தெய்வங்கள்

தெய்வங்கள்

எனது நண்பன்






கண்ணாலே கதை சொல்லும் கயவன்
கண்டவுடன் வாலாட்டும் துணைவன்
பண்போடு உடன் நடக்கும் இளைஞன்-வெளியோரை
பார்த்ததுமே கத்துகின்ற மடையன்

வேண்டுமென்றால் அருகில் வந்து 
வேடிக்கையாய் விளையாடிச் செல்வான்
வேதனையில் நானிருந்தால் அருகில் -அமர்ந்து 
விழிதிறந்து என்னவென்று கேட்பான்

கத்தாதேஎன்றாலும் நிறுத்தாமல் குறைப்பான்
காக்காகுருவிடனும் விளையாடத் துடிப்பான்
கன்னியரின் கன்னத்திலே முத்தமிட நினைத்தால்
கண்ணிமைக்கும் நேரத்திலே முத்தமிட்டுச் செல்வான்

மகிழுந்தில் செல்லவேண்டி அழுவான்
மறுத்ததுமே குரைத்துக் கேள்வி கேட்பான்
திகிலூட்டிக் கண்ணை உருட்டிப் பார்பான்
தின்ன மறுத்துக் காரில்ஓடி அமர்வான்

அன்பாய் இருப்பான் அருகில் வருவான்
பண்பாய் இருந்தும் பணிவாய் வாழ்ந்தும்
துன்பம் சிலநாள் தொடர்ந்தே இருந்தும்
நண்பன் இன்னும் சிலநாள் மட்டும்


(கவியாழி)


Comments

  1. என்ன ஆச்சி நண்பனுக்கு...?

    ReplyDelete
  2. நன்றியுள்ள ஜீவன்! என்ன ஆனது அதற்கு?

    ReplyDelete
  3. என்ன ஆனது கவிஞரே ?
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. உடல் சுகவீனமாய் பார்க்க பாவமாய் இருக்கிறது

      Delete
  4. வணக்கம்
    ஐயா
    என்ன ஆனது... ....த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நண்பனுக்கு என்ன ஆயிற்று? கடைசி வரியில் ஒரு சஸ்பென்சை வைத்துவிட்டீர்களே?

    ReplyDelete
  6. கடைசி வரியில் ஏன் அப்படி....

    நண்பனுக்கு என்னவாயிற்று.

    ReplyDelete
    Replies
    1. உடல் சுகவீனமாய் பார்க்க பாவமாய் இருக்கிறது

      Delete
  7. நண்பரே! அருமையான வரிகள் ஆம் நன்றியுள்ள நண்பன் தான்!!!! எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத நண்பன் தான்.

    வருத்தமாக இருக்கின்றது...கீதா நண்பரே எனது மகனிடம் கேட்கலாமே அவர்னும் வெட்னரியன் தான்...

    ReplyDelete
  8. ''..மகிழுந்தில் செல்லவேண்டி அழுவான்
    மறுத்ததுமே குரைத்துக் கேள்வி கேட்பான்
    திகிலூட்டிக் கண்ணை உருட்டிப் பார்பான்
    தின்ன மறுத்துக் காரில்ஓடி அமர்வான்..''
    பதிவு நன்று.
    ஏன் முன்பு போல வராது நிறுத்தி விட்டீர்கள்?
    நான் அன்று போலவே இன்றும் எழுதியபடி.
    சமீபத்தில் எனது நகரத்தில் ஒரு பாராட்டு விழா
    நடத்தினார்கள். வாழ்த்தும் விழா- பாராட்டு விழா
    என்று தலைப்பிட்டு 8 அங்கம் எழுதியுள்ளேன்.
    வந்து பாருங்களேன்.

    ReplyDelete
  9. நண்பேன்டா இவனினி நட்புக்கு ஈடு இணை இல்லை ஆயுள் குறைந்த ஜீவன் ஆதங்கம் அளுது தீர்க்கிறது..

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்