Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

முதுமையில் இளமை ......

பாகம் இரண்டு ...  ...................................ஆம்  நான் வழக்குரைஞராக  பணியாற்ற  விரும்பும் நோக்கில்  சென்னை உயர்நீதி மன்றம் சென்றேன் .அளவற்ற ஆசைகளுடன்  நேரம் போவது தெரியாது நிறைய பேரைச் சந்திக்கலாம் ,உரையாடலாம், என்று பெரும் கனவுகளுடன்  சென்றேன்.ஆனால் முதலில் ஏமாற்றம் போலவே தெரிந்தது. நான் மாலை நேர வகுப்பில் {சேர்ந்து படித்ததினால் என்னுடன் படித்த யாரேனும் வருவார்களா என்று தேடினேன் தேடினேன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் நான் வசிக்குமிடத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து மைல் தொலைவில் இருப்பதால் நேரடியாக செல்வதில் சிரமம் இருந்தது.முன்பெல்லாம் பணி ஓய்வுப்பெறுவதுக்குமுன் எங்கு சென்றாலும் மகிழுந்துதான் செல்வதற்கு வசதியாக இருந்தது. இன்று நிலைமையே வேறு. இருச்சகக்கர  வாகனத்தில் சென்று அங்கிருந்து நகர்புற  தொடர்வண்டியில் செல்லும் நிலைக்கு ஆளானேன். அங்கிருந்து சிறிது நேரம் நடந்து செல்லவேண்டும் ஏனோ தெரியவில்லை என்னக்குள் இருந்த ஆணவம் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற அசட்டு தைரியம் எல்லாமே சுக்கு நூறாகிவிட்டது. காரணம் என்னைபோலவே  நிறைய பேர் ...

முதுமையில் இளமை

 முதுமையில் இளமை ஆம்! உணரமுடிகிறது. நான் ஓய்வுபெற்று ஓராண்டு முடியவிருக்கிறது இப்போதே மனம் வலிக்கிறது .எனக்கு மட்டுமா அல்லது எல்லா ஓய்வு பெற்ற பெரும்பாலான மக்களுமே இப்படியா என்று எனக்குள் ஒரு கேள்வி   கருவாகி விட்டது. இனம்புரியாத இழப்பு என்றுதான் சொல்லுவேன். நான் பணியில் இருந்தபோது எல்லாமே சரியான நேரத்தில் நடந்தது.காலையில் நடைபயிற்சி  பின் செய்திகள் கேட்பது அடுத்து நாளிதழ் வாசிப்பு என்று ஒவ்வொன்றும் சரியாகத்தான் நடந்தது.நான் எப்போதும அலுவலக பணியாளர் வரும் முன்பே சென்றுவிடுவேன்.பெரும்பாலான  பணியாளர்கள் உங்களுக்கென்ன அய்யா மகிழுந்தில் வந்துவிடுவீர்கள் என்று என்னையே குத்திக்காட்டுவார்கள் {தாமதிற்கான காரணத்தை சொல்ல மாட்டார்கள் ) இன்றும் முயற்சிக்கிறேன் முடியவில்லை .காரணம் வெறுமை ? நாம் நல்ல துடிப்புந்தானே பணியாற்றினோம் இப்போது ஏன் நம்மால் முடியவில்லை என்று என்னும் கேள்வி கேட்டே நேரம் கடந்து செல்கிறது .ஆனாலும் உள்மனது  அடிக்கடி சொல்லும் வார்த்தை உன்னால் முடியும் வெளியே சென்று வா எதையாவது தேடு தேடிக்கொண்டே இரு.வெளியே செல்ல முடியாததன்  காரணத்தைத் தவிர  எ...

