Monday, 10 November 2014

அய்யா புதுவை எழில் நிலவன் (புலவர்.சீனு.ராமச்சந்திரன்
அய்யா புதுவை எழில்நிலவன் (எ) சீனு.ராமச்சந்திரன்
********

புதுவை தந்த பாரதிபோல் 
புரட்சிப் பாரதி தாசனைப்போல் 
இவரும் தமிழைப் படித்தறிந்து-தவறாய் 
இமியின் அளவும் வாராமல் 
அகவை எழுபது வயதிலுமே 
அனைவரும் மெச்சும் வல்லவராய் 
அங்குமிங்கும் எவ்விடமும்-தமிழை 
அழியா வண்ணம் காத்திடவே 

சிலம்புச் செல்வர் அடிதொற்றி 
சிறந்தே தமிழை மெருகூட்டி 
தினமும் தமிழே உயிர்மூச்சாய்-எல்லா 
திசையும் சென்று பாடுகிறார் 
கவிதைக் கதைகள் நாடகமே 
காவியம் சொல்லும் நடிகராக 
இளமைக் காலம் முதற்கொண்டு-தமிழை 
இன்றும் விரும்பிக் காதலித்தும் 

பலரைப் போற்றிப் பாவடித்தே
பழைய நினைவை மறக்காமல் 
புத்தகம் வடிவாய் உருவேற்றி-நல்ல 
புதிய சரித்திரம் படைத்துவிட்டார் 
இளைஞர் பலரும் விளையாட 
இவரோ விரும்பியது தமிழைத்தான் 
இன்றும் அன்றுபோல் இளைஞராக 
இனிதே தமிழை  உயிர்மூச்சாய் 

கடுகின் அளவும் குறைவின்றி 
கருத்துப் பிழைகள் நிகழாமல் 
விருத்தம் ஓசை சந்தத்துடன்-கவியை 
விரைந்தே மகிழ்ந்துப் பாடுகிறார் 
அய்யா இன்றும் ஏக்கமுடன் 
அழியாத் தமிழை விருப்பமுடன் 
அனைத்துப் புதிய படைப்புகளை-தினமும் 
ஆழ்ந்தே படித்து வருகின்றார் 

தமிழேத் தினமும் உயிர்மூச்சாய் 
தினமும் புதிதாய் படித்தறிந்து 
அனைவரும் உணர வானொலியில்-இன்றும் 
அழகாய் பாடி தொடருவதால் 
சான்றோர் நல்லோர் அறிஞர்களும் 
சான்றாய் தந்த பட்டங்களும் 
நீண்டே செல்லும் தொடராக-மலைப்பாய் 
நினைத்தே மகிழ்ந்தேன் உளமாற.

(கவியாழி கண்ணதாசன்)

31 comments:

 1. கவி மூலம் ஒரு நல்ல கவிஞரை
  அற்புதமாக அறிமுகம் செய்த விதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

   Delete
 2. என் இனிய நண்பர், உடன் படித்த கல்லூரித் தோழர், புதுவை எழில் நிலவன் அவர்களைப் பற்றிய அறிமுகம் மிகவும் நன்று! அவருக்கும் உமக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அறிமுகம் செய்துவைத்த தங்களுக்கும் நன்றி அய்ய

   Delete
 3. ஒரு கவிஞனால் கவிதையை மட்டுமல்ல தன்னைப் போன்ற இன்னொரு கவிஞனையும் உருவாக்கமுடியும் என்பதாய் இருக்கிறதே....:)

  ReplyDelete
 4. வணக்கம் !

  வாழ்த்துக்கள் சகோதரா ஒரு சிறந்த கவிஞரைப் போற்றிப் பாடிய
  கவிதையும் இங்கே சிறப்பாக மின்னுகிறது !தொடரட்டும் தங்கள்
  பணி .

  ReplyDelete
 5. வணக்கம்

  எழுதிய வரிகள் மிக அருமையாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. வாழ்த்துக் கவிதை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 7. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் கவி கண்டு
  மகிழ்ந்தேன் ஐயா
  மதுரையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன்
  ஆனாலும் இயலாமல் போய்விட்டது
  அடுத்த பதிவர் சந்திப்பிற்கு அவசியம் வாருங்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. மதுரையில் சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன். அடுத் த சந்திப்பில் நிச்சயம் கலந்துக்குவேன்

   Delete

 8. சிறந்த பகிர்வு
  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  ReplyDelete
 9. சிறப்பான கவிஞருக்கு கவி மாலை...
  அருமை ஐயா...

  ReplyDelete
 10. சிறப்பான கவிதை...

  ஐயாவிற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. தங்களின் கவிதை நடையில் ஒரு பெருமகனாரை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

   Delete
 12. அய்யா எனது கவிதைப் பின்னூட்டம் என்னாயிற்று?
  வரலயா? இணையச் சிக்கல் இடம் தரலயா?

  ReplyDelete
  Replies
  1. அய்யா பற்றிய உங்கள் அதிவேக ஆர்வத்தால் முந்தைய பதிவில் இருக்கிறது

   Delete
 13. அய்யா, இட்ட பின்னூட்டத்தை எங்கே காணவில்லையே என்று தேடிப்போனால், முந்திய பதிவில் போய் உட்சார்ந்திருக்கிறது.
  (முன்னரே அடித்து, மினவெட்டுக்காரணமாக அனுப்ப முடியாமல், இணைப்புக் கிடைத்தவுட்ன போன பதிவில் போய் இட்டுவிட்டேன் போல..)

  கவிதை மூலம் அறிமுகமா? - மிக
  .........கனகச் சிதமாய்த் தரும்கவியே!
  கவியாழி யாரைக் காணலையே - எனக்
  ........கணித்தமிழ் உலகம் கேட்டதையா!
  ------------------------------------------------
  எழில்நிலவர்பணி உலகறியும் - அதை
  .......எடுத்துச் சொன்ன விதம்அழகு!
  அவர்தம் நூல்களின் பட்டியலை -இதில்
  ......அடுக்கி இணைத்தால் பயன்படுமே?

  ReplyDelete
  Replies
  1. அய்யா சென்னை திரும்பிச் செல்ல தொடர்வண்டி முன்பதிவு உறுதியாகாத காரணத்தால்தான் மதுரை வர இயலவில்லை.

   அய்யா எழில்நிலவன் பற்றி இப்போதுதான் அறிந்தேன் இனி இன்னும் சிறப்பாகத் அய்யா பற்றிய தகவல்கள் தொடரும்

   Delete
 14. நல்ல ஒரு கவிஞரை கவிதையாலேயே பாடி அறிமுகப் படுத்திய விதம் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு நன்றி

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்