வெள்ளையப்பன் வேதனையை மறைப்பவன்
வெள்ளை நிறத்தவன் அவன்
வேதனையை மறைக்க வைப்பவன்
எல்லா வீட்டிலும் இருப்பவன்
ஏழையின் வீட்டிலும் குடியிருப்பவன்
கொள்ளைப் பணத்தை முழுங்கி
குடும்பம் முழுதையும் வதைப்பவன்
இல்லை யென்றாலும் விடமாட்டன்
இம்சையை தீர்க்கவே விரும்புவான்
தொல்லை கொடுக்கும் வலிக்கு
தோதாய் வந்து காப்பவன்
பிள்ளைத் தாத்தா பாட்டிக்கும்
பிணியைத் தீர்த்து வைப்பவன்
எத்தனை நிறத்திலும் இருந்தாலும்
எல்லோர் மனதைப் போலவே
துள்ளிச் சிரித்தே தொடர்வான்
துணையாய் கூடவே வருவான்
வறுமை வயதும் பாராமல்
வாழ்வை தொடர விரும்பினால்
வள்ளல் போலவே நிம்மதியை
வாரிவழங்கியே மகிழ்ந்திடுவான்
முதியோர்தின வாழ்த்துக்கள்
---கவியாழி--
வேதனையை மறைக்க வைப்பவன்
எல்லா வீட்டிலும் இருப்பவன்
ஏழையின் வீட்டிலும் குடியிருப்பவன்
கொள்ளைப் பணத்தை முழுங்கி
குடும்பம் முழுதையும் வதைப்பவன்
இல்லை யென்றாலும் விடமாட்டன்
இம்சையை தீர்க்கவே விரும்புவான்
தொல்லை கொடுக்கும் வலிக்கு
தோதாய் வந்து காப்பவன்
பிள்ளைத் தாத்தா பாட்டிக்கும்
பிணியைத் தீர்த்து வைப்பவன்
எத்தனை நிறத்திலும் இருந்தாலும்
எல்லோர் மனதைப் போலவே
துள்ளிச் சிரித்தே தொடர்வான்
துணையாய் கூடவே வருவான்
வறுமை வயதும் பாராமல்
வாழ்வை தொடர விரும்பினால்
வள்ளல் போலவே நிம்மதியை
வாரிவழங்கியே மகிழ்ந்திடுவான்
முதியோர்தின வாழ்த்துக்கள்
---கவியாழி--
நல்ல கவிதை. பாராட்டுகள்....
ReplyDeleteநன்றிங்க நண்பரே
Deleteஅருமை ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவரிகள் அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
http://www.thamizhmozhi.net
தங்கள் வரவு நல்வரவாகுக.
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
நீங்கள் சொன்னது செய்தேன்... வெற்றி கண்டேன்... நன்றி ஐயா...
ReplyDeleteஇனி உங்களுக்குத் தொடர் வெற்றித்தான்
Deleteஎந்த வீட்டுக்குப் போனாலும் முதியவர்கள் பொக்கிஷப்பேழை போன்று பாதுகாத்துவரும் தங்கள் மருந்துமாத்திரைப் பெட்டியைத் திறந்து இன்னின்ன மாத்திரை இன்னின்ன வேளைக்கு, இன்னின்ன வியாதிக்கு என்று நடுங்கும் விரல்களால் சுட்டி நம்மிடம் தெரிவிக்கும்போது ஆற்றாமையும் வருத்தமும் பொங்கிவருவதைத் தடுக்கவியலாது. முதியோர் தின வாழ்த்தோடு பொருத்தமான கவிதை தந்துள்ளீர்கள். நன்று ஐயா.
ReplyDeleteஉண்மைதான் இன்று மாத்திரை இல்லாமல் முதியோர்கள் வாழமுடியாது.
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteசிறப்பான கவிதை அய்யா. //வள்ளல் போலவே நிம்மதியை
ReplyDeleteவாரிவழங்கியே மகிழ்ந்திடுவான்// நிச்சயம் இயன்ற வரை நிம்மதியை தருபவர்களாக வாழ்வோம்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteதிண்டுக்கல் தனபாலன்1 October 2013 14:24
ReplyDelete///நீங்கள் சொன்னது செய்தேன்... வெற்றி கண்டேன்... நன்றி ஐயா.../// திண்டுக்கல் தனபாலன் அய்யாவின் கருத்துரையே கவிதைக்கான வெற்றி. இயன்றதைச் செய்வோம் என்பதை எல்லோரும் பின்பற்றுவோம். நன்றீங்க அய்யா..
முன்னர் வெற்றிலைப் பெட்டி வைத்திருப்பார்..இன்று மருந்துப் பெட்டி வைத்துள்ளார்...
ReplyDeleteஅழகான கவிதை ஐயா!
இன்று மாத்திரை சாப்பிடாதவர்கள் மிகக் குறைவு
Delete//கொள்ளைப் பணத்தை முழுங்கி
ReplyDeleteகுடும்பம் முழுதையும் வதைப்பவன்//
எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று நிச்சயமாகத் தெரியாத நிலையில் இந்த வரிகளைப் படித்து சிகரெட் என்று நினைத்தேன். பிள்ளைகளின் பிணியைப் போக்குவான் என்றால் மருந்துதானா என்றும் தோன்றுகிறது! எப்படியிருந்தாலும் நன்றாக இருக்கிறது.
மாத்திரை என்பதுதான் நான் சொன்ன புதிர்க் கவிதை
Deleteவள்ளல் போலவே நிம்மதியை
ReplyDeleteவாரிவழங்கியே மகிழ்ந்திடுவான்
முதியோர்தின வாழ்த்துக்கள்
முதியோரை வணங்குவோம் ..!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteநன்றிங்க சார்
ReplyDeleteமுதியோர்தின வாழ்த்துக்கள்..
ReplyDelete