தெய்வங்கள்

தெய்வங்கள்

இணையத்தால் இணைந்தோம் மகிழ்ந்தோம்-2

.

 இரண்டாவது நபராக திரு.துளசிதரன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது ஓ..மீசைக்கார நண்பரா என்று கேள்விகேட்டுவிட்டு அவரே தொடர்ந்து நிச்சயம் நான் உங்களைச் சந்திக்க வேண்டும்உங்களை எங்கு எப்படி எப்போது காண்பது என்று ஆசிரியருக்கே உரித்தான கேள்விகளால் மகிழ்வோடு கேட்டார்.நானும் திங்கட்கிழமை வந்து அன்றிரவே சென்னைத் திரும்ப இருக்கிறேன் என்றதும் ஏன் இன்னொருநாள் தள்ளிபோட முடியாதா என்று திரு.தேவதாஸ் அவர்களைப் போலவே கேட்டார்.


  நான் என் நிலையைச் சொல்லி அவசர வேலையாக வந்த காரணத்தினால் இப்போது முடியாது மற்றொருநாள் வருகிறேன் பிறகு பார்க்கலாமே என்றதும்  உடனே இல்லை இல்லை நண்பரே உங்களை நான் எப்படியும் பார்த்துவிட  வேண்டும் நான் பணி செய்யும் இடம் பாலக்காடு என்றும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிசெய்வதாகவும் இங்கிருந்து 180 கிலோ மீட்டர் தள்ளி எனது வீடு உள்ளதென்றும் திங்கள் வந்து வெள்ளியன்று வீடு திரும்புவேன் என்றும் சொல்லியதுடன் இன்றிரவு 10.30 மணிக்கு உங்களது தொடர் வண்டி பாலக்காடு வரும் அப்போது உங்களைச் சந்திக்க முடியுமா அல்லது தூங்கி விடுவீர்களா என்றார்."கரும்புதின்னக் கூலியா நண்பரை சந்திக்க சிரமமா" நிச்சயம் உங்களைச் சந்திக்கிறேன் என்றேன்.

சொன்னபடியே சரியாக பாலக்காடு தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்தார். நான் வண்டியை விட்டு இறங்குவதற்குள் கவியாழி கவியாழி என்று கைபேசியிலும் பேசிக்கொண்டே அங்குமிங்கும் என்னைத் தேடியது "காதலன் காதலியைத் தேடுவதுபோல "எண்ணக் காணவேண்டிய ஆவல் அவசரத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.அங்கு நடைமேடையில் என்னைக் கண்டதும் அவரது மகிழ்ச்சியை காண முடிந்தது முகமெல்லாம் புன்னகையோடு  தழுவிக் கொண்டார்.

உடனே இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் அங்கு நடைமேடையில் இருந்தவர்கள் வியக்கும் வண்ணம் இருந்த சந்திப்பு ஐந்து நிமிடம் மட்டுமே அதற்குள் எங்களது இனிமையான அன்பான உணர்வுபூர்வமான அன்பை பகிர்ந்தோம்.அதற்குள் வண்டிப் புறப்படவே எனதுகையைப் பிடித்து  வண்டியில் ஏறுவதற்கு உதவினார்.இருவரும் புன்னகையுடன் கையசைத்து நன்றியை தெரிவித்து கொண்டோம்.


அதிகாலையில் சந்தித்த திரு.தேவதாஸ் நண்பரும் முன்னிரவில் சந்தித்த திரு.துளசிதரன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு தமிழுக்கும் கூகுளுக்கும் தான் நன்றி சொல்லவேண்டும் .இருவருமே என்னை உபசரித்த விதம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்ததுடன் அவர்களும் மகிழ்ந்தது நான் முற்பிறவியில் இருவரும் உடன்பிறந்த சகோதரனாக இருந்திருப்பார்களோ என்றே எண்ணத் தோன்றியது மேலும் இன்னொருநாள் தங்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன்  விடைபெற்றேன்.