பருவம் பதினெட்டுடில்.......9

பருவம் பதினெட்டில் ........9 ----------------------------------------- பூவிதழ் பற்றிட துடிக்கும் புன்னகை மறந்திட்டு பருகும் மேனியில் கைத்தடம் பதித்தால் மேகலை கிங்கிணி யாகும் தேயிலைத் தோட்டத்தின் அருகில் தேனடை பார்த்திட்ட நொடியில் மாவிலைத் தோரணம் மறந்தே மனமிடத் தோன்றிடும் அழகே பாமகள் வரிகள் அழகாய் படித்திட நிதமும் பிடிக்கும் பூமகள் அழகை நினைத்தே பூத்திடும் கைகளும் சிலிர்த்தே யாரிவள் தேரோ சிலையோ யாசகம் துறந்த தமிழோ போரிடும் நிலையில் வீரம் பொசுங்கி உரமாய் போகும்.......10 கவியாழி.கண்ணதாசன் 

குழுவாய் உழைப்போம் நிலத்தில்....

 குழுவாய் உழைப்போம் நிலத்தில் ..... ------------------------------------------------------- கேள்விகள் ஆயிரம் கேட்கலாம் கேட்டதை மாற்றிக் கூறலாம் வேள்விகள் நிறைய செய்யலாம்-மன வேதனை தீர்க்க முடியுமா போலிகள் வாழ்க்கையை மாற்றலாம் போதையில் வாழ்க்கையை மறக்கலாம் வேலியே பயிரை மேய்வதால்- கொடும் வேதனை எங்கே சொல்வது காலையில் எழுந்ததும் பூசைகள் கடவுளைப் பார்கவும் ஆசைகள் வேலைக்கு மாத்திரை போடாமல்-வயிற்றுக்கு விருப்பமாய் உணவு செல்லுமா ஆதிக்கத் திமிரில் வாழ்பவன் ஆசையாய் உறங்க முடியுமா போதிக்க மறுத்த தலைவனை -இன்று புறம்பான பேச முடியுமா நீதிக்கதைகள் யாவையும் இன்றும் நிலையாய் நிற்கக் காரணம் ஆதித் தமிழனின்  பெருமையே-உணர்ந்து ஆணவம் மறந்து வாழுவோம் தேடிப் பிழைப்பதை மறந்து தோழமை உறவும் மகிழ்ந்து கூடி வாழ்வோம் ஊரில்-விரும்பி குழுவாய் உழைப்போம் நிலத்தில்... கவியாழி.கண்ணதாசன்

இயற்கையான நட்பு மாறாது

இயற்கையின் கொடையாய் மழை எப்பொழுதோ புயலாக பொழிந்தாலும் இனிமையாய் மனதில் மகிழும் எங்கெங்கும் பசுமை சிரிக்கும் செயற்கையாய் மழையே வந்தால் சிலருக்கு மட்டுமே தெரியுமாம் செழுமை மறந்து வருத்தமாய் சினமாய் பசுமை மறையுமாம் பயிற்சியால் மகிழ்ச்சியை நாளும் பகிர்ந்திடும் முயற்சியை யாரும் பணத்தினால் உணர்த்திட முடியாது பாசமும் அதனால் வளராது முன்னாள் பள்ளி நிழ்வுகள் முதுமையிலும் தொடரும் வளரும் பள்ளியில் படித்த நினைவும் பசுமையாய் மனதில் உலவும் கவியாழி. கண்ணதாசன் 01.12.2020.சென்னை

அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க !

Image
பச்சை இலைகளோடோரு பழுத்த யிலை பாதிகாய்ந்ததோர் பளுக்கா யிலை மிச்ச இலைகளெல்லாம் மேலே னோக்க மீதியிரண்டு மேன் கீழே நோக்கி ? உச்சமடைந்து உயிரைபோக்க கீழே உதிரக் காக்கும் நோக்கம் ஏனோ அச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க-பிறகு அதுவும் கருகி உரமாய்ப்போகும் மிச்சம் மீதி வாழும் நாட்கள தற்கு மீண்டும் கதிரவன் துணையே வேண்டாம் துச்சமில்லையென துடித்து விழாமல்-மரத்தில் தொங்கிக் கொண்டே விழுந்தே காயும் இயற்கை வழியில் இச்சைத் தீர்த்து இலைகள் போல மனிதன் வாழ்வும் சொற்ப நாட்கள் உலகில் உலவி-இறப்பு சோகமின்றி நல் நினைவாய் முடியும் .........கவியாழி.கண்ணதாசன்......           சென்னை.27.08.2020

தினமொறு நாடகம் உலகில் தோன்றும்.....

