தினமும் பலபேர் மடிவதற்கு......
தினமும் பலபேர் மடிவதற்கு
பணமும் பகையும் காரணமா
குணமே இல்லா கோழையர்கள்
கொடுக்கும் தொல்லையின் வேதனையா
மனதும் வருந்த வேண்டுமா
மனிதமும் மறக்கத் தோனுமா
மக்கள் பலபேர் மடிவதினால்
மனிதனின் துயரேத் தீர்திடுமா
மனிதம் மறந்து போவோரே
மக்கள் கவலை மறந்தோரே
பணமே குறியாய் வாழ்வோரே
பணத்தை உணவாய் உண்பீரோ
மதமும் எங்கும் சொல்வதில்லை
மனதில் கவலை வளர்ப்பதற்கு
மக்களின் குறையை நீக்கிடவே
மாற்று வழிதான் இருக்கிறதே
கவலை மனதில் மறைவதற்கு
கணிதம் சொல்லும் விடையென்ன
அறிவியல் ஆயிரம் வளர்ந்தாலும்
அதற்கும் தீர்வு இருக்கிறதோ
தற்கொலை செய்யும் இழிந்தோரே
நற்செயல் இதுவென யாருரைத்தார்
தற்கொலை தண்டனை யாருக்கு
நிர்கதியாகிடும் உன் சொந்தகளுக்கு
பணமும் பகையும் காரணமா
குணமே இல்லா கோழையர்கள்
கொடுக்கும் தொல்லையின் வேதனையா
மனதும் வருந்த வேண்டுமா
மனிதமும் மறக்கத் தோனுமா
மக்கள் பலபேர் மடிவதினால்
மனிதனின் துயரேத் தீர்திடுமா
மனிதம் மறந்து போவோரே
மக்கள் கவலை மறந்தோரே
பணமே குறியாய் வாழ்வோரே
பணத்தை உணவாய் உண்பீரோ
மதமும் எங்கும் சொல்வதில்லை
மனதில் கவலை வளர்ப்பதற்கு
மக்களின் குறையை நீக்கிடவே
மாற்று வழிதான் இருக்கிறதே
கவலை மனதில் மறைவதற்கு
கணிதம் சொல்லும் விடையென்ன
அறிவியல் ஆயிரம் வளர்ந்தாலும்
அதற்கும் தீர்வு இருக்கிறதோ
தற்கொலை செய்யும் இழிந்தோரே
நற்செயல் இதுவென யாருரைத்தார்
தற்கொலை தண்டனை யாருக்கு
நிர்கதியாகிடும் உன் சொந்தகளுக்கு
இந்தக் கோழைத்தனம் - ஒரு வினாடி பைத்தியக்காரத்தனம்...
ReplyDeleteதவிர்க்க வேண்டும் என்பதை அருமையாக சொல்லி உள்ளார்கள் ஐயா...
தொடர வாழ்த்துக்கள்...
உங்களின் வரவு எனக்கு மகிழ்சியளிக்கிறது நன்றிங்க நண்பரே .உண்மையை உணர்ந்து சரியாய் சொல்லியுள்ளமைக்கு மீண்டும் நன்றிங்க நண்பரே
ReplyDelete//தற்கொலை தண்டனை யாருக்கு
ReplyDeleteநிர்கதியாகிடும் உன் சொந்தகளுக்கு// - நிமிட நேரத்தில் கோழையாய் முடிவெடுப்பவர்கள் ஒரு நிமிடம் நிதானித்து இதை யோசிக்க வேண்டும்.அவங்க கவலை அதோடு போய்விடாது. அவங்க சார்ந்தவங்களுக்கல்லவா தண்டனை...
குடும்பத்தையும் குழந்தைகளையும் பற்றி யோசிப்பவன் இவ்வாறான முடிவை எடுக்க மாட்டார்கள்
Deleteதற்கொலை செய்யும் இழிந்தோரே
ReplyDeleteநற்செயல் இதுவென யாருரைத்தார்
தற்கொலை தண்டனை யாருக்கு
நிர்கதியாகிடும் உன் சொந்தகளுக்கு//
சிந்திக்கவேண்டிய அருமையான கேள்வி
கேள்விகளும் பதிவுகளும்
தொடர வாழ்த்துக்கள்
கேள்வி கேட்பவன் தைரியசாலி அதனால் தவறான முடிவை எடுக்க மாட்டார்கள்.தற்கொலை கோலையின் செயலே
Deletetha.ma 4
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteஅருமை. சரியாகச் சொன்னீர்கள்!
