
ஏழுபிறப்பும் பாதித்ததாய்
படித்தறியா முன்னோர்கள்
பழமொழிகள் சொன்னார்கள்

பணம்காசு கொடுக்காமல்
பண்புகளை சொன்னாலே
குணம்மாறி வாழ்ந்திடுவான்
கும்பிடுவான் தெய்வமென

வழியின்றித் தவிப்போருக்கு
வயிற்றுப்பசி போக்கிடுங்கள்
வாழ்வதற்கு நல்லவழி
வணங்கும்படிச் செய்திடுங்கள்

நாளிதுவே வாழ்வதற்கு
நாளைக்குத் தெரியாது
நாளைவரை உடன்வருவார்
யாரேனவேத் தெரியாது

வேலைக்கு மாத்திரையும்
வேதனைகள் மறைவதற்கு
இருக்கும்வரை  மனிதநேயம்
இருப்பவராய் வாழ்ந்திடுங்கள்


Saturday, 7 December 2013

உடலும் கழிவாய் மாறும்...

உடலும் கழிவாய் மாறும்
உயிரும் பிரிந்து போனால்
உணர்ந்தே நாளும் வாழ்ந்தால்
உண்மை வாழ்க்கை  புரியும்

தூக்கி செல்ல நால்வர்
துவண்டே அழவும் சிலபேர்
தொடர்ந்தே வந்திட உற்றார்
தொலைத்த குடும்ப உறவோர்

வாழ்ந்த வாழ்க்கை  போற்றி
வாழ்த்தும் நண்பர் கூட்டம்
வணங்கிச் செல்லும் மக்கள்
வருந்தி அழைத்தால் வருமா

ஆக்கம் செய்த பணிகள்
அனைத்தும் முன்னே வருமாம்
அன்பால் செய்த செயலே
அருகில் நின்று அழுமாம்

ஏக்கம் இல்லா வாழ்வும்
ஏழ்மை உணரா உயர்வும்
என்றும் நன்மை செய்யா
எவரும் நம்மை மதியார்

தூக்கம் விழித்துப் பார்க்கத்
தோழமை வேண்டும் உலகில்
தொடர்ந்தே குழிவரை வருவோர்
துயரம் கண்டிட வேண்டும்

உயிரும்  உள்ள போதே
உரிமை  கொண்டோர் மகிழ
உணர்வை மதித்துச் செய்தால்
உடலும் மனமும் அழுமே

எல்லா உயிரும் இதுபோல்
ஏந்தல் செய்வது மில்லை
பொல்லா மனித இனமே
புரிந்தால் வாழ்க்கை நலமே


---------கவியாழி----------
Friday, 6 December 2013

எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் ......

பாம்பும் தேளும் பூரானும்
பார்த்தே ஓடி மறைந்திடுமாம்
பகையாய் நினைத்தே அடித்தாலே-மிரட்டிப்
பயந்தே நம்மைக் கடித்திடுமாம்

வீம்பாய்க் காளையை மிரட்டினால்
விரைந்தே வந்து முட்டிடுமாம்
விலங்குகள் பலதும் அதுபோல-மிரண்டு
வீணாய் நம்மைத் துரத்திடுமாம்

வேண்டா வெறுப்பாய் பழகினால்
வேற்றுமை வந்தே பிரித்திடுமாம்
விஷயம் இன்றி வாதிட்டால்-முடிவில்
வீணே சண்டை வந்திடுமாம்

ஈன்ற  பொருளைக் காத்தாலே
இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம்
இல்லை என்றே சொல்லாமல்-இயன்றால்
இருப்பதைக் கொடுப்பதும்  நலமாகும்

சோதனை  துயரம் ஏழ்மையுமே
சாதனை செய்ய வழிதருமாம்
சோம்பலை நீக்கி உழைத்தாலே-பலனாய்
செல்வம் சேர்ந்தே மகிழ்ந்திடுமாம்

எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
எதிராய் காரியம் கெட்டிடுமாம்
எதிலும் பொறுமை  காத்தாலே-அதனால்
எல்லா நன்மையும் கிடைத்திடுமாம்


......கவியாழி........Monday, 4 November 2013

பேயும் வாழட்டும் மகிழ்ந்தே.............

