தெய்வங்கள்

தெய்வங்கள்

உறவு மின்று செத்துடிச்சு

மழையப் பார்த்து ஏங்கிடுச்சு
கண்ணி ரண்டும் பூத்திடுச்சி
மேக மெல்லாம் ஓடிப்போச்சு
மேனி யெல்லாம் எரிஞ்சிடுச்சி


குளமெல்லாம் வத்திப் போச்சு
கொக்கு நாரை அதிகமாச்சி
வயலெல்லாம் காஞ்சி போச்சு
ஆடு மாடு மேஞ்சிடுச்சி


நில மெல்லாம் மனைகளாச்சு
நிறைய வீடு வந்திடுச்சி
நில மற்று போனதாலே
உழவன் வாழ்க்கை மடிஞ்சிடுச்சி


மனதெல்லாம் மாறிபோச்சு
மனிதநேயம் குறைஞ்சிடுச்சி
பணத்துக்காக அடகு வச்சு
கனத்த வட்டி வளர்ந்துடிச்சி


இனத்துச் சண்டை வந்துடிச்சு
இதய மெல்லாம் நொறுங்கிடுச்சி
தேச நலன் குறைஞ்சிடுச்சி
தேவை மட்டும் மாறிடுச்சு


உணர்ச்சி யெல்லாம் மழுங்கிடுச்சி
உண்மையன்பு தேய்ந்சுபோச்சு
உருப்படியாய் சேர்ந்து வாழும்
உறவு மின்று செத்துடிச்சு



Comments

  1. இன்றைய நிலைமை இப்படித்தான் ஆகிப் போச்சி...

    மாறும்... மாற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மாறவேண்டும் மனிதன் நிலை உயர வேண்டும்

      Delete
  2. மனதெல்லாம் மாறிபோச்சு
    மனிதநேயம் குறைஞ்சிடுச்சி// நெஞ்சை நெகிழ செய்யும் வரிகள்..

    ReplyDelete
    Replies
    1. நெகிழ்ச்சிக்கு ஒருநாள் விடை கிடைக்கும்.மனிதன் மனமும் மாறும் மக்கள்துயர் தீரும்

      Delete
  3. மனதெல்லாம் மாறிபோச்சு
    மனிதநேயம் குறைஞ்சிடுச்சி..

    மாறட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தனியொருவன் சொல்லத்தான் முடியும்.மனிதநேயம் மக்களாய் பார்த்து திருந்த வேண்டும்

      Delete
  4. //உருப்படியாய் சேர்ந்து வாழும்
    உறவு மின்று செத்துடிச்சு//
    ஆம் ஐயா!உறவுகள் காகிதச் சங்கிலிகளாகி விட்டன!
    நன்று கவிதை

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் ஆனதும் பெத்தவங்களை விட்டுவிட்டு தனிக் குடித்தனம் போவதை யோசித்தாலே உறவுகள் மேம்படும்

      Delete
  5. கவிதை படிச்சி மனங்கலங்கிடுச்சி
    உலக நிலைமையும் விளங்கிடுச்சி
    சீ..சீ...இது என்ன வாழ்க்கைன்னு
    வேதனை நினைவுதான் எழுந்திடுச்சி.

    ReplyDelete
    Replies
    1. என் மனசும் கலங்கிடுச்சி உங்க வேதனையை கேட்டு

      Delete
  6. மழையப் பார்த்து ஏங்கிடுச்சு
    கண்ணி ரண்டும் பூத்திடுச்சி
    மேக மெல்லாம் ஓடிப்போச்சு
    மேனி யெல்லாம் எரிஞ்சிடுச்சி//

    மழை பெய்து . மனிதமனம் மாறி , மனிதநேயம் காத்து எல்லோரும் கூடி வாழும் காலம் வர வாழ்த்துவோம்.
    வாழ்த்துக்கள் கவிதைக்கு.

    ReplyDelete
    Replies
    1. மழைவந்தாலே மனிதமனமும் குளிரும் நிலமும் பசுமையாய் சிரிக்கும்
      வாழ்த்துக்கு நன்றிங்கம்மா

      Delete
  7. உணர்ச்சி யெல்லாம் மழுங்கிடுச்சி
    உண்மையன்பு தேய்ந்சுபோச்சு//

    உண்மைதாங்க ...கவிதை வரிகள் அத்தனையும் நடப்பு வாழ்வில்

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்தமைக்கும் உண்மையை சொன்னமைக்கும் நன்றிங்க

      Delete
  8. சிறப்பான சிந்தனைகள்
    புறப்பாயும் அம்புகளாய்
    உறைப்பாக உணரவைத்த
    விருப்பானகவி தந்தீர்!

    வாழ்த்துக்கள் சகோ!

    த ம.7

    ReplyDelete
    Replies
    1. பதிலுக்கு பா வடித்த பாவையே
      வயலுக்கு புல்போல யாம்
      வரிகளை எழுதியதை நீவிர்
      வாழ்த்தியமைக்கு நன்றி

      Delete
  9. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு நன்றிங்க சார்

      Delete
  10. உணர்ச்சி யெல்லாம் மழுங்கிடுச்சி
    உண்மையன்பு தேய்ந்சுபோச்சு
    உருப்படியாய் சேர்ந்து வாழும்
    உறவு மின்று செத்துடிச்சு//உண்மைதான் ... :(

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்தமைக்கு நன்றிங்க

      Delete
  11. நெகிழ்ந்து போனேன் கவிகண்டு...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே இன்று சுயநலவாதிகளும் சுரண்டல்காரர்களும் மிகையாகி விட்டதனால் வந்த வினை

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more