தெய்வங்கள்

தெய்வங்கள்

சமுக பொறுப்பாளி


 
கவிஞர்கள் காகித பூச்சிமட்டுமல்ல  
 கற்பனை குதிரையுமட்டுமல்ல
 சோதனை பிறவியுமல்ல
 சொற்போர் செய்பவனல்ல
 செதுக்கி வடிக்கும் சிற்பி
 சிந்தனையை  நிஜமாக  உருவாக்கும் ஞானி
 உதவிக்கு ஓடிவரும்  தோணி
ஆட்சி திறமையும்
அடுத்தவர் நலனையும்
பேச்சில் தெரிந்து
பிரச்சனையை தீர்க்கும் பொறியாளன்
.கற்பனை தெரியும்
கதை காவியமும் அறியும்
ஒப்பனை இல்லாத கலைஞன்
 தன்னலம் கருத்த தலைவன்
 மூத்தவன் அறிவில் முதன்மையானவன்
பிரச்சனையும் பிணக்குகளும்
 உச்சமென மெச்சிடும் பண்பாளன்
கோபமும் நல்ல குணங்களும்
 உள்ளவன் வல்லவன் நல்லவன்
 மெச்சிடும் குணமும் உண்டு
மீறியெழும் பண்பும்முண்டு 
சாதனைகளும் சோதனைகளும் உடையவன்
 காதலன் காதலி சமுகஞானி சிந்தனையாளன்.
 உதவும் உள்ளம்
 ஊர் காப்பாளன்
தனிமையில் தவிப்பவன்
 தலைகனம் கொண்டவன் 
கொள்கை பற்றாளன்
கோபம்கொண்டவன் கொள்கைவிடதாவன்
 எத்தனையோ உண்டு எளுதமுடியாதது
சொந்த கதை சொல்லவா
 சோககதை அல்லவா
 இத்தனைக்கும் நான்தான் முதலாளி
 எப்பவுமே பொறுப்பாளி

Comments

ரசித்தவர்கள்