தெய்வங்கள்

தெய்வங்கள்

இந்த நிலைக்குக் காரணம் யார்?

வனமும் வனப்பையும் இழந்ததால்
வனத்தின் நிறமும் மாறுமாம்
வானமும் இயல்பை மாற்றியே
வானத்தின் தன்மையும் கூடுமாம்

எல்லா இடமும் வெளிச்சமாய்
எங்கும்  வெய்யில் எரிக்குமாம்
ஏரிக் குளமும் வற்றுமாம்
எரிச்சல் அதிகம் இருக்குமாம்

பொல்லா நிலையால் பலபேரோ
பொசுங்கி மடிந்தே விழுவாராம்
பொழுதும் கழிந்தால் மட்டுமே
பொறுத்தே வெளியில் வருவாராம்

இந்த நிலைக்குக் காரணம்
இழந்த மரங்கள் அதிகமாம்
இதையே நாமும் அறிந்தேனும்
இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

மழையும் நன்றாய் பெய்யுமாம்
மரங்கள் அடர்ந்து வளருமாம்
மக்கள் துயரம் நீங்கியே
மக்கள் மனமும் குளிருமாம்

வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய்
வருடம் முழுக்க பெய்யுமாம்
வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய்
வானத்தைப் பெருக்கிக் காக்கணும்


=====கவியாழி=====


Comments

  1. மரம் வளர்ப்போம் மகிழ்ச்சி காண்போம்
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எழுதுவது குறைந்துவிட்டதே ஏன்?
    வெயிலின் கொட்டுமை மழையை எதிர்பார்த்து கவி எழுத வைத்துவிட்டது.

    ReplyDelete
  3. ஒவ்வொருவரும் உணர வேண்டிய கருத்துக்கள் ஐயா...

    ReplyDelete
  4. நல்ல விழிப்புணர்வூட்டும் பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

  5. கவிதை நன்று!

    ReplyDelete
  6. மரம் வளர்ப்போம்.... மகிழ்ச்சியாய் இருப்போம்....

    ReplyDelete
  7. "வனமும் வனப்பையும் இழந்ததால்
    வனத்தின் நிறமும் மாறுமாம்
    வானமும் இயல்பை மாற்றியே
    வானத்தின் தன்மையும் கூடுமாம்" என
    நம்மாளுகள் காடழிக்க
    வானம் கறுக்காது மழை வராது
    நாடு சுடு காடாகுமே!

    ReplyDelete

  8. நல்லதொரு கவிதை கண்டேன் -அதை
    என் மனதுள் புதைத்துக்கொண்டேன்
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  9. மரம் வளர்ப்போம். மானுடம் காப்போம். பயனுள்ள பலருக்குப் பாடம் தரும் கவிதை. நன்றி.

    ReplyDelete
  10. மரம் மனிதனின் நண்பன் என்று சொல்லும் சூழல் கவிதை அக்கறை அருமை..


    http://www.malartharu.org/2014/05/prabhakaran-leader.html

    ReplyDelete
  11. மனிதனின் சுயநலம் அல்லாது வேறு என்ன?!! மரங்களும் காடுகளும் அழிந்து போவதற்கு!

    அருமையான கவிதை! கவியாழி!

    ReplyDelete
  12. நண்பரே ,நலமா ?
    ஜோக்காளி நீங்க போற போக்கைப் பார்த்தால் சீக்கிரம் முதலிடத்தில் வந்து விடுவீர்கள் என்று ,அன்று நீங்கள் கூறியது இன்று நிறைவேறிவிட்டது நண்பரே ,உங்களுக்கு என் நன்றி >>காண்க ...http://www.jokkaali.in/2014/07/blog-post_8.html

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்