ReplyDeleteதற்கொலை தன்னைமட்டுமல்ல கூட இருப்பவர்களையும் கொல்கிற கொலையும்தான்...
இப்படிச் சாகும்போது கூடஇருப்பவர்க்கு கேடுதான் செய்வார்கள்.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் சகோ!
த.ம.5
அவர்களின் தவறான முடிவால் குடும்பமே அவஸ்தை படவிருபதை எண்ணினால் இப்படி தவறான எண்ணம் மாறிவிடும்
Deleteதற்கொலை தண்டனை யாருக்கு
ReplyDeleteநிர்கதியாகிடும் உன் சொந்தகளுக்கு//
நன்றாக சொன்னீர்கள். ஒரு நிமிடத்தில் இவர்கள் இப்படி முடிவு எடுத்து விடுகிறார்கள். காலமெல்லாம் கஷ்டப்படும் உறவுகள், நெருங்கிய சொந்தங்கள் அவர்கள் படும் வேதனை, வாழ்வை புரட்டி போடும் நிஜங்களை உணராதவர்களை என்னவென்று சொல்வது!
சிந்திக்காத சின்ன புத்திகாரர்களின் முடிவே . காலமெல்லாம் பார்த்து படிக்கவைத்து அவர்களை கலங்கடிக்கும் முடிவு தவறானது
Deleteதற்கொலை செய்யவும் அசாத்தியத் துணிவு வேண்டும்.ஆனாலும் இருந்து சாதிக்க நிறையவே கடமைகள் இருக்கும்போது.வாழப்பயந்த அந்த முடிவு தேவையற்றதே !
ReplyDeleteசாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவன் வாழவே விரும்புவான்.கோழையாக மாட்டான்.உங்கள் வருகைக்கு நன்றி
Deleteதற்கொலை என்பது ஒரு வகையில் சுயநலமே. தன்னைச் சார்ந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தான்மட்டும் பிரச்சனையிலிருந்து தப்பித்தால் போதுமென்ற எண்ணமே தற்கொலைகளுக்குக் காரணம். அதை அருமையாக எடுத்துரைத்து வாழ்க்கையின் மீது பிடிப்பினை உண்டாக்கும் பாடலுக்குப் பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteஉண்மைதாங்க .தன்னலத்தின் உச்சமே தற்கொலைதான்.உங்கள் பாராட்டுக்கு நன்றி
Deleteதற்கொலை கோழைகள் செயல்!
ReplyDeleteகோழையின் செயலால் குடும்பமே நடுதெருவுக்கு வந்துவிடும்.நீங்கள் வந்தமைக்கு நன்றி அய்யா
Deleteநன்றாகச் சொன்னீர்கள் நிர்கதியாகும் சொந்தங்களுக்கு.
ReplyDeleteசொந்தமும் சுற்றமும் பற்றி கவலைபடாத கோழைகளின் செயல்
Deleteசொந்தங்களைப் பற்றி கவலைபடாதவர்களின் கோழைசெயல் உண்மைதான்
Deleteசிந்திக்க தூண்டும் ஆக்கம்
ReplyDeleteதற்கொலை சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று.
உண்மைதான் நண்பரே சமூகக் கேடுதான்.நீங்க வந்தமைக்கு நன்றி
Deleteதற்கொலைதான் பிரச்னைக்கு முடிவென்றால்
ReplyDeleteஇவ்வுலகில் எந்த ஒரு உயிரும் நிலைபெறாது...
பிரச்சனை இல்லாத உயிர்கள் ஏதும் இங்குண்டா ??
திண்ணிய உறுதியுடன் வாழ்வில் போராடி வெல்ல வேண்டும்...
தற்கொலை செய்து தனை மாய்த்து தனைச் சார்ந்தோரை வருத்துதல்
வெட்கக்கேடான செயல்...
தற்கொலை என்பது பிரச்சனைக்கு தீர்வாகாது
Deleteஅருமையா சொல்லியிருகீங்க பாவலரே....
ReplyDeleteநீங்கள் வந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றிங்க மகேந்திரன்
Deleteதற்கொலை செய்யும் இழிந்தோரே
ReplyDeleteநற்செயல் இதுவென யாருரைத்தார்
தற்கொலை தண்டனை யாருக்கு
நிர்கதியாகிடும் உன் சொந்தகளுக்கு//
உரைக்கட்டும் அருமையான கவிதை
தெரிய வேண்டியவர்கள் தெளிவு கிடைக்கட்டும்.வந்தமைக்கு நன்றி
Delete