தெய்வங்கள்

தெய்வங்கள்

அருகிலே இருந்தும் அறிவில்லாக் கூட்டாளி

அப்பன் பங்காளி அவனுமே எதிராளி
அருகிலே இருந்தும் அறிவில்லாக்கூட்டாளி
சுப்பன் வந்து சண்டை போட்டால்
சுருக்கெனக்கோபமாய்ச்சொந்தமென வருமாம்!

வசிக்கும் இடத்திலே வறப்புச்சண்டையிட்டு
வருவோர் போவோரிடம் வசையான சொன்னாலும்
கசக்கும் வார்த்தையால் கண்டபடி திட்டினாலும்
பசிக்கும் நேரத்திலே பங்கிட்டு உண்பாராம்

ஆடுகளும் மாடுகளும் அருகே சென்றாலே
அதையும் விரட்டி அங்கிருந்து துரத்தி
ஓடிச் சென்று ஓடோடி விரட்டிடுவான்
ஓய்ந்த நேரம் உட்கார்ந்து பேசிடுவான்

உழவுக்கு ஏர்பிடித்து உரிமையுடன் சென்றாலும்
ஊருக்கு தெரிவதுபோல் உறக்கப் பேசிடுவான்
இழவுக்குச் சென்றாலும் இணைந்தே போனாலும்
இருப்பிடமே வந்தவுடன் இணைபிரிய மாட்டானாம்

கிணற்றிலே நீரைக்காலமாய்ப் பங்கிட்டுக்
கீழ்வயலில் பாத்தியிட்டுக் கீரைகளை விதைத்து
பணத்திலே சரியாய்ப்பங்கும் தருவானாம்
பங்காளி என்றழைத்துப் பாசமுடன் இருப்பானாம்

உழைப்பவன் மட்டுமே உடனடி சச்சரவை
ஊராரும் மெச்சும்படி உடன் பங்காளியென
உரிமையுடன் சண்டையிட்டு உடனே கூடுவான்
உலகமே வியக்கும்படி உரிமை கொண்டாடிடுவான்!


(கவியாழி)


Comments

  1. அருகிலுள்ள அறிவில்லா கூட்டாளி தலைப்பே ஈர்க்கிறது. நல்ல கவிதை.
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. அந்தநாள் அப்படித்தான் இருந்தது.ஆனால் இப்போதெல்லாம் மாலையானாலே மகிழ்ச்சிக்காக கூடிவிடுகிறார்கள்

      Delete
  2. வணக்கம்
    ஐயா
    அட்டகாசமான வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி பேசும் அயல்நாட்டு நண்பருக்கு நன்றி

      Delete
  3. Replies
    1. வந்தமைக்கும் வாக்குத் தந்தமைக்கு நன்றி

      Delete
  4. உண்மை
    உண்மை
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  5. உழைப்பவன் மட்டுமே உடனடி சச்சரவை
    ஊராரும் மெச்சும்படி உடன் பங்காளியென
    உரிமையுடன் சண்டையிட்டு உடனே கூடுவான்
    உலகமே வியக்கும்படி உரிமை கொண்டாடிடுவான் உண்மை, உணர்ந்த உண்மை. அழகிய வரிகள் அர்த்தமானவை. என் பக்கத்தில் பீச்சாங்கை படித்துப் பாருங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.உங்களது தளத்தைப் பார்த்தேன் படித்தேன் அருமை

      Delete
  6. சிறப்பான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அறிவில்லாக் கூட்டாளி மனித நேயமுள்ள கூட்டாளியே. நல்ல கவிதை.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்