இன்றைய மாணவர் வாழ்க்கை
   இன்றைய  மாணவர் வாழ்க்கையோ   இழிந்தே செல்லும் நிலையாலே   பண்பை மறந்தே மாணவனும்   பகலில் குடித்து கெடுவதுமேன்    மகனும்  மறைந்து குடிப்பதில்லை  மாணவனாய் இருந்து படிக்கவில்லை  அவனின் வாழ்வைக் கெடுப்பதற்கா  தினமும் பணமே கொடுப்பதுமேன்   அறிவை வளர்க்கும் மாணவன்  அடிமையாகும் மதுவைக் குடித்து  அறியாமல் செய்யும் தவறுக்கு  அப்பனும் ஆத்தாளுமே துணையாமே   இளமை  வாழ்வோ சிலகாலம்  இனிமை சேர்க்க ஒழுங்காக  இல்லமும் உன்னைக் கொண்டாட  இருப்பாய் சிறப்பாய் பொறுப்பாக   தலைமைப் பொறுப்பை அறிந்தேநீ  தினமும் கற்பாய் முறையாக  தினமும் படிப்பைத் தொடங்கினால்  தெரியும் மகிழ்வாய் எதிர்காலம்