மலையில் சிவனைக் கண்டிடவே....
(நன்றி-கூகிள்)
மலையில் சிவனைக் கண்டிடவே
மனதில் அமைதிக் கிடைத்திடவே
துணையும் உறவும் மகிழ்ந்திடதே
தூரப் பயணம் செய்தனரே
காட்டில் மரங்களை வெட்டியதால்
கட்டடம் பலதும் கட்டியதால்
ஏட்டில் சொல்ல இயலாத
எண்ணில் அடங்கா உயிரிழப்பை
இத்தனை உயிர்கள் மடிந்ததை
இப்படி நடந்தது எச்செயலால்
கற்பனை கெட்டா உயிரிழப்பு
கண்டதும் மனது கொதிக்கிறதே
ஊருக்கும் உறவுக்கும் தெரியாது
உயிரைத் துறந்த நல்லோர்கள்
உடலைக் கூட காணாத
உண்மை நிலையை அறிவீரா
மக்கள் மனதைக் காயமாக்கும்
மடமையான இச்செயலால்
மனதும் இப்போ வலிக்கின்றதே
மழையோ அதையே சொல்கிறதே
இனியே அதனை போற்றிடுவோம்
செயற்க்கையாலே வரும் துயரை
சீக்கிரம் தடுத்து முறியடிப்போம்
மரங்கள் அருகில் வளர்த்திடுவோம்
மலைவளம் நன்றே காத்திடுவோம்
இயற்கை செய்யும் பேரிழப்பை
இனிமேலாவது தடுத்திடுவோம்
/// இயற்கை வளங்களை காத்திடுவோம்...
ReplyDeleteஇனியே அதனை போற்றிடுவோம்... //
சிறப்பான வரிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...
நிச்சயம் இயற்கையைப் போற்ற வேண்டும்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteநிகழ்வுகளைத் தொடர்ந்து
ReplyDeleteஅழிவின் ஆணிவேரைக கண்டு
பகிர்ந்த விதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்
வேர்கள் இல்லாததால் விழுந்தன கட்டிடங்கள்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteஇயற்கையை போற்றி பாதுகாக்க கற்றுக் கொண்டால் பல அழிவுகளை தடுக்கலாம்... நல்ல வரிகள்
ReplyDeleteஎல்லோரும் முயற்சித்தால் பேரிடர் இல்லாமல் வாழ்ந்திடலாம்
Deleteஇயற்கையை வெல்ல நினைப்பவர்களுக்கு சரியா பாடம் கற்றுக் கொடுத்து விட்டது. அதில் அநியாயமாய் அப்பாவிகள் பலரும் உயிர் இழக்க நேர்ந்தது தான் கொடுமை.
ReplyDeleteஅப்பாவிகளை அழித்தப் பாவம் அவர்களை சும்மா விடாது
Deleteஇயற்கையோடு இயைந்த வாழ்வே நல்லது
ReplyDeleteகிராமத்திற்கும் இப்போது மழை வரத்துக் குறைந்துவிட்டது.காரணம்மரங்களை வளர்க்காமல் இருந்த மரங்களை வெட்டியத்தால்
Deleteஇயற்கையின் விளைவை அற்புதமாக சொல்லி இருக்கிறீர்...
ReplyDeleteநன்றிங்க.
Deleteஇயற்க்கை வளங்களை காத்திடல் வேண்டும்...
ReplyDeleteஇயற்கையோடு இயைந்த வாழ்வே நல்லது...
உண்மைதான் .இயற்கையே பாதுகாப்பானது
Deleteஇயற்கையை தற்போது சிறிதும் மதிக்காமல் அழித்து வரும் மனிதர்களிடம் பொங்கிக்கொண்டிருந்த சீற்றத்தை முழு பலத்துடன் காண்பித்து விட்டது அதே இயற்கை!! எந்த தவறும் செய்யாத அப்பாவி மனிதர்கள் அழிய நேர்ந்தது தான் கொடுமை! மனதின் வேதனையை மிக அழகாகக் கவிதையாய் காண்பித்திருக்கிறீர்கள்!!
ReplyDeleteயாரோ செய்த தவறுக்கு இத்தனைபேர் மடிய வேண்டுமா?வருகைக்கு நன்றிங்க
Deleteஇயற்கை தந்த இனிமையை
ReplyDeleteஇளக்கமாய் நினைத்தல் தகுமோ?...
வலிதந்த நிகழ்வினைக் கவியில் வடித்தவிதம் சிறப்பு.
வாழ்த்துக்கள் சகோதரரே!!
த ம.7
செயற்கையான பிரச்சனைகளும் சிலருக்கு வருவதும் மனது வலிக்கிறது
Deleteஇயற்கையினை காப்போம்! இன்பமாய் இருப்போம்! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDeleteஇயற்கையை பகைத்தவன் இனி வாழ இடமில்லை
Deleteமனதை உருக்குகிறது...
ReplyDeleteஆமாங்க சார்.கண்முன்னே கணவனும் மனைவியும் பிர்ந்து கதறுகின்ற காட்சி நமக்கே பைத்தியம் பிடித்ததுபோல் இருக்கிறது
Deleteமரங்கள் அருகில் வளர்த்திடுவோம்
ReplyDeleteமலைவளம் நன்றே காத்திடுவோம்
இயற்கை செய்யும் பேரிழப்பை
இனிமேலாவது தடுத்திடுவோம்//
நன்றாக சொன்னீர்கள்.
இயற்கையை அழிக்காமல் வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எல்லாமே நம்மால்தான் நடக்கிறது.இவ்வளவு கட்டிடங்களைக் கட்ட அனுமதித்த அரசியல்வாதிகள்தான் காரணம்
Delete
ReplyDeleteவணக்கம்!
இயற்கை செழித்தல் இனிமை விளையும்!
உயிரினம் வாழும் உவந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருகைக்கு
Deleteநன்றிங்கையா
வலியையும் வருத்தத்தையும் கவிதையாகக் கொட்டிவிட்டீர்கள்..நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான்..மரங்களைக் காப்போம் /வளர்ப்போம் , மண் அரிப்பைத்தடுப்போம்,,உயிர் சேதத்தை நிறுத்துவோம்,,அனைவரும் உணர வேண்டும்..பகிர்விற்கு நன்றி கவியாழி அவர்களே!
ReplyDeleteஉங்கள்வருகைக்கும்கருத்துக்கும்நன்றி
Deleteபகிர்விற்கு நன்றி
ReplyDeleteஉங்கள்வருகைக்குநன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிழிப்பை உணர்த்தும் அழகியகவி.
ReplyDelete// இயற்கை வளங்களை காத்திடுவோம்...
இனியே அதனை போற்றிடுவோம்... //
எல்லோர் மனதிலும் விதைத்திடுவோம் எங்கும் மரங்கள் வளர்த்திடுவோம்
Delete