தெய்வங்கள்

தெய்வங்கள்

கான்க்ரீட் காற்றும் காடுகளும் மரங்களும்

         தென்றல் காற்று ,மழைக் காற்று ,சோலைக் காற்று ,வாடைக் காற்று என பலவாறு  அழைத்தேப் பழக்கப்பட்ட நமக்கு கான்க்ரீட் காற்றுப் பற்றியும் தெரிந்திருக்கும்.அவ்வாறு தெரியாத நண்பர்களுக்காக இந்தப் பதிவைப் பகிர்வதற்கு விரும்புகிறேன்.

         தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் காட்டிலும் குடிசையிலும் கொட்டடியிலும் சாலை ஓரத்திலும் குறுகியக் குடிலையே வசிப்படமாகக் கொண்ட அடித்தட்டு மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டினால் சிறிதேனும் சேமிப்பை வைத்துக் கொண்டு கடன் வாங்கியாவது ஒரு சிறிய தார்சுக் கட்டிடத்தை  கட்டி  வசிக்கும் நிலையில் எல்லோருமே ஆசைப் படுகிறார்கள்.

        கட்டுமான நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு அழகிய சிறந்த பாதுகாப்பான காற்றோட்டமான ,வெளிச்சமான வீடுகளை தொகுப்பு வீடுகளாய்,அடுக்குமாடிக் குடியிருப்புகளாய் தனி பங்களாக்களாய்  கட்டி  அவரவர் விரும்பும் வண்ணம் கண்ணைக்கவரும் வகையில் விலையைக் கூட்டியும் கட்டிக் கொடுக்கிறார்கள்.

        மேலும் கூட்டுக் குடும்பமுறை நடைமுறையில் தவிர்க்கப் படுவதாலும் ,வேலைக்காக சொந்த ஊரை விட்டு தனிக்குடித்தனமாய் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுவதனால் வீட்டின் பயன்பாடு அதிகரித்துள்ளது.எனவே இன்று காடுகள் அழிக்கப்பட்டு விவசாயம் தவிர்க்கப் பட்டு விளைநிலங்களும் வீட்டுமனைகளாய் அடுக்குமாடிக் குடியிருப்புகளாய் மாறியுள்ளது.

        எனவேதான் இன்று விவசாய நிலங்களெல்லாம் கான்க்ரீட் காடுகளாய் மாறியுள்ளது அதனால் காற்றும் மாசுபட்டு கான்க்ரீட் காற்று அதாவது சூடன காற்று மட்டுமே அனேக இடங்களில் வீசுகிறது.அதனால்தான் பருவநிலை மாறி மழைபெய்வதும் குறைந்துள்ளது.இயற்கைக் காற்று தவிர்த்து இன்னல்தரும் செயற்கை காற்றினால் கண்ட பலன் நோயும் நொடியுமே.

           மரங்களை வெட்டும்போதே ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் வளர்த்தால் இனி வரும் சந்ததிகளாவது  நல்ல காற்றை சுவாசித்து வாழ நாமேன் முயற்சி செய்யக் கூடாது? நண்பர்களே சிந்தியுங்கள் இனியாவது  முயற்சித்தால் நிறைய மரங்களை வளர்க்க முடியும் மரங்கள் வளர்த்தால் மழைகிடைக்கும்  மீண்டும் தென்றல் காற்றும் வீசும் .முடிவு நம்கையில் சிந்தியுங்கள்

Comments

  1. // மரங்களை வெட்டும்போதே ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் வளர்த்தால் //

    இந்த எண்ணம் வந்து உடனே செயல்படுத்த வேண்டும்...

    ReplyDelete
  2. இனி வரும் சந்ததிகளாவது நல்ல காற்றை சுவாசித்து வாழ நாமேன் முயற்சி செய்யக் கூடாது? நண்பர்களே சிந்தியுங்கள் இனியாவது முயற்சித்தால் நிறைய மரங்களை வளர்க்க முடியும் மரங்கள் வளர்த்தால் மழைகிடைக்கும் மீண்டும் தென்றல் காற்றும் வீசும் .முடிவு நம்கையில் சிந்தியுங்கள்//

    உண்மை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஒவ்வொருவரும் வீட்டினில் மரங்களை வளர்க்க முன் வர வேண்டும் ஐயா
    விழிப்புணர்வுப் பதிவு அருமை
    நன்றி ஐயா

    ReplyDelete
  4. சென்னை ஏற்கனவே கான்க்ரீட் Jungle ஆக மாறிவிட்டது. இப்போது புறநகர்ப் பகுதிகளும் அவ்வாறே மாற்றம் அடைந்து வருவது தவிர்க்க இயலாத நிலையில் உள்ளது

    ReplyDelete
  5. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! என் கிராமமும் விளை நிலங்களை விலை நிலமாக்கி வருவது வேதனை அளிக்கிறது!

    ReplyDelete
  6. மிக மிக நல்லதொரு பகிர்வு! நம் நளைய தலைமுறைக்கு பூமி, குறிப்பாக நம் நாடு பாலைவனமாகிவிடுமோ என்ற ஒரு பயம் இருக்கத்தான் செய்கின்றது! நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒரு மரம் வெட்டும்போது 2 மரங்கள் நடுவது மிக நல்ல ஒரு எண்ணம்! செய்தால் பூமித்தாய் மிகவும் மகிழ்வாள்!

    நாம் பூமித்தாயிடமிருந்து பல தொச்சுக்களைப் பெற்று அழிப்பதற்குச் செய்யும் கைமாறாகக் கூட இதைக் கருதலாம்!

    நல்ல பகிர்வு!

    த.ம.

    ReplyDelete
  7. சிறப்பான தொரு விழிப்புணர்வுப் பகிர்வு உங்களுக்கு என் மனமார்ந்த
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா த .ம .7

    ReplyDelete
  8. மரங்களைப் பற்றி எழுதினீர்கள். மர மண்டைகளுக்கு உறைக்குமா?

    ReplyDelete
  9. சிறந்த விளிப்புணர்வைத் தரும் பகிர்வு

    ReplyDelete
  10. அருமையான விழிப்புணவுப்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்