அறிவைத் திருடும் கூட்டம் எங்கும் அகிலம் முழுக்க போடும் ஆட்டம் பிரிவைத் தூண்டி உழைப்பைத் திருடி பேயயைப் போல பிழைப்பாய் வாழும் உறவாய் பழகி உணர்வைத் தூண்டி உரிமைக் காட்டி ஊர்ந்து செல்லும் உடையோர் இருக்க ஒளிந்தே வாழும் உலக மெங்கும் பயந்தே ஓடும் பிழையாய் தடத்தை பதியம் போட்டே பேதைமை மறந்தே நட்பாய் பேசும் விளையும் பயிரில் நஞ்சை வளர்த்து வேதனையோடும்  வீரத்தை காட்டும் தீயதை விதைத்து தீமையைப் பெருக்கித் தேடுவோர் கைகளில் விலங்கை மாட்டும் தீர்வினை காண மக்களைக் கொன்று தினமொறு நாடகம் உலகில் தோன்றும் வளமைச் சொல்லி வளங்களைத் திருடி வையகம் முழுதும் பசியைப் போக்கும் பிழையை அறிந்தும் புத்தரைப்போல பேசும் வார்த்தை ஆயிரம் சொல்லும் செழுமை இல்லா முகத்தைக் காட்டி செயலில் மட்டும் வீரத்தைக் காட்டும் சேர்ந்தே பலரும் திருப்பி அடித்தால் சோதனை என்றே விரைந்து ஓடும் .........கவியாழி கண்ணதாசன்......           சென்னை.......22.08.2020

விதியின் வேதனையும் விலகிடு.....கட்டுரை

தமிழ்நாடு 24.03.2020 க்குமுன் அதற்குப்பின் இன்றுவரை கடந்தகலங்களில் கண்ணீர் சிந்தாத மனிதனே இல்லை.மதத்தை கடந்து மனிதம் தேடி அலைய வேண்டிய அவலநிலையை கடந்து யாரும் சென்றிருக்க வாய்ப்பே இல்லை.கையில் காசில்லை கடனாக கொடுப்பவர் இல்லை.உழைத்த உழைப்புக்கே உறுதியான வேலையில்லை. ஆலைகள் ,அலுவலகங்கள் ,பள்ளிகள்,கல்லூரிகள் பேருந்துகள் ,கடைகள்,காட்சியாகங்கள்,மண்டபங்கள் மணவிழாக்கள்,கட்சிக்கு கூட்டங்கள்,கடைத்தெருக்கள் என எல்லாமே மூடிக்கிடக்க  உழைக்கத்திறனிருந்தும்  ஓய்வெடுக்க நிர்பந்தித்து வீட்டில் முடக்கி விதி விளையாடியது. அலுவலகம் செல்வோர் முதல்  அன்றாடம் உழைப்பவர் வரை சொல்ல முடியாத சோகங்களை கடக்கவேண்டிய  நிலையில் வேண்டா வெறுப்பாக தள்ளிவிடப்பட்டனர்.மூன்று வேலைச்சோறு ,முழுநாள் ஓய்வு நேரத்தில் தூங்கி வழிந்ததும் சில நேரங்களில் துயரத்தை எண்ணி வருத்தியவர் பலர். அனைத்து மத ஆலயங்களும் மூடின.ஆண்டவனுக்கு ஓய்வு கொடுத்தனர்.அத்தனையும் பார்த்துக்க கொண்டு அவர்களும் அமைதியாயினர். ஏழையும் வறுமையில் எப்போதும் வேண்டிக்கொள்ளும் இறைவனுக்கு ஏற்பட்ட நிலையெண்ணி எல்லோரும் வருந்தினர்.எதுவும் செய்ய முடியாத நிலைய...

