சித்திரை மகளே வருக.........
சித்திரை மகளே வருக
சீர்மிகு வாழ்வைத் தருக
சீரிய பணிகள் செய்தே
சிறப்புற ஆசியும் தருக
கற்பனை செய்யும் அறிவை
காலமும் எனக்குத் தருக
கற்றதில் உள்ள குறையை
கற்கத் தெளிவைத் தருக
அற்ப மனித பிறப்பில்
அன்பாய் நாளும் இருக்க
அப்பன் ஆத்தா ஆசிரியராய்
அறிவை இன்னும் தருக
உலகில் உள்ள உயிர்கள்
உயர்வாய் என்றும் இருக்க
உழவன் வாழ்வை சிறக்க
உடனே மழையைத் தருக
எத்தகு பணியும் எளிதில்
ஏற்றம் கிடைக்கச் செய்து
எளிமை வாழ்வை வாழ
என்னுடன் துணையாய் வருக
நேசமும் நட்பும் சூழ்ந்தே
நிறையாய் வாழ்க்கை வாழ
நித்திரை நாளும் கிடைத்து
நிம்மதி மனதில் தருக
(கவியாழி)
சீர்மிகு வாழ்வைத் தருக
சீரிய பணிகள் செய்தே
சிறப்புற ஆசியும் தருக
கற்பனை செய்யும் அறிவை
காலமும் எனக்குத் தருக
கற்றதில் உள்ள குறையை
கற்கத் தெளிவைத் தருக
அற்ப மனித பிறப்பில்
அன்பாய் நாளும் இருக்க
அப்பன் ஆத்தா ஆசிரியராய்
அறிவை இன்னும் தருக
உலகில் உள்ள உயிர்கள்
உயர்வாய் என்றும் இருக்க
உழவன் வாழ்வை சிறக்க
உடனே மழையைத் தருக
எத்தகு பணியும் எளிதில்
ஏற்றம் கிடைக்கச் செய்து
எளிமை வாழ்வை வாழ
என்னுடன் துணையாய் வருக
நேசமும் நட்பும் சூழ்ந்தே
நிறையாய் வாழ்க்கை வாழ
நித்திரை நாளும் கிடைத்து
நிம்மதி மனதில் தருக
தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நண்பரே!
ReplyDeleteசந்திக்கக் காத்திருக்கிறோம்!
கவிஞருக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே! (அது சரி, தமிழ் மணத்தில் ஓட்டுப் போடப் போனால், 'உங்கள் ஓட்டு ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது' என்று வருகிறதே! அவர்களும் திராவிடக் கட்சிகளின் கள்ள வாக்களிக்கும் முறையைப் பின்பற்றுகிறார்களோ?)
ReplyDeleteபுத்தாண்டுக்கு சிறப்பான வரவேற்பை அளித்துள்ள தங்களது கவிதை.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteசித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteசித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeletetha.ma.5
ReplyDeleteவணக்கம் உங்களுக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் சகோதரா .
ReplyDeleteதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteகவியால் வாழ்த்துகள் தந்தமைக்கு நன்றி. தஙகளுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அருமை! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDelete
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
tha.ma 9
ReplyDeletetha.ma 9
ReplyDeleteசித்திரை மகள் நல் அறிவையும் சீர்மிகு வாழ்வையும் தந்து வளமுடன் காத்திட இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDelete