தெய்வங்கள்

தெய்வங்கள்

புருசனையே காவல் வைத்து.....

தண்டசோறு தின்னாலும் புருஷன்
தன்னருகே வேண்டுமென்றும்
தன்குடும்பம்பிள்ளையோடு
தானும் வாழ்க்கை வாழ வேண்டி

ரெண்டுவேளைக் கோவிலுக்கும்
ராப்பகலாய் வேலை செய்தும்
கண்டவரும் மெச்சும்படியும்
கண்கலங்கா வைத்திருந்து

பெண்டுபிள்ளை இந்த காலத்தில்
பத்தினியாய் வேலைசெய்து
பிள்ளைகளைக் படிக்க வைத்து
புருசனையே காவல் வைத்து

கண்டதையும் திண்ணாமல் வீட்டில்
காத்திருக்கும் வீட்டுக்காரன் பிள்ளைக்குமாய்
சொத்துபத்து சேர்த்து வைத்து
சொன்னபடி கடனைக் கட்டியே

உண்ண மறுத்தாலும் தொடர்ந்து உழைத்து
உறங்க மறந்தாலும் குடும்ப நலனாய்
எண்ணம் முழுதும் கணவன் வாழ
எல்லா கோவிலுக்கும் செல்வது முறையா


(கவியாழி)


Comments

  1. வீட்டில் வாழும் தெய்வம்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. இப்படியான இல்லாளை
    எப்படியும்
    கடவுள் எனலாம்
    இப்படியான இல்லாளுக்குப் பணியாத
    குடும்பத் தலைவனை
    மிருகம் எனலாம்
    வாழ்க்கை வண்டிலை இழுக்க
    கணவன், மனைவி இருவரும்
    இணைய வேண்டுமே!

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரா இயல்புநிலைக் கவிதை கண்டு ரசித்தேன் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. வணக்கம்
    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. இதுதானே யாதார்த்த வாழ்க்கையில் இருக்கும் இல்லாளின் வாழ்க்கை நிலை! நம் நாட்டில்!

    ReplyDelete
  6. எதார்த்த உண்மை..

    ReplyDelete

  7. தாயுக்குப் பின் தாரமல்லவா!!? அதுதான்!

    ReplyDelete
  8. உண்மையான உண்மை.
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  9. எதார்த்தம் சொல்லும் கவிதை.

    ReplyDelete
  10. இயலாமை வேறு, புஸ்ட்டி இருந்தும் எருமையாய் கிடப்பது இழிவு ஊருக்காக வாழ்வது கொடுமை பெண்ணே உனக்காக நீ வாழந்து செல் உணராதவன் உணர்வதற்கு ...

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்