தொந்தியைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்
எட்டுமாத கர்பிணிபோல்
எப்போதும் முந்தி நிற்கும்
கட்டுடம்பு மாறியே காட்சிதரும்
காற்றடைத்த வயிற்றினாலே
குனிந்து நின்று பாராது
கூணுடம்பு உள்ளோர்க்கு
ஏனிந்த வேதனை-எல்லாமே
உணவால் வந்த சோதனை
இளையோருமின்று இப்படித்தான்
எழில் துறந்து காணுகிறார்
தொழிலாகப் பலபேர்-அதை
துணையாக கொண்டுள்ளார்
எத்துணைப் பயிற்சிகள்
எப்போதும் செய்தாலும்
அழகைக் கெடுக்க -விரைந்து
ஆர்வமாய் முந்துகிறாய்
தொந்திகணபதியை துதித்து
தேங்காய் உடைக்கிறார்கள்
தேடிபோய் சிரித்து நின்றால்-என்
தொந்தியைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்
அடுத்தவர் பார்த்தாலும்
அதைப்பற்றிக் கவலையின்றி
கொடுக்கின்ற சத்ததால்- உன்னை
அசிங்கமாய் பார்க்கிறார்கள்
நண்பரே, வருந்தாதீர்! தங்களிடம் இல்லாதது மற்றவர்களிடம் இருந்தால் பொறாமைப்படுவது மனித இயல்பு அல்லவா?
ReplyDeleteஇது சும்மா தமாசுக்கு சொன்னது நண்பரே
Deleteசிரித்து விட்டு போகட்டும்... தானாக கூடியதை (!!!) குறைக்க எவ்வளவு சிரமம் என்பது அவர்களுக்கு தெரியவா போகிறது...?
ReplyDeleteஉண்மைதான் .உள்ளவங்களுக்குத்தானேகஷ்டம் தெரியும்.எப்படிக் குறைக்க முடியும்
Deleteதொந்திக்கும் கவிதையா?
ReplyDeleteஹா ....ஹா......
மன்னியுங்கள். சிரிப்பு வந்து விட்டது.
அதுக்குத்தானே எழுதினேன்.உங்க சிரிப்புக்கும் ரசிப்புக்கும் நன்றிங்கம்மா
Deleteஅழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் அது துரத்தி விடுகிறதே... முந்தி நிற்கும் தொந்தியால் எத்தனை பிரச்சனை? அத்தனையையும் அழகிய கவியாக்கி ரசிக்கவைத்துவிட்டீர்கள்! பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteஉண்மைதான் .அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கின்றன .நீங்க சொன்னதுபோல் பிரச்சனை அதிகம்தான்
Deleteஅழகிய கவிதை! அருமை! நினைக்க நினைக்கச் சிரிப்பாக வருகிறது. இனி இப்படித் தொந்தியுடன் யாரையாவது கண்டால் உங்கள் கவிதைதான் நினைவில் வரும்...:)
ReplyDeleteகவிவரிகளில் காட்சியைக் கச்சிதமாகக் காட்டிவிட்டீர்கள்! ரசித்தேன்.
வாழ்த்துக்கள் சகோதரரே!
சிரிப்பது நல்லதுதானே,சிரியுங்கள் சிரித்துக்கொண்டே இருங்கள்.எனக்கும் மகிழ்ச்சிதான் எல்லோரும் சிரிப்பதால் நல்லதுதானே
Deleteதொந்திக்கும் கவிதையா
ReplyDeleteவல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் தானே
வாழ்த்துக்கள்
உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க சார்.நீங்க கொடுத்த ஆதரவில்தான் இப்படி எழுத முடிகிறது
Deletetha.ma 6
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஉங்கள் கவிதை படிக்கும் போது என் மகன் பாடும் பாடல் நினைவுக்கு வந்து விட்டது.
என் மகன் எல்.கே.ஜி படிக்கும் போது பள்ளியில் ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்து இருந்தார்கள் பாடுவான், தொந்தி மாமா வந்தாராம், சறுக்கி சறுக்கி நடந்தாராம்,
நான் கூட பள்ளியில் கேட்டேன் அடுத்தவர் குறையை குறிப்பது போல் உள்ளதே எனறு !
அவர்கள் அது சும்மா வேடிக்கைதானே என்றார்கள்.
அப்போ உங்க பையனுக்கும் சொல்லி சிரித்தீர்களா .நீங்க சிரித்தமைக்கு நன்றிங்கம்மா.
Deleteதொந்திக்கவிதை அருமையாய் உள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteநானும் தொந்தியைப்பற்றி ஓர் கவிதை எழுதியிருந்தேன். அது நினைவுக்கு வந்தது.
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html உனக்கே உனக்காக [கவிதை]
உங்க கவிதையும் படித்தேன் ரசித்தேன்.நீங்க வந்தமைக்கு நன்றிங்க அய்யா
Deleteஎல்லாருக்கும் கிடைக்குமா இது?!ஹி..ஹி
ReplyDeleteநன்றிங்க குட்டன்.உங்களுக்கும் இனிமேல் கிடைக்கும்
Deleteரசித்தேன் வியந்தேன்
ReplyDeleteஇது சும்மா தமாசுக்கு.
ReplyDeleteபந்திக்கு முந்தினால் சிந்திக்க பிந்தினால் சந்திக்கு தொந்தி முந்தி நிந்திக்கும் .. சும்மா ! :)
ReplyDeleteஉண்மைதான் பந்தியில் எல்லாம் பார்த்தால்தொந்தி தானாகவே முந்தி நிற்கும்
Deleteகவிதை அருமை.. ஹ..ஹ...ஹா...
ReplyDeleteசிரிப்பு வந்தால் சிரித்துவிடுங்கள்
Deleteபத்துமாத கர்பிணி என்றுதான் நான் சொன்னேன் !அதில், இரண்டு மாதத்தைக் குறைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
ReplyDeleteபத்துமாதம் கழித்துப் பிள்ளைப் பெற்றோர் உண்டா அய்யா?
Deleteஹா ஹா நல்ல கவிதை...
ReplyDeleteமகிழ்ச்சிக்கு நன்றி
Deleteதொந்திக்கவிதை நல்ல கவிதை...
ReplyDeleteசகல நலங்களும், மகிழ்வும் நிறைய
இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Deleteஅருமையான கவிதை
ReplyDeleteபந்திக்கு முந்தி
எழுத்திருக்கப் பிந்தினால்
தொந்தியும் முந்தும்
வாழ்வும் சுருங்கும்
உண்மைதான் மருத்துவரைய்யா உடற்பயிற்சி அவசியமே
Deleteதொப்பையை பற்றி எழுதிய முதல் கவிஞர் நீங்கள்தான் கண்ணதாசன்! அருமை.
ReplyDeleteதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பாராட்டுக்கு மிக்க நன்றி.
Deleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Tamil puthaandu vaazhthukal :-)TM 7
ReplyDelete