பேயும் இருந்தால் நன்றே
பேதைமை கொள்வோரைக் கடித்தே
போதையும் கொண்டே மீண்டும்
பேயும் வதைக்கட்டும் தொடர்ந்தே

அரக்கனை அழிக்க வேண்டாம்
அவனையே வாழவும்  வைத்தால்
அத்தனை திருடனையும்  கொன்றே
அகிலமும் சிறக்கும் நன்றே

உணவில் கலப்படம் செய்வோர்
உரிமையை  மறுத்திடும் முதலாளி
ஊரையே சுரண்டும் தலைவன்
ஊழலை வளர்க்கும் மனிதன்

சோம்பலை விரும்பும் மக்கள்
சொன்னதைக் கேட்கா  இளைஞன்
சுரண்டலைச் செய்யும்  அரசியலார்
சுற்றித் திரியும் சோம்பேறி

உழைக்க மறுக்கும் கணவன்
ஊதாரி செலவிடும் பெண்கள்
உடலை வருத்தா ஊழியன்
உண்மையே சொல்லாத் திருடன்

நாளையை விரும்பா மாணவன்
நாணயம் இல்லா ஆசிரியர்
நலிந்தவர் வாழ்வைச் சுரண்டியே
நாளும் வட்டிக் கேட்பவன்

போன்றோரைக் கொன்று வதைக்கவே
போக்கிடம் இன்றி அலைந்தே
பொழுதும் கொல்லுதல் செய்தே
பேயும் வாழட்டும் மகிழ்ந்தே=======கவியாழி======

Tuesday, 6 August 2013

சுற்றமும் நட்பும் எங்கே?

சுகம்வரும் செல்வமும் சேரும்
சுற்றமும் நட்பும் சூழ்ந்துவரும்
அகம் மகிழ அன்புடன் தேடிவரும்
அனைத்தும் மகிழ்ந்தே  பணம்தரும்

வினைசேரும் விதியும் மாறும்
வீழ்ச்சி கண்டபின்னே தேடும்
விடியலே கேள்வி கேட்கும்
விரும்பிய எல்லாமே போகும்

சுமையோடு கடன் சேர்ந்தால்
சுற்றம் எங்கே நட்பு எங்கே
சோதனையை மறப்பதெங்கே
சொந்தமும் சென்ற இடமெங்கே

நிம்மதி எங்கே  நீதிஎங்கே 
நித்தமும் மகிழ்ந்த நண்பநெங்கே
பணம் எங்கே பாசம் எங்கே
பகைவனைத் தவிர தெரிந்தவனங்கே

அற்பமாய் வாழும் வாழ்க்கையை
அன்றே மறந்து திருந்திடு
ஆணவம் அழியும் நேரத்தில்
அதிசயம் நடக்கும் புரிந்திடு 

உலகம் ஒருநாள் மாறும்
உள்ளம் மகிழ்ச்சியில் சேரும்
கஷ்டமும் தீர்ந்தே இனிமேல்
கவலை எனக்கும் தீரும்

நேற்றைய வாழ்வும் உணமையல்ல
நடந்ததும் முடிந்ததும்  வாழ்க்கையல்ல
நேர்மை மட்டுமே நிரந்தரமாய்
நித்தமும் என்னையே  மாற்றிடுமே

நானும் ஜெயிப்பேன் வாழ்வேன்
நன்றிமறாவா நண்பனாய் இருப்பேன்
நாவில் நல்லதை சொல்வேன்
நாடும் போற்றிட வாழ்வேன்Friday, 2 August 2013

நல்லவங்க சேரும் கூட்டம்.....01.09.2013

வில்லு வண்டி பூட்டிகிட்டு
வீதிவழிப் போற மச்சான்
சொல்லுறத கேளுங்களேன்
சித்த நேரம் நில்லுங்களேன்

நாலுஊரு தாண்டி நானும்
நல்ல சேதி கேட்கப்போறேன்
நின்னுகிறேன்  சொல்லுபுள்ள
நேரம் பார்த்துப் போகணுமே

பல்லு இல்லா கிழவனுமே
பார்த்து என்னை சிரிக்கிறாங்க
பத்திரமா போயி சீக்கிரம்
பார்த்தசேதி சொல்லு மச்சான்

மத்த ஊருபோல இல்ல
மாமன் பெத்த செல்லக்கிளி
சத்தியமா நானும் வந்து
சங்கதிய சொல்லப் போறேன்

நம்ம தமிழ் நாட்டுலத்தான்
நடக்கப் போற கூட்டத்துக்கு
நாலுஊருத் தள்ளி நீயும்
நாலுசேதி கேட்டுவாயேன்

உள்ளதையே சொல்லப் போனால்
ஊருக்குப் போறவேலை
 நல்லவங்க சேரும் கூட்டம்
சென்னையிலே நடக்குதடி

சீக்கிரமா போயிவந்து
சீருகொண்டு வாங்க மச்சான்
சேலையோட தாலியோட
சீர்திருத்த மணம் பண்ணிக்கலாம்
Wednesday, 31 July 2013

ஆழாக்கு சாம்பல் மட்டுமே....