அடுத்தமுறை நமது இணைய நண்பர்களையும் அழைத்து வாருங்கள்  என்று இருவருமே சொல்லியது காதில் தேனாய் இருந்தது.நண்பர்களே நீங்களும் வெளியூர் சென்றால் ஆங்காங்கே பதிவுலக நண்பர்களைச் சந்தியுங்களேன் என்னைப் போலவே மகிழ்ச்சியாய் இருங்களேன். சந்திப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


(கவியாழி)

Comments

  1. நண்பர் துளசிதரன் அவர்களைச் சந்தித்த நிகழ்வு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது ஐயா. வலைதளம் ஏற்படுத்தித் தந்த உறவல்லவா.
    தொடரட்டும தங்கள் சந்திப்பு
    த.ம.1

    ReplyDelete
  2. ஆஹா சகோதரர் துளசிதரன் அவர்களையும் சந்தித்தீர்களா அருமை!
    நானே சந்தித்தது போல் மகிழ்ச்சியாய் உள்ளது. பலரை சந்திக்க ஆவலாகவும் உள்ளது.பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரர்
    நண்பர்களின் சந்திப்பால் விளைந்த மகிழ்ச்சி பதிவில் தெரிகிறது. அவசியம் இணைய நண்பர்கள் சந்தித்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே! நம்முடைய சந்திப்பைப் பற்றி குறிப்பிட்டு எழுதியது! நமது நட்பும், சந்திப்பும் இனியும் இனிதாய் தொடரட்டும்! நான் சென்னை வரும்போது நாமும், மற்ற பதிவர் அன்பர்களையும் சந்திக்கப் போகிறோம் என்பது மிக்க சந்தோஷத்தைத் தருகின்றது! நாம் எல்லோரும் ஒரே குடும்பம் என்ற ஒரு உணர்வு! பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. இனிமையான சந்திப்பு! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. முந்தைய பதிவும் மகிழ்ச்சி... இன்றும் அதே...

    இருவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    விரைவில் நாமும் அவரை இன்னொருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  7. தொடரட்டும் வலையுலக நட்பு....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  8. நட்பு தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. பதிவர் சந்திப்புகள் மகிழ்வைத் தரும் செய்தி

    ReplyDelete
  10. நண்பரே, ஒரு பத்தியில் "காதலன் காதலியைப் போல" என்கிறீர், இன்னொரு பத்தியில் "உடன்பிறவாத சகோதரர்" என்கிறீர். காதலி எப்படி ஐயா சகோதரனாக முடியும்? (2) துளசிதரன், தன் நெற்றியில் பொட்டுவைக்கும்போது சரியாக நடுவில் வைக்கும்படி ஆலோசனை கூறவும். படத்தில் உள்ள பொட்டு, இடதுபுறம் நகர்ந்துள்ளது.

    ReplyDelete
  11. துளசிதரன் தன் பின்னூட்டத்தில் சரியாகச் சொன்னார்! நாம் எல்லாரும் 'ஒரு குடும்பம்' போல்- என்று. 'அந்த' ஒரு குடும்பம் போல் என்கிறாரோ? (ஏனெனில் நம்மில் சிலர் அழகிரி மாதிரி, சிலர் கனிமொழி மாதிரி, சிலர் ஸ்டாலின் மாதிரி, சிலர் கலைஞர் மாதிரி அல்லவா இருக்கிறோம்!)

    ReplyDelete
  12. பதிவர்களைச் சந்திப்பதைத் தாங்கள் பதிவது மிக சிறப்பாக உள்ளது. உங்கள் மூலமாக எங்களுக்கு அறிமுகமும் கிடைக்கிறது. நன்றி.

    ReplyDelete
  13. இணைய நட்புக்களின் சந்திப்பு குறித்து ப்கிர்வு மிகவும் ரசித்தேன்!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்