இனிவேண்டாம் என்தாயே
பழிவாங்கும் செயலாலே பாவம் மட்டும் குறையுமா பாரம் அதிகமாய் மாறுமா பழியும் உன்னோடு சேருமா மொழியாலே சின்னக் கணைவீசி முறையின்றி சொன்ன வார்த்தை வினையாக எனைக் தாக்குமா விதிமாறி உன்னை வெல்லுமா வயதான காலத்தில் வேண்டுமா வாழ்த்துகிற நிலையும் மீறுமா தடையான காரணம் என்ன தயை கூர்ந்து சொல்வாயா விதியோடு விளையாடும் நீ வீணான மதிகொள்ளக் காரணம் விளையாட்டுப் பிள்ளையின் செய்கையா விடுத்தவர் கல்வியின் கொள்கையா இனிவேண்டாம் என்தாயே இப்போதே இதை நிறுத்திவிடு இளவலைநீ அன்பாலே வாழவிடு இனிமையை இனியேனும் காணவிடு மதிகெட்டேன் மனையை விட்டேன் மருத்துவம் விரும்பியே இழந்தேன் இனியிழக்க என்னிடம் ஏதுமில்லை இனியாவது விதியை மாற்றிவிடு