சிரிக்கவும் சிந்திக்கவும் சிறந்த நட்பு

அருகில் வந்ததும் முகம் மலரும் ஆனந்தமாய் முதுகில் தட்டி கொண்டே என்னடா எப்படி இருக்கிறாய் நலமா-என்றே எற இறங்க மனதை அளந்து பார்க்கும்  புரியும் வரையில் கேள்வி கேட்டு புதிதாய் எதையோ தேடிப் பார்க்கும் மனதில் உள்ள வார்த்தை கேட்டு-அறிந்தே மருந்தாய் நட்பு நோட்டம் பார்க்கும் உடையில் தெரியும் சுருக்கம் மெல்லாம் உள்ளம்  வரையில் ஊர்ந்து சென்று தடைகள் என்ன என்பதை மட்டும்- உணர்ந்தே தைரியமான  நல்ல வார்தைகள்  சொல்லும் மனதில் ஓடும் சிந்தனை தனக்கு  மகிழ்வாய் இல்லை என்பதை காட்டும் தனமும் உடலும்  தவிப்பதை கண்டு -கண்கள் கனமே உணர்திக் கைகளைப் பற்றி தினமே பழகும் நட்பாய் இருந்தும் தெளிவாய் உள்ளம் இல்லையே வென்று பணமாய் பொருளாய் கொடுத்திட நினைக்கும்-நட்பே பரிவுடன் சொல்லும் அறிவுரைக்கோடி முகத்தைப்   பார்த்து அகத்திதில் புகுந்து முடிவில் உண்மை நிலையைக் காணும் கிடைக்கும் நட்பே கடைசி வரைக்கும்- உண்மை கடந்தும் நட்பே  என்றும் வெல்லும் கவியாழி....... சென்னை

60ல் தனியே இருக்கும் தைரியமில்லை....

இனியும் தொடரும் ஆக்கமும் ஊக்கமும் இனிதே கடந்த நாட்களின் அர்த்தமும் புதிதாய் தொடங்கும் பொழுதும்  கழிய-பறவையாய் புறப்பட்டு செல்வேன் பதிய தொடக்கமாய் பறக்கும் பறவைக்கு பார்வை முழூவதும் பசியை உணர்ந்தே தேடி தெரியுமாம் பார்க்கும் இடமெல்லாம் பறவையாய்- திரிந்து  பாசம்தேடி மகிவாய் பறந்து  போவேன் வாழ்வில் இதுவரை யாரையும் இழித்ததில்லை வாழ்வில் நட்ப்பை  வறுமையாய் விட்டதில்லை தாழ்ந்தும் பணிந்தும் தவறாய் வாழ்ந்ததில்லை - நட்பை தவிக்கவிட்டு தனியாய்  நடந்தே சென்றதில்லை  வாழ்க்கையும் வாய்மையும் என்றுமே தோற்றதில்லை வாழ்ந்தவர் வாழ்க்கையை மனதில் மறக்கவில்லை ஏழ்மையை மனதால் வென்று வாழ்ந்தும்-எப்போதும் ஏழைக்கு உதவிட இன்றுமே மறந்ததில்லை நாளும் பொழுதும் தேடி பிறக்கவில்லை நல்ல நேரம் பார்த்து  செய்ததில்லை கோளும் சூழும் கொண்ட வழியில்-மனிதனாய் கொள்கை கொண்டே இனியும் வாழ்வேன் இன்பமும் துன்பமும் இணையாய் இருப்பதில்லை இணையை பிரிந்தும் இதுவரை சென்றதில்லை தன்னலம்  கொண்டே தனியுறவு வைத்ததில்லை-60ல் தனியே இருக்கும் தைரியம் எனக்கில்லை ---கவியாழி---    சென்னை   11.07.2020 ...

தினமும் தூங்கியும் பொழுது போகலை..!

