தெய்வங்கள்

தெய்வங்கள்

அய்யா வயதில் மூத்தவரே

அய்யா வயதில் மூத்தவரே
அன்பில் என்னுள் ஆள்பவரே
அழைத்தால் தினமும் மகிழ்பவரே
ஆறாம் எண்ணில் அழைப்பவரே

அன்பில் சளைத்தவர்  உங்களைபோல்
அருகில் எனக்கு இல்லையே
அதனால் எனக்கும் லாபமே
அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன்

எல்லா  நண்பரும்  மகிழ்வாக
எண்ணி இருந்திட நினைப்பவரே
சொல்லால்  தவறை சுட்டியே
சிறப்பாய் இருந்திடச் செய்பவரே

என்மேல் என்ன கோபமைய்யா
எதற்கு அப்படிக் கடிந்தீரோ
என்னை விடவா உங்களுக்கு
ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு

பொல்லா கோபம் இல்லையே
பொசுக்கி என்னைக் கொல்லவே
எல்லா நாளும் இப்படியே
என்னிடம் திட்டி வதைக்காதீர்


--கவியாழி--


Comments

 1. யார் அய்யா அந்த 'ஆறாம் எண்' அழைப்பாளர்? இப்படியெல்லாம் அந்தரங்க விஷயங்களை எழுத ஆரம்பித்தால் எங்களுக்கும் கோபம் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (சரி, யார் அய்யா அந்த 'ஆறாம் எண்' அழைப்பாளர்? ) - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

  ReplyDelete
  Replies
  1. ஆறாம் எண் குருவுக்கு உகந்தது.
   என் குருநாதரின் எண் ஆறுதானே?

   Delete
 2. வணக்கம்

  எல்லா நண்பரும் மகிழ்வாக
  எண்ணி இருந்திட நினைப்பவரே
  சொல்லால் தவறை சுட்டியே
  சிறப்பாய் இருந்திடச் செய்பவரே

  கவிதையின் வரிகள் அருமை ஐயா.... வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க ரூபன்

   Delete
 3. மனதிற்குள் பொங்கும் எண்ணங்கள் எல்லாம் வார்த்தைகளாய் வெளிவந்ததை உணர முடிகிறது. காலம் மாறும். மகிழச்சி கூடும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க.இருவரும் பேசினால் எப்போதும் இன்பமாய் இருக்கும்

   Delete
 4. கொஞ்சநாளாய் மீசை உங்களை பாடாபடுத்திகிட்டு இருக்கே ...கவிதையில் உள்ள மர்மம் விலகுவது எப்போதோ ?

  ReplyDelete
  Replies
  1. இது மர்மம் இல்லை நண்பரே

   Delete
 5. கவிதை அருமை.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க அபயா அருணா

   Delete
 6. /// அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன்... ///

  ரசித்தேன் ஐயா...

  ReplyDelete
 7. ஆகா! உள்ளத்து உணர்வுகள் கவிவரிகளில் பளிச்சிடுகிறதே! அழகான சிந்தனை அய்யா. குரு என்றால் ஏதோ ஒரு வகையில் நாம் தவறிழைக்கும் போது தவறாமல் தயங்காமல் சுட்டிக் காட்டுவர் தானே! குருவின் செல்லக் கோபத்தை கவியாய் கொடுத்த தங்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆம்.அ.பாண்டியன் செல்ல கோபத்தை சொன்னேன்

   Delete
 8. நல்ல கோபம், நல்ல கேள்வி..
  நல்ல கவிதை ஐயா!

  ReplyDelete
 9. குரு கோபிக்கலாம்.
  ஆனால் நாம் பொறுமை தான் கடைப்பிடிக்கணும்.
  குரு கோபித்தால் அவரின் அரவணைப்பு சீக்கிரம்
  கிடைக்கும். நன்று !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிங்க

   Delete
 10. அருமையான கவிதை....
  வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

   Delete
 11. உள்ளார்த்தம் வைத்து உதிர்த்திட்ட கவிவரிகள்!...

  ரசித்தேன்! வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

   Delete
 12. கவிதை அருமை.
  குரு நல்லதே செய்யட்டும்.
  வாழ்த்துக்குள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

   Delete
 13. உங்கள் செல்போனில் SHORT KEY – இல் ஆறாம் எண்ணில் இருப்பவர் உங்களுக்கு பிரியமான குரு என்று நினைக்கிறேன். உங்கள் அன்பான கவிதையைப் படித்துவிட்டு மீண்டும் அழைப்பார்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் அழைப்பார்.

   Delete
 14. கவிதை அருமை.

  விரைவில் கோபம் தீரட்டும்.

  ReplyDelete
 15. உரிமை இருப்பதால்தானே கோபம் வருகிறது? அப்போ அது செல்லக் கோபம்தான். விரைவில் தீர்ந்து விடும்!

  ReplyDelete
  Replies
  1. ஆம்.உண்மைதான் ஸ்ரீராம்

   Delete
 16. விரைவில் கோபம் மாறட்டும்.

  ReplyDelete
  Replies
  1. மாறிவிடும் மாற்றமும் நல்லதுதானே

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more