தெய்வங்கள்

தெய்வங்கள்

"காளியூட்டு " நாவல் அறிமுகம்-சிறு குறிப்புகள்

      கடந்த வாரம் 24.02.2015 அன்று தமிழ் புத்தக நண்பர்களால்  ஆழ்வார்பேட்டையில்  உள்ள " TAG " சென்டரில்  இந்நூல் அறிமுக விழா நடைபெற்றது .  எழுத்தாளர் திருவாளர்.மா.அரங்கநாதன் எழுதிய இந்நாவலை காவ்யா வெள்ளிவிழா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் இரண்டாவது நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

"பழந்தமிழ் வீரியமும் புதுமையும் இயைந்த மொழிநடை ,சொற்களைச் செதுக்கி சொற்களுட்புகுத்தும் தனித்துவம்  கொண்ட ஆளுமையில் " படைக்கப் பட்டிருக்கிறது



அய்யா நா. கந்தசாமி அவர்கள் அணிந்துரையில் குறிபிட்டது:

   நூலாசிரியர் சிறு கதைகளிக் கவிதை மாதிரியே  பண்டைய மரபின் படி யெழுதியுள்ளார்."அறிய அறிய அறியமுடியாத அளவில் மர்மமும் புதிருங்கொண்டு இருப்பது" ,"வாழ்க்கைப் போலவே எளிதாகவும்-புரிவது மாதிரியே புரிபடாமலும் " என்று அவர்தம் குறிப்பில் சொல்லியுள்ளார்.


திருவாளர் .மாசிலாமணி,கலைஞன் பதிப்பகத்தார் சொன்னது;

"மண்ணோடும் மரபோடும் வாழ்க்கையின் யதார்த்தம் மேலோங்குகிறது.இவர் எழுத்து இயல்பு சொற்களுக்கு ஊடாக மனோதத்துவ ஒலி ஊடுருவிக் கொண்டிருக்கும்"

முனைவர்.எழுத்தாளர்.தமிழச்சி தங்கபாடியன் ஆய்வுரையில் சொன்னது;




ஒரு எழுத்தாளருக்கு இன்னொரு படைப்பாளியின் பாராட்டுக் கிடைப்பது அரிதான ஒன்று ,பண்முகங்கொண்ட  எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் இன்னொரு எழுத்தாளரின் எழுத்தாளுமைத் திறன்பற்றி ஒரு பெரிய பாராட்டுப் பத்திரமே (44 நிமிடங்கள் )வாசித்த ஒவ்வொரு நிமிடமும்  புதுப்புதுச் சொற்களை பயன்படுத்தினார் , ஆம் .நூலாசிரியரின் வார்த்தை ஜாலங்களை விட இவரின் ஆய்வுரையில் நல்லத் தமிழ் சொற்களை பயன்படுத்தியிருந்தார் 


நூலாசிரியர் இறுதியாக ....
தான் கிராமத்திலிருந்து வந்தவன்  என்றும் ,இன்னும் எனது கிராமத்தின் மீதான  அக்கறை இருப்பதாகவும் ,இந்நூல் நாஞ்சில் நாட்டின் பற்றியதாகவும்  இதில்  குழுவன்,ராப்பாடி,கோமரத்தாடி  போன்றோருடன் முத்துக் கருப்பனின் பாத்திரம் மேலோங்கி இருந்ததாக குறிப்பிட்டார்.இந்த கதையில் பிராமணனை விட சாதிவெறி அதிகமாய் இருப்பதை கதையாசிரியர்  கூறினார். 

79 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் பழமையான சொற்களைக் கையாண்டிருப்பது நூலாசிரியரின் புத்தக வாசிப்பின் அனுபவத்தையும்  பல நூல்களை படித்து  வார்த்தைகளை கையாண்ட விதம் குறித்து நூல் குறிப்பில் எழுதியுள்ளார்.கவித்திறன் கொண்ட வார்த்தைகளால் நூலின் ஒவ்வொரு பக்கமும் புதுப்புதுச் சொற்களை காண முடிகிறது.

--கவியாழி--










Comments

  1. நல்லதொரு நூல் விமர்சனம் நண்பரெ!

    ReplyDelete
  2. நூல் குறித்து நல்லதொரு பகிர்வு ஐயா...

    ReplyDelete
  3. புதுப்புதுச் சொற்களை அறிய ஆவல்... அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
  4. நல்ல பதிவு ஐயா.

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம், நல்ல நிகழ்வு. பகிர்ந்தவிதம் நன்று.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்