எங்கும்போகலை எதையும் பார்க்கல எந்த சொந்தமும் வீட்டில் சேர்க்கலை தங்கி வேலையும் செய்ய முடியலை-தவிப்பாய் தினமும் தூக்கியும் பொழுது கழியிலே கடைக்குப் போகலைக் காசு செல்வில்லை காணுமிடமில்லாம் கால்தடமும் தெரியலே உடைக்கு அழுக்கில்லை ஊரெங்கும் போகலை-இன்னும் ஊரடங்கு முடியுமென ஒருத்தருக்கு தெரியலை கொடுக்கல் வாங்கல் நட்புகள் அழைகலை கொண்ட உறவும் நீண்ட பிரிவால் கண்டுபேசி சிரிக்க முடியல -நிதியாய்  கண்ணீரைத் துடைக்க எனக்கும் வழியில்லை எங்குமே மழையில்லை இயற்கையே முறையில்லை எவ்விடம் செல்லவும் யாருக்கும் துணிவில்லை சங்கமும் இருந்தாலும் சனத்துக்கு உதவிட- சபையிலே பணமில்லை சட்டமும் சரியில்லை எந்த சாமிக்கும் கண்ணு தெரியலை ஏய்ச்சி பொழைக்கும் போக்கு பிடிக்கலை சொந்த காசையும் கண்ணில் காணலை-கணக்கில் செலவு செஞ்சிட பணமும் கையில்லை கவியாழி.கண்ணதாசன் 27.06.2020

எம்மன வேதனை யாரரிவார் ?

திண்ணையில்  அமர்ந்த நாளிலன்று தீவிரநோய் வந்து படுத்தோரு ண்டோ விண்ணில் வலம் வரும் கிருமியை-மக்கள் வீழ்த்திடும் மருத்துவம் யார் அறிந்தார் மண்ணையே தேடியே மக்களும் செல்ல மானுடம் தவறியே வாழ்விழந்து செல்ல பொன்னையும் விற்று படிப்பையும் மறந்து- நடந்தே தன்னையே காக்க தனியே செல்கிறார் இன்பமும் எங்கேத் தேடி சென்றதோ இளமையை முதுமை இணைந்து கொண்டதோ துன்பமும் துயருமே துணைக்கு வந்ததா-கொரானா தேடித்தேடி மக்களைக் கொல்வதா என் மன வேதனை யாரறிவார் என்னையும் அணைத்திட யார் வருவார் சொன்னதை நம்பிட யார் துணிவார்-உலகில் சொர்கமும் தேடியே யார் செல்வார் கவியாழி.கண்ணதாசன் 26.06.2020

இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா இனிமேலும் இருந்திடலாம் அன்பாய் புத்த கங்கள் சுமந்த காலத்தை- நாமும் புதிதாய் நினைத்து மகிழ்ந்திடலாம் வா ! கற்பனையாய் படித்த அந்த நாட்களில் கல்விகற்க மட்டும் பழகி வந்தோம் விற்பனைக்கே அறிவை வருத்த வில்லை விடிந்ததுமே மனப்பாடம் செய்து வந்தோம் கற்பனையாய் மட்டுமே அதிகம் எழுதியதால் கைநிறைய அடியும் வாங்கி கொண்டோம் கற்றதனால் பலபேர்கள் மகிழ்ச்சியாய்-ஆசிரியர்கள் கைகுலுக்கி பாராட்டும்  பரிசும் பெற்றார்கள் இடைவெளி நேரம் விட்டதுமே இணைந்து பேசி மகிழ்ந்து வந்தோம் மடையாய் வெள்ளம் செல்வது போல் மாலையில் பறந்தே சென்று விட்டோம் நெடுநாள் தொடர்பு மறந்திருக்க நேசமும் பாசமும் சேர்த்திழுக்க பலநாள் நினைவுகள் பகிர்வதற்கு-நம்மில் பலபேர் சேர்ந்தே பகிர்ந்தே மகிழ்ந்திடலாம்  கவியாழி.கண்ணதாசன் 10.04.2020.சென்னை