பணத்தை சேர்க்கும் பயனையும்
பசியில் சேர்த்துப் பாருங்கள்
பகிர்ந்தே உணவைப் போடுங்கள்
பயனோர் மகிழ்வய் காணுங்கள்

இந்தப் பிறவியில் வாழ்வதையே
இனிமை யாக்கி  உணருங்கள்
இறுதி நாட்களில் மகிழுங்கள்
இன்பம் மனதில் சேருங்கள்

மகிழ்வாய் வாழப் பழகுங்கள்
மனதை போற்றி உணருங்கள்
மக்கள் துயரைத் போக்கியே
மானிடம் புகழ வாழுங்கள்

இனிமேல் புதிதாய் விதிசெய்வீர்
இனிமை பணத்தில் இல்லாமல்
தலைமேல் பணத்தை சுமக்காமல்
தவிர்ப்பீர் விட்டுச் செல்வதையே

ஆழாக்கு சாம்பல் மட்டுமே
அறிந்தோர் கையில் கிடைக்குமே
அதற்காய் பணமேன் சேர்க்கணும்
அதையும் தவிர்த்தும் சாகனும்

Sunday, 28 July 2013

உடல் முழுதும் வியர்த்தாலும்.....

 

 (நன்றி கூகிள்)

பாய்ந்து வரும் காளையது
பார்தவுடன் வியந்து விடும்
பருவமான  உடல தனால்
புகுந்து விளையாடி வரும்

கருப்பு வெள்ளை நிறமாக
காளையது துணிந்து நிற்கும்
கன்னியரைக் கண்டுவிட்டால்
கழுத்தை தூக்கி முட்டவரும்

ஊர் முழுக்க நின்றாலும்
உரியதையேத் தேடிவிடும்
உள்ளமதைக் கொள்ளை யாக்கி
உறவுக்காக் ஏங்கி நிற்கும்

பரிதவிக்கும் நிலத்திலே
 பக்குவமாய் விதை விதைக்கும்
 பாத்தியிலே விதைத்து விட்டு
பாதயதைத் தேடித் போகும்

உருவமதைக் கண்டவுடன்
உடல் முழுதும் வியர்த்தாலும்
விதியதனை எழுதி விட்டு
விரைவாகப் பதுங்கி விடும்Saturday, 20 July 2013

நினைத்தேன் சொன்னேன்....

ஒதுங்கி வாழ்வது தவறு
ஒற்றுமை காப்பதே சிறப்பு
ஒன்றி ணைந்து  சேர்ந்தால்
ஒளிமயமாகு முன் வாழ்வு
                   *****
சினம் கொள்ள மறந்தால்
சிரிப்பை துணைக்கு அழைத்தால்
செழிப்பை முகத்தில் காணலாம்
சிறப்பாய் உடலைப் பேணலாம்
                     *****
வாழ்க்கை என்றப் பாதை
வட்டமானது வண்ணம் மிகுந்தது
எளிமையும் மனதில் ஏழ்மையானது
எப்படியும் வாழலாம் வாழ்ந்திடு
                     *****
உள்ளம் சொல்வதைக் கேட்டு
உரியவர் மனதை அறிந்து
செய்யும் செயலை துணிந்து
செய்திடும் காரியம் ஜெயமே
                      ******
Saturday, 13 July 2013

வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல.........

வாகனம் ஓட்டிச் செல்லும்போது
வருகிறக் கோபத்தில் மறுந்துடாதீர்
வண்டியை வேகமாய் ஒட்டாதீர்
வழியில்  தவறாய் செலுத்திடாதீர்

தலையில் கவசம் அணிவதனால்
அழகும் கெட்டுப் போகாதே
தடுமாறிக் கீழே விழுந்தாலும்
தலையும் எங்கும் மோதாதே

கண்டவர் அருகே வந்தாலும்
கண்களை வேறங்கும் திருப்பாதீர்
கைபேசி அழைப்பையும் தவிர்த்திடுவீர்
கவனமாய் வாகனம் செலுத்திடுவீர்

நீண்ட தூரம் செல்லுகையில்
நிதானம் எப்போதும் இழக்காதீர்
இருக்கைப் பட்டையை அணிந்தே
இயல்பாய் வாகனம் செலுத்திடுவீர்

வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல
வாழ்க்கை உண்டு மறந்துடாதீர்
தாகம் தண்ணீர் இடையிடையே
தவிர்த்தே வாகனம் செலுத்திடுவீர்
Thursday, 11 July 2013

இந்நாள் தவிப்பு....

