தெய்வங்கள்

தெய்வங்கள்

மழையே நீயும் மீண்டும் வா!வா!!

மழையே நீயும் வா வா
மகிழ்ச்சி எமக்குத் தா தா
மரங்கள் வளர  செடிகள் வளர
மீண்டும் மீண்டும் தொடர்ந்து வா

பிழையே செய்யா உயிரினமும்
பிழைக்க வைக்கத் தொடர்ந்து  வா
பிழையாய் வெட்டிய  மரத்தை
பிழைக்க வைக்க நீயும் வா

புயலாய் சூழ்ந்தும் ஓடிவா
புதிதாய் உணர்வைக்  கொடுக்க வா
பூச்சியும் பறவையும் பறக்கவும்
புல்லும் பூண்டும் முளைக்கவும்  வா

நாட்டு மக்கள் மனங்குளிர வா
நல்ல காற்றுமே கிடைக்க
நாகரீகம் என்ற பெயரில்
நாசமாக்கும் குளிர்விப்பான் தவிர்க்க வா

கடனே கேட்கா  காற்றை
கண்குளிர கொடுக்க  வா
காய்ந்த நிலத்தைப் பசுமையாக்க
கழனிப் பயிர்கள் செழிக்க வா

நாட்டு உழவன் மகிழ வா
நாளும் உணவு கிடைக்க வா
நீயும் உடனே விரைந்து வா
நித்தமும் மக்கள்  மகிழ வா


(கவியாழி)

Comments

  1. வணக்கம்
    ஐயா
    மழை பற்றிய கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மழை வேண்டி கவிதை.... நன்று....

    த.ம. 2

    ReplyDelete
  3. எங்கள் [ கலை ] தாகம் தீர்க்கவும் வா வா !
    நன்று !

    ReplyDelete
  4. விரைவில் வரட்டும் ஐயா...

    ReplyDelete
  5. கவிதையை நீங்கள் கமா போட்டு முடிக்காவிட்டாலும் ,நான் தம 4 போட்டுவிட்டேன் !

    ReplyDelete
  6. நீரின்றி அமையாது உலகு. மழையை அழைக்கும் கவிஞரோடு
    நானும் சேர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  7. மழையைப்போல அழகிய கவிதை!

    ReplyDelete
  8. காணாமல் போய் கொண்டிருக்கும் மழை விரைவில் கருணை மழை பொழியட்டும்! அருமை!

    ReplyDelete
  9. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மழை வேண்டி
    தங்கள் கவிமழை கண்டு
    மகிழ்ந்தேன்!
    மழை வேண்டும்
    நாமும்
    நம்நாடும் மேம்படவே!

    ReplyDelete
  11. கொஞ்ச நாளாகக் காணோமே என்று பார்த்தேன். வந்துவிட்டீர்கள். விடாமல் எழுதுங்கள். உங்கள் இரண்டாவது புத்தகம் எப்போது வரப்போகிறது? யார் பதிப்பாளர்?

    ReplyDelete
  12. கண்ணதாசன் சார்! மிக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். சிறுவர்களுக்கு பாடமாக சேர்க்கலாம்.

    ReplyDelete
  13. இன்றைய சூழலில் அனைவரின் வேண்டுதலும்
    நிச்சயம் இதுதானே
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்