பணம்....பணம்...பணம்..
மக்கள் பலபேர் மடிவதற்கும்
மனதை வருத்திக் கொல்வதற்கும்
நிச்சயக் காரணம் பணமாமே
நித்தமும் கெடுப்பது இதுதானே
மனிதரில் சிலபேர் தவிப்பதற்கு
மனமே வருத்தி மாய்வதற்கு
மனிதம் தெரியாப் பணமாமே
மனிதனின் குணமும் கெடுதாமே
நாளும் நாளிதழ் பார்க்கின்றோம்
நல்லச் செய்திகள் இருந்தாலும்
வாழும் முறையில் மாற்றத்தால்
வருத்தித் தினமும் அழுகின்றோம்
தினமும் நாமே காண்கிறோம்
தெரிந்தும் மௌனம் காக்கிறோம்
குணமே இல்லாப் பணத்தாலே
குடும்பமே தற்கொலை செய்கிறதே
அவசர உலகில் அனைவருமே
அடிமை வாழ்வு வாழ்வதற்கும்
அக்கம் பக்கம் நடப்பதற்கும்
அடைக்கலம் கொடுப்பது பணமாமே
மனதை வருத்திக் கொல்வதற்கும்
நிச்சயக் காரணம் பணமாமே
நித்தமும் கெடுப்பது இதுதானே
மனிதரில் சிலபேர் தவிப்பதற்கு
மனமே வருத்தி மாய்வதற்கு
மனிதம் தெரியாப் பணமாமே
மனிதனின் குணமும் கெடுதாமே
நாளும் நாளிதழ் பார்க்கின்றோம்
நல்லச் செய்திகள் இருந்தாலும்
வாழும் முறையில் மாற்றத்தால்
வருத்தித் தினமும் அழுகின்றோம்
தினமும் நாமே காண்கிறோம்
தெரிந்தும் மௌனம் காக்கிறோம்
குணமே இல்லாப் பணத்தாலே
குடும்பமே தற்கொலை செய்கிறதே
அவசர உலகில் அனைவருமே
அடிமை வாழ்வு வாழ்வதற்கும்
அக்கம் பக்கம் நடப்பதற்கும்
அடைக்கலம் கொடுப்பது பணமாமே
அலைக்கழிக்கும் மாயை...
ReplyDeleteஉண்மை வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஐயா...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கயா
Deleteகாசு... பணம்... துட்டு... Money.. Money...
ReplyDeleteஎல்லாத்துக்கும் காரணம் இந்த பணம்தான் .....வருகைக்கு நன்றி
Deleteஅளவோடு இருந்தால் சக்தி கொடுக்கும்
ReplyDeleteஅளவைத் தாண்டினால் பித்து பிடிக்கும்
பணம் குறித்த படைப்பை மிகவும் ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
சரியாச்சொன்னீங்க பணம் அதிகமானால் பித்துபிடிக்கும்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteரமணி சார் சொல்வது போல் அளவோடு பணம் இருந்தால் அமிர்தமே. அதிகமானால் நாம் அதைக் காப்பாற்றுவது பெரும் பாடு தான்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றிங்கம்மா.தொடர்ந்து வாங்க
Deleteபணம் இருந்தாலும் பிரச்சனை தான் இல்லாது போனாலும் பிரச்சனை தான் .
ReplyDeleteஇயற்கையைப் பேணிப் பாதுகாத்தால் எல்லோரும் மகிழ்வாய் வாழலாம் .
இந்தக் காலம் மனதிற்கு வேதனையான காலமே .சிறப்பான படைப்பிற்கு
வாழ்த்துக்கள் சகோதரரே .
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோதரி
Deleteவாழும் முறையில் மாற்றத்தால் வருந்தி தினமும் அழுகின்றோம்! நிதர்சனமான வரிகள்! அருமை! நன்றி!
ReplyDeleteஎஸ்.சுரேஷ் நீங்களும் இதை வாழ்கையில் கவனமாய் பார்த்துகொள்ளுங்கள்
Deleteநல்ல கவிதை!
ReplyDeleteநன்றிங்க அய்யா
Deleteபணமோ என்றால் எல்லாவற்றிர்க்கும் உதவும் ஆனால் அளவுக்கு மீறினால் நிம்மதி பறி போகும்.
ReplyDeleteஅதிகப் பணம் ஆபத்தில் முடியும் என்பது உண்மைதான்
Deleteஉண்மை வரிகள் அய்யா. நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றிங்கய்யா
Deleteஅருமை. பணத்தினால் குணத்தை இழக்கிறோம்.
ReplyDeleteஉண்மைதான்,சிலர் குடும்பத்தையே இழக்கிறார்கள்
Deleteபணம் பற்றிய வரிகள் அருமை
ReplyDeleteஇனிய வாழ்த்து.
இதோ எனது வரிகளையும் வாசித்துப் பாருங்களேன்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/2011/01/12/200-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/
பணமா? குணமா? என்றால் இரண்டுமே தேவை !
ReplyDeleteஇரண்டும் வேண்டும் என்பது உண்மைதான் அய்யா
Deleteயதார்த்த வரிகள்...
ReplyDeleteநன்றிங்க கருண்.
Deleteஉண்மை கவிஞரே
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றிங்க அய்யா.தொடர்ந்து ஆதரவு தாங்க.மீண்டும் வாங்க
Delete