இதயமெல்லா மின்றுத் தவிக்கிறதே
ஈன்றவர் நினைவு வருகிறதே
தாண்டிய தூரமும் தெரிகிறதே
தாங்கியோரை நினைத்தேத் தவிக்கிறதே

என்னைத் தவிக்க விட்டு
எங்கே சென்றீர்கள் கடவுளே
விண்ணைத் தாண்டி வரவா
வேதனையைச் சொல்லி அழவா

வேண்டுவேன் உங்களை  மீண்டுமே
வேதனைத் தாங்கியேக் காத்திட
மீண்டுமென் உங்களின் அன்பையே
மீட்டிடப்  பிறந்திட விரும்புதே

ஈன்ற இந்நாள் தெரியுமா
என்னை அறிந்திட முடியுமா
வேண்டுவேன் உங்களது ஆசியை
வேதனைத் தீர்த்திட வாருங்கள்

விதியை மாற்றியே வாருங்கள்
வெளிச்சமும் எனக்குத் தாருங்கள்
தாண்டிய நாட்களை நானுமே
திரும்பிப் பார்த்தே வாழ்கிறேன்

அடுத்தப் பிறவி யாதென
அறிந்து நீவீர் சொல்வீரோ
தடுத்தே என்னை உம்முடன்
துணைக்கு அழைத்துச் செல்வீரோ


Saturday, 6 July 2013

வறுமைப் போக்கிட உதவுங்கள்....

காலைச் செய்திகள் படிப்பதில்லை
கடமை சீக்கிரம் முடிப்பதில்லை
வேளைதோறும் உணவையும் மறந்து
விழுந்தேன் வலையில்  தினந்தோறும்

முக்கிய நிகழ்வுகள் மறந்தாலும்
முகப் புத்தகம் பார்ப்பதாலே
முகமே பார்க்கா நண்பருக்கு
முதலில் வணக்கம்  சொல்லுகிறேன்

இடமோ ஊரோ தெரியாமல்
இளமை முதுமை அறியாமல்
இணைந்தே இன்றும்  நண்பர்களாய்
இனிதாய் பழகி வருகிறேனே

தலைமைப் பண்பும் வளர்த்திடவே
தகவல் இணைந்தே பகிர்ந்திடவே
தினமும் நடக்கும் நிகழ்வுகளே
துணையாய் நமக்கு கிடைக்கிறதே

வலையைத் தினமும் பாருங்கள்
வாழ்க்கை முறையை நாடுங்கள்
வறியவர் மாணவர் இல்லார்க்கும்
வறுமைப் போக்கிட உதவுங்கள்

Friday, 28 June 2013

தெய்வத்தின் கருணைக் கிடைத்திட.....

ஏழரைச் சனியின் தாக்கத்தால்
ஏற்றம் குறைந்ததாய் சொல்வோரே
காலையில் எழுந்ததும் கடவுளுக்கும்
கற்பூரம் காட்டி வணங்குவோரே

இறைவன் செயலைக் குறைப்பதற்கே
எல்லா கோவிலும் செல்வோரே
ஏழை எளியவர் தவிப்பதற்கு
இறைவன் காட்டும் வழியென்ன

வாழ்க்கைச் சக்கரம் இதுவன்றோ
மேலும் கீழும் வருமன்றோ
வாழும் முறையுயே என்றிருந்து
வந்தத் துயரையும் வென்றிடலாம்

உள்ளக் குறையை சரிசெய்தால்
உயரும் வழியைக் கண்டிடலாம்
நல்லச் செயலை நாள்தோறும்
நம்பிச் செய்தால் உயர்ந்திடலாம்

தெய்வம் தங்கும் கோவிலாக
தினமும் மனதை வைத்திருந்து
தெரிந்தோர் உயர வழிசெய்தால்
தெய்வத்தின் கருணைக் கிடைத்திடுமே