இன்றைய மாணவர் வாழ்க்கை
இன்றைய மாணவர் வாழ்க்கையோ
இழிந்தே செல்லும் நிலையாலே
பண்பை மறந்தே மாணவனும்
பகலில் குடித்து கெடுவதுமேன்
மாணவனாய் இருந்து படிக்கவில்லை
அவனின் வாழ்வைக் கெடுப்பதற்கா
தினமும் பணமே கொடுப்பதுமேன்
அறிவை வளர்க்கும் மாணவன்
அடிமையாகும் மதுவைக் குடித்து
அறியாமல் செய்யும் தவறுக்கு
அப்பனும் ஆத்தாளுமே துணையாமே
இளமை வாழ்வோ சிலகாலம்
இனிமை சேர்க்க ஒழுங்காக
இல்லமும் உன்னைக் கொண்டாட
இருப்பாய் சிறப்பாய் பொறுப்பாக
தலைமைப் பொறுப்பை அறிந்தேநீ
தினமும் கற்பாய் முறையாக
தினமும் படிப்பைத் தொடங்கினால்
தெரியும் மகிழ்வாய் எதிர்காலம்
உண்மை... உண்மை வரிகள் ஐயா...
ReplyDeleteவருத்தமாகத்தான் உள்ளது.
Deleteதலைமைப் பொறுப்பை அறிந்தேநீ
ReplyDeleteதினமும் கற்பாய் முறையாக
தினமும் படிப்பைத் தொடங்கினால்
தெரியும் மகிழ்வாய் எதிர்காலம்
மகிழ்வான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
பாராட்டுக்கு நன்றிங்கம்மா.இப்போதே குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்க வேண்டும்
Deleteமது மட்டும் அல்ல, இன்று பலவாறாக மாணவர்கள் கெடுகிறார்கள்...... நன்று ஐயா
ReplyDeleteஉண்மைதான். எல்லோருக்குமே தெரிந்தும்.ஏன் ஊக்கபடுத்துகிரார்கள்
Deleteமதுவின் மயக்கத்தில் மாணவரே
ReplyDeleteமாண்பை இழந்து போவாரே
அதுவும் தவறென அறிந்தேதான்
அறிவை முற்றும் இழந்தேதான்
புதுமை அதுவென எண்ணுகின்றார்
போலி வாழ்வையே நண்ணுகின்றார்
பதுமை போலவ அரசுமிதை
பார்த்தும் பாரா முகமன்றே
சரியாக திருத்திச் சொன்னமைக்கு நன்றிங்கயா
Deleteஅனைவருக்கும் உள்ள கவலை
ReplyDeleteஅருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
மாணவர் சமுதாயம் சீரழிவது கண்டு வருத்தமாய் உள்ளது
Deleteமதுவில் வரும் பணத்தில் தானே அரசே இயங்குகிறது! மாணவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? - கவிஞர் இராய செல்லப்பா(இமயத்தலைவன்), சென்னை.
ReplyDeleteஅரசுக்கு வருமானம் தருவதற்கா மாணவர்கள் குடிக்கிறார்கள் ?சுற்றுப்புறம் எப்படி இருப்பினும் தனி மனித ஒழுக்கத்தை மாணவர்கள் கடைப் பிடிப்பதே அவர்களுக்கு நல்லது !
Deleteநாளைய சிற்பிகள் வீணாய் போவது வருத்தமாய் உள்ளது.
Deleteஇன்றைய மாணவர்களை அப்படியே படம்பிடித்து வைக்கிறது கவிதை! நீங்கள் சொல்வது போல பெற்றோர்களும் மாணவர்கள் சீரழிய ஒரு காரணம்தான்!
ReplyDeleteபெற்றோர்கள் தான் மாறனும்.அவர்களைத் திருத்தணும்
Deleteதட்டிக்கேட்க துணிவு வேண்டும் ஆனால், அவர்களின் வசைமொழியைக் கேட்க ரோசம் இருக்கக்கூடாது நம்மிடம்.
ReplyDeleteசில நேரங்களில் நாமும் வதைப் பட்டுத்தான் திருத்த முயற்சிக்கணும் என்ன செய்வது
Deleteதலைமைப் பொறுப்பை அறிந்தேநீ
ReplyDeleteதினமும் கற்பாய் முறையாக
தினமும் படிப்பைத் தொடங்கினால்
தெரியும் மகிழ்வாய் எதிர்காலம்//
மாணவர்கள் அவர்கள் பொறுப்பை உணர்ந்து நடக்க அருமையான அறிவுரை கவிதை.
வாழ்த்துக்கள்.
மிகவும் அருமை ஐயா!
ReplyDeleteநன்றிங்க நண்பரே
Deleteபதினெட்டு வயதுக்குக் கீழே இருப்போருக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களாம். என்ன பயன்? பெற்றோர்களுக்குத்தான் இந்தப் பொறுப்பு இருக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தெரியும் வண்ணம் மது அருந்தும் பெற்றோரே எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களின் பழக்கத்தால் தானும் அது போலச் செய்யும் மகன் தன நண்பர்களையும் சேர்த்துச் சீரழிக்கிறான். வேதனை.
ReplyDeleteபெற்றோர்கள் தான் மாறனும்.அவர்களைத் திருத்தணும் உதாரணமாய் இருக்க வேண்டும்
Deleteசிறப்பான அறிவுரை.....
ReplyDeleteபெற்றோர்களும் இந்த மாணவர்களின் நிலைக்குக் காரணம் தான்.....
பெற்றோர்கள் தான் மாறனும்.அவர்களைத் திருத்தணும்
Deleteபிழையான வழியில்செல்வோர் சிந்திக்க வேண்டியது.
ReplyDeleteஉண்மைதான்.பல இடங்களில் இப்போது இப்படித்தான்
Deleteநன்றிங்க சார்
ReplyDeleteநன்றிங்க குமார்
ReplyDelete