இளமைக் கால நண்பர்கள்

Image
நண்பர்களுடன் மீண்டும் சந்திப்பு முதலில் உள்ளவர்.சா.திருமாவளவன் அடுத்தவர் சரவணன் என்ற அமுலு நாங்கள் மூவரும் சேலத்தில் புனிதபால் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் சேர்ந்த  நாள் முதல் சேர்ந்து பழகிவந்தோம்.மூவருக்கும் அரசுப்பணி கிடைத்ததும் மற்றும் திருமணம் முடிந்ததும் பதினைந்து வருட நட்பைத் துறந்து தனித்தனியே பிரிந்தோம். நான் உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள சேலம் சென்றிருந்தபோது அவர்கள் இருவரையும் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது.அதை அவர்களிடத்தில் திருமாவளவன் தற்போது வங்கி கிளை மேலாளராய் திட்டக்குடிக்கு அருகில் பணிபுரிந்து வருகிறார்.திரு.சரவணன் அவர்கள் சேலம் கோட்டத்தில் ரிவே துறையில் பணிபுரிந்து வருகிறார்

சித்தமும் கலங்கிட செய்தாயோ ?

தலைநிமிர்ந்தே தினமும் வணங்கி தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம் நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ தினம் பலபேர் மடிவதால் தீங்கு செய்யும் மக்களுக்கு பணமும் பொருளும்பயனின்றி-மக்களின் பாசம் நேசம்  பகிர்ந்தாயோ அழிவுப் பாதையை அறிந்தாயோ அழிக்கும் வேலையும் இதுவன்றோ இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும் இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே பூமியின் சுழற்சியை புரிய வைக்க புத்துயிர் மக்களை  தெளிய வைக்க நித்தமும்  நிம்மதி யிழக்க செய்து-மனிதன் சித்தமும் கலங்கிட செய்தாயோ கவியாழி. கண்ணதாசன்

மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே

மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே மறந்ததை இழந்ததை அறிவாயோ புகழ்சியின்  உச்சத்தில் உன்னை-இன்றும் பூமியில் தினமும் வணங்குகிறோம் இயற்கையை மனிதன் அழித்தனால் இளமையில் உழைக்கத் தவறியதால் உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின் உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு மானிடம் மறந்ததை அறிந்தாயோ மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ பிழைக்கவும் வழியே தெரியாமல் பிணமாய் மக்கள் உயிர்வாழும் பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே பயத்துடன் வாழ பணித்தாயோ கவியாழி.கண்ணதாசன் 07.04.2020- சென்னை

எல்லை யில்லா எழிலாள்.......

கல்லில் வடித்த சிலையோ கற்பனை வடிவின் கலையோ சொல்லில் விளங்க வில்லை சுடராய் தெரிந்தாள் அழகாய் எல்லை யில்லா எழிலாள் ஏக்கம் கொண்ட குயிலாள் வெள்ளை அழகே இல்லை விரைந்தே சிரித்து மறைந்தாள் கொள்ளை அழகாய் இருந்தும் குறையாய் இருந்தது வறுமை பிள்ளை யவளைப் பெற்றோர் பிணியில் அவளை வளர்த்தார் இல்லை என்ற நிலையில் ஏழ்மை சூழ்ந்த வழியில் தொல்லை யில்லா அழகால் தூரத்தில் பார்க்க மறைந்தால்..... .பருவம் பதினெட்டில்........8 ..................(கவியாழி)................

தமிழ் மரபுவழிப் பயணம்

Image
        17.03.2019  அன்று ஞாயிற்றுக்கிழமையில் தமிழ் மரபு அறக்கட்டளையின்  தமிழ் மரபுவழித் தேடி 36 பேர்  குளிரூட்டப்பட்ட பேருந்தில் சென்றோம்.செல்வி.சுபாசினி அவர்களின் தலைமையில் திரு.ஸ்ரீதரன் அய்யா அவர்களின் வழிகாட்டுதலுடனும் திரு.காந்தி. அவர்களால்  பயணம்  ஏற்பாடு செய்யப்பட்டு கோயம்பேட்டிலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு முதலில் காஞ்சிபுரம் அடுத்த காவேரிபட்டினம் அருகிலுள்ள மகிந்திரவாடி  எனும் சிற்றூரில் அமைந்த குடைவறைக் கோவிலுக்கு முதலில் சென்றோம். பின்னர் அங்கிருந்துப் புறப்பட்டு ராணிபேட்டை சிப்காட் வழியாக திருவலம் சென்றோம்,நாங்கள் பேருந்தைவிட்டு இறங்கி கோவிலுக்குள் நுழையுமுன்னே நடைசாத்திவிட்டார்கள் என்பது வருத்தமாக இருந்தாலும் அங்கு வெளியே இருந்த கலைநுட்பமான கல் தாழி மேலும் சுவரில் வரைந்திருந்த சிற்பங்கள் மற்றும் கல்கதவு போன்றவற்றை  வியப்புடன் பார்த்தோம்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மேல்பாடி நோக்கி பயணமானோம் ,நல்லவேளை அங்கு கோவில் திறந்தே இருந்தது அங்கே ஆர்வத்துடன் உள்ளே நுழைய முற்படுமுன் அதிக வெப்பத்தினால் த...

மகிழ்ந்திடும் நினைவுகள் தேடி..

உருவம் செழித்தே இருந்தும் உள்ளம் உணர்வை மறுத்தும் பருவம் தொடரும் கனவில்  பார்த்ததும் மனதில்  ஒளிக்கும் பொல்லா இளமை கனவு பொருந்தா நேரமும் வருத்தும் இல்லா நிலையை உணர்ந்தே எல்லா மகிழ்ச்சியும் பறக்கும் வாலிபம் வாயிலைத் தட்டும் வருவதை சொல்லி நிற்கும் மேகலை நனைய கண்ணீர் மேனியில் வழிந்தே நனையும் பூமகள் மனதில் தினமும் பூத்திடும் கனவுகள் கோடி மாமகள் தருணம் நாடி மகிழ்ந்திடும் நினைவுகள் தேடி...                                                 .பருவம் பதினெட்டில்........7 .8 .......(கவியாழி)....

இழிபிறவி எடுத்தவர்கள்

ஏய் இழி பிறப்பே ! உச்சகட்டவெறியோடு ஊரிலுள்ள பெண்களை துச்சமென நினைத்தே துரதித்துரத்தி கெடுத்தாயே-நீ பிச்சையெடுத்தாலுமுன் பிணியுணக்கு தீராது எச்சியிலை நாய்கள்போல் எக்குதப்பாய் கடித்திட்டு இச்சையினை முடித்திட்டு எவளருக்கே படுத்தாயே-தாய் மிச்சஉயிர்போகுமுன்னே மகன்வாழ வேண்டுமென்றும் பிச்சிப்போட்ட இலையைப்போல் பிரண்டியவள் தங்கையென்றே மதித்திருந்தால்  இழிவாக மடத்தனமாய் செய்வாயா ? புத்தன் வாழ்ந்த பூமியிலே-பெண்ணை புனிதமாக எண்ண வேண்டும் இவ்வுலகில் எத்தனை நாள் இன்னும் நீ இருந்தாலும் இழிவுடனே பெரும்துயரை இணைத்து நீ வாழ்ந்தாலும் புத்திகெட்ட உன்செயலை-நீ புலம்பி நாளும் திரிந்தாலும் செத்தவனாய் நடைபிணமாய் செழிப்பிழந்து அழிவாயே செய்திட்ட தவறெல்லாம் தினமுனக்கு பகையாகி பித்தனாக திரிவாயோ பிணமாகிப்போவாயோ ! கவியாழி.கண்ணதாசன்

ரசித்